2008ல் எடுத்து நான்கு வருடங்கள் கழித்து 2012ல் தான் லீலை படத்தை ரிலீஸ் செய்துள்ளனர். ஹாஸ்டல் PCO போன், ஆரம்பகால சாப்ட்வேர் கம்பெனி அலப்பறைகள், காஃபி மெஷின், எஸ்டீம் கார், மியூசிக் வேர்ல்ட் ஷாப், பழைய நோக்கியா கேமரா போன் என படம் முழுவதும் நோஸ்டால்ஜியா தான். ஷிவ் மற்றும் மனெசி தான் ஹீரோ ஹீரோயின்.
இரண்டு பேரும் ஹிந்திக்கார்கள் என்பது தெரியாதவாறு நடித்திருக்கிறார்கள். விரசம் இல்லாத காதல் காட்சிகள் மற்றும் வசனங்கள். முதலில் முட்டிக்கொண்டு பிறகு சேரும் கதை தான் என்றாலும் சலிக்கவில்லை. தனி டிராக்கில் சந்தானம் காமெடி. அந்த உருவக் கேலியை இப்பொழுது செய்திருந்தால் பல கோர்ட் கேஸ்களை சந்தித்திருப்பார். லீலையின் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிசு தான் நம் பேவரைட் வதந்தி சீரிசின் டைரக்டர் என்பது கொசுறு சேதி. அடிதடி இல்லாமல் ஒரு அக்மார்க் லவ் ஸ்டோரி பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது என்பவர்கள் இதை தாராளமாக டிக் செய்யலாம்.
சிம்பிளி சவுத் OTT

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக