புதன், ஏப்ரல் 15, 2026

கவின்

சின்னத்திரையிலிருந்து வந்த இன்னுமொரு நடிகர். 

சொந்த ஊர் திருச்சி. லயோலா காலேஜ். கனா காணும் காலங்கள் மூலம் டிவி என்ட்ரி. அங்கிருந்து சரவணன் மீனாக்ஷியில் ஒரு படி மேலே ஏறுகிறார். பிறகு என்ன. வெள்ளித்திரை தான். அறிமுகமான முதல் படத்தை பார்த்ததில்லை. ஆனால் அதன் பிறகு வந்த லிப்ட். டாடா, ஸ்டார், பிளடி பெக்கர், கிஸ் மற்றும் மாஸ்க் வரை பார்த்தாயிற்று. மூன்றாம் படத்திலேயே சிங்கிள் பேரெண்ட்டாக ஒரு கனமான கதாப்பாத்திரம். ஸ்டாரில் முதல் மற்றும் இரண்டாம் பாதியில் வேறுபட்ட உணர்ச்சிகள் என அனைத்தையும் லகுவாக கையாளுகிறார். கவின் வாய்ஸில் வசீகரிக்கும் ஒரு கிறக்கம் உள்ளது. போலவே இரண்டாம் படம் முதல் படிப்படியாக தனக்கென ஒரு ஸ்டைல் உருவாக்கியிருக்கிறார். சிரமமான காமெடி ஜானர் மிகப்பிரமாதமாக இவருக்கு ஒர்க் அவுட் ஆகிறது. 


ஆக்ஷன், எமோஷன், சோகம், அழுகை, கோபம், காதல் என எல்லா வெரைட்டியிலும் மிகை நடிப்பில்லாமல் வெளிப்படுத்துகிறார். அவருடைய கதை செலெக்ஷனும் பிரெஷாக இருக்கிறது. மறக்க முடியுமா அந்த வசனத்தை, 'உங்களால நல்லாருக்கணும் ஆனா உங்களைவிட நல்லாருக்கக்கூடாதுல' கலெக்ஷன் அள்ளுகிறார். சைலண்டாக தயாரிப்பாளரின் செல்லப் பிள்ளையாக தன்னை அடையாளம் காண்பித்துள்ளார். முக்கியமாக எந்த ஒரு பின்புலமும் இன்றி சாதித்திருக்கிறார். ரசிகர்களுடன் எளிதாக கனெக்ட் செய்துகொள்கிறார். இன்னும் என்ன வேண்டும் மென்மேலும் வெல்வதற்கு. வாருங்கள் கவின். 

அடுத்த நல்வரவாகட்டும். ❤️❤️❤️ 

கருத்துகள் இல்லை: