இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 15, 2026

பாடல்கள்

அலைபாயுதே, கண்டுகொண்டேன், சில்லுனு ஒரு காதல், மின்னலே, காக்க காக்க, பையா, ஹே ராம், பிதாமகன் போன்ற படங்களின் அனைத்து பாடல்களையும் அவை வெளிவந்த நேரத்தில் இசைதட்டு மூலமாகவோ அல்லது பதிவிறக்கம் செய்தோ மீண்டும் மீண்டும் ரசித்து கேட்டது ஞாபகம் இருக்கிறது. இப்பொழுது வரும் சினிமாக்களில் இதுபோன்ற ரசித்து கேட்கக்கூடிய பாடல்கள் அத்திபூத்தாற் போல் தான் வருகின்றன. சமீபத்தில் ரசித்த பாடல் என்று ஏதேனும் நீங்கள் என்னிடம் கேட்டால் பதிலில்லை. அல்லது மிகவும் வருந்தி யோசித்து ஒரு பாடலை கூற வேண்டிதிருக்கிறது. 



நீங்களும் யோசித்து பாருங்களேன். தற்போது வெளிவரும் பாடல்கள் ரசனை இல்லாமல் அமைக்கப்படுகிறதா என்று யோசித்தால் அதுவும் இல்லை. ஜென் z கிட்ஸ்கள் அதை கேட்கவும் முனுமுனுக்கவும் செய்கிறார்கள். வயதாகிவிட்டது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது மாற்றத்தை சுவீகரிக்க என் மனது தடுமாறலாம். ஒரு வேளை, தோளில் எந்த பாரமும் இல்லாது பாடல்களை கேட்டதினால் தான் அப்பொழுது ரசிக்க முடிந்ததா? என்றால் பிறக்கும் முன் இசையமைத்த ராஜாவின் பாடல்கள் ஒரு தெரப்பியாகவே இருப்பது இன்னும் அதிசயம். 

 #Ilayaraja #arrahman #yuvanshankarraja

புதன், ஜூன் 18, 2025

ஆகாய கங்கை


மலேசியா வாசுதேவனின் மற்றுமொரு மகுடம் இந்த ‘ஆகாய கங்கை’ பாடல். மத்யமாவதி ராகம்.
மத்யமாவதி ராகத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் எந்தவொரு இசை கச்சேரியின் முடிவிலும் மத்யமாவதி பாடல் தான் இறுதியாக பாடப்படும் பாடலாக இருக்கும். வான் வருவான்’, ‘சந்திரனை தொட்டது யார்’, ‘தைய்ய தைய்ய தையா தையா’, ‘நீ தானே எந்தன் பொன் வசந்தம்’, ‘வனமெல்லாம் ஷெண்பகப்பூ’ போன்ற பாடல்கள் மத்யமாவதி. அவ்வளவு ஏன்? ஆஸ்கர் வாங்கிய ‘நாட்டு நாட்டு’ பாடலும் இந்த ராகம் தான்.
இப்பொழுது ஆகாய கங்கைக்கு வருவோம். இந்த ரொமான்டிக் பாடலை மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி பாடியிருப்பர். ஒரு சில எண்ணங்கள்.
1. பாடலில் வரும் இடையிசைக்கே தனி விவாதம் வைத்துக்கொள்ளலாம். ராகதேவனின் ஆசீர்வாதங்கள் அவை. முதல் இடையிசையில் ட்ரம்ஸ், கீபோர்ட், புல்லாங்குழல் மற்றும் வயலின். இரண்டாம் இடையிசையில் வாத்தியங்களுடன் கோரஸ். அதுவும் இரண்டாம் இடையிசையின் வயலின் பிட்டை என்னவென்று சொல்லுவது. மென்சோகத்துடன் அப்படியே நெஞ்சை பிழிந்து விடும் ஒரு இசை. கேட்டுப்பாருங்கள்.
2. முதல் சரணம் மலேசியா வாசுதேவனுடையது.
காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே
மேள தாளம்..ஓஓஒஒ
காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே
மேள தாளம்..ஆ ஆ ஆ ஆ
காலை வேளை பாடும் பூபாளம்
மன்னா இனி... உன் தோளிலே...
படரும் கொடி நானே
பருவப் பூ தானே
பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ…
இதில் ‘காலை வேளை பாடும் பூபாளம்’ என்பதை கிட்டதட்ட் ஹை பிட்ச்சில் மலேசியா வாசுதேவன் முடிக்கிறார். அதற்கு அடுத்த வரிகள் இன்னும் இரண்டு கட்டை மேலே. உடனே மூச்சுவாங்கி அவரே பாட முடியாது என்பதால் பெண் பாடுவது போல் வரிகள் அமைத்து அதை ஜானகி லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்ய வைத்திருப்பார் ராஜா.
தேவை யாவும் ஹே ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
தேவை யாவும் ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
பூவை நெஞ்சில் நாணம் போராடும்
ஊர்கூடியே உறவானதும்
தருவேன் பலநூறு
பருகக் கனிச்சாறு
தளிராடும் என் மேனி தாங்காது உன் மோகம்
சரணம் இரண்டிலும் இதே தான். முதலில் ஜானகி. ‘பூவை நெஞ்சில் நாணம் போராடும்’ என்று ஒரு ஹை நோட்டில் முடித்து பின் மலேசியா வாசுதேவன் உச்ச ஸ்தாயில் ‘ஊர்கூடியே உறவானதும்’ என்று ஆரம்பிப்பார்.
3. அதுபோல, இந்த ‘ஹே ஹே ஹே’ மற்றும் ‘ஓஓஒஒ’ வில் ஒரு விஷயம். முதல் சரணத்தில் இந்த ‘ஹே ஹே ஹே’ மற்றும் ‘ஓஓஒஒ’ வை ஜானகி பாடுவார். இரண்டாம் ஹே ஹே ஹே’ க்கு பிறகு ஆ ஆ ஆ ஆ என்று பாடுவார். ஆனால் இரண்டாம் சரணத்தில் இரண்டையுமே ‘ஹேஹேஹே’ மற்றும் ‘ஓஓஒஒ’ என்று தான் மலேசியா வாசுதேவன் பாடுவார்.
4. இரண்டாவது சரணத்தில் இறுதியாக ஜானகி சிணுங்கும் சிணுங்கல் உச்சம். ஒரு முறை கேட்டு பாருங்கள் இந்த வரியை ‘தளிராடும் என் மேனி தாங்காது’
5. அவ்வளவு மெனக்கெடல்களுடன் ராஜா இடை இசை அமைத்திருப்பார். ரஜினியோ தன் கண்ணாடியை நான்கைந்து முறை சுழற்றி சட்டையில் தேய்த்து ஸ்டைலாக ஒரு நடை, ஒரு போஸ் என்று அலட்டிக்கொள்ளாமல் கவனிக்க வைத்திருப்பார்.
6. ரஜினி அப்படியென்றால், ஜானகியின் குரலுக்கு நீதி கொடுக்கும் விதமாக ஸ்ரீதேவி, சிணுங்கல், தலையை அசைத்து கண்சிமிட்டல், தோளை குலுக்கி கன்னத்தில் கைவைத்து புன்சிரிப்பு, வெட்கப்பட்டு என கிறங்கடித்திருப்பார்.
எனக்கென்ன ஆச்சர்யமென்றால் இத்தனை விஷயங்கள் கொட்டி கிடக்கின்றன. ஆனால் ஒரு படத்திற்கான ஆறு பாடல்களை நாற்பத்தைந்து நிமிடங்களில் முடித்திருக்கிறார் என்றால்...எப்படி அவரால் இவ்வளவு சிரத்தையாக வேகமாக பல மாஸ்டர் பீஸ்களை கொடுக்க முடிந்திருக்கிறது.
சட்டை பைய்யில் இருந்து எடுத்து தூக்கி எறிவது போல் எறிந்திருக்கிறார்.
We are Blessed என்பதைத் தவிர என்ன சொல்லுவது.

செவ்வாய், செப்டம்பர் 24, 2024

இடைவெளி

கற்றதும் பெற்றதுமில் சுஜாதா சொல்லியிருப்பார். எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் ஒரு ஆரோக்கியமான இடைவெளி தேவை என்று.

இது எல்லா படைப்பாளிகளுக்கும் பொருந்தி வருகிறது. முக்கியமாக இசை ஞானிக்கு.
அவரது compositionகளை கேட்ட பின்பு அவர் சரஸ்வதியின் மறு அவதாரம் என்று சொல்வதை மறுப்பதற்கில்லை. எனினும் அவரின் தனிப்பட்ட கருத்துக்களின் காரணமாக அவரது படைப்புகளின் மீதே விமர்சனம் செய்யும் அளவுக்கு சமூக வலைத்தளங்கள் வழி வகுத்து விட்டன. உடனடி செய்திகள் மற்றும் கட்டற்ற பகிர்தல் காரணமாக அனைவரும் சுயத்தை பறி கொடுத்து நிற்கிறார்கள்.
வேதனைக்குரியது
😞

Jurassic Park Theme

 

1993ல வந்த படம். எங்கேயோ புக்ல படிச்சி தெரிஞ்சுகிட்ட டைனோசர்ஸ டக்குனு பெரிய ஸ்க்ரீன்ல காமிச்ச அந்த பிரமிப்பு எப்போ இந்த தீம் மியூசிக் கேட்டாலும் rewind ஆகுது.

Jurassic Park Theme

புதன், ஏப்ரல் 17, 2024

பொறுக்கலையே

 


'உனக்கென்ன. மூடிட்டு இரு', அப்டினு சொல்றத கேட்ருப்போம். சும்மா இல்லாம அதாவது மனசுக்குள்ள உண்மையா என்ன நினைக்கிறோம் அப்டிங்கறத வயிறு எறிஞ்சிகிட்டு சொல்லி ஊரெல்லாம் வாங்கி கட்றது தேவையா? நுணலும் தன வாயால் கெடும்ன்ற மாதிரி ஆச்சுல்ல. 

விஷயம் இதுதான். டி.எம். கிருஷ்ணாக்கு 2024 வருடத்துக்கான சங்கீத கலாநிதி அவார்ட் கொடுத்ததுக்கு ரஞ்சனி காயத்ரி சகோதரிகள் பொங்கிருக்காங்க. இனிமே ம்யூசிக் அகடெமில பாடப்போறது இல்லை அது இதுனு ஏகப்பட்ட புலம்பல். இவங்க லெட்டர் அனுப்புன கையோட, சொல்லப்போனா லெட்டர் அகடெமிக்கு போய் சேர்றதுக்குள்ளேயே சோசியல் மீடியால அதை போஸ்ட் பண்ணி ஒரே ரகளை பண்ணிருக்காப்புல. காரணம் என்ன?. வவுத்தெரிச்சல். 30 வருஷம் கூவுறோம். வர்லேயேனுட்டு. இதுமட்டுமில்லாம, இன்னும் சில பேர், தனக்கு கொடுத்த அவார்டை ரிட்டர்ன் பண்றோம்னு கூச்சல் வேற. குடு. யாருக்கு நஷ்டம்.

 


பெரிய பங்களாவை இல்ல அரண்மனையை பாக்குறீங்க. உள்ள போய் பாக்கணும்னு நாம ஆசைப்படலாம். உள்ள விடுவாங்களா பாக்கலாமா அப்டிங்கற சந்தேகம்லாம் வருது. அப்போ ஒரு ஆளு 'வாய்யா. இவ்ளோதான் இருக்குது. உள்ள வந்து பாத்துட்டு போ. நான் காமிக்கிறேன்' அப்டினு சொன்னா எப்படி இருக்கும்? பங்களாவுக்கு உள்ள இருக்கறவன், அதை சார்ந்து பிழைக்கிறவன் எல்லாரும் இவனை குத்துவாங்களா இல்லையா? அதுதான் நடக்குது இங்க.  

கர்நாடக சங்கீதம் அப்படிங்கறது சமூகத்துல ஒரு சாராருக்கு மட்டுமே கிடையாது, எல்லாரும் தெரிஞ்சிக்கோங்க அப்டினு நினைக்கிற ஆளு நம்ம கிருஷ்ணா. நினைக்கிறது மட்டும் இல்லாம கச்சேரியை நடு ரோட்டுல நடத்தி காட்டுனவரு. எல்லா தரப்பட்ட மக்களும் இந்த கர்நாடக சங்கீதத்தை ரசிக்கணும் கத்துக்கணும் அப்படிங்கற ஒரு நோக்கம் அவருக்கு. 

கிருஷ்ணா பெரியாரை புகழ்றாராம். அதான் மெயின் ரீசன் அப்டினு சகோதரிகள் பிராது கொடுத்திருக்காங்க. என்ன ஒரு லாஜிக்கு. எங்க போய் முட்ட. கலாநிதி அவார்ட் சங்கீதத்துக்காக ஒருத்தர் பண்ண பங்களிப்புக்காக கொடுக்கப்படற ஒரு அவார்ட். அவர் சங்கீதத்துல சாதிச்சார இல்லையானு பாத்து விமர்சனம் பண்றதை விட்டுட்டு, அவரோட சித்தாந்தங்களுக்காக வெறுக்குறேன்னு சொன்னா, தவறு யாரு மேல. சுயரூபம் வெளில வந்துருச்சு.

#isupporttmkrishna #TMKrishna #sangeethakalanidhi T.M. Krishna