புதன், ஏப்ரல் 15, 2026

Don't Die

'Don't Die' என்கிற பெயரில் ஒரு சமூகத்தை உருவாகும் முயற்சியில் இருக்கும் பிரையன் ஜான்சன் குறித்த கட்டுரை படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதாவது மரணமில்லா பெருவாழ்வு வாழ்வது என்கிற குறிக்கோளுடன் செயல்படுகிறார். இயந்திரத்தின் ஆயுளை நீட்டிக்க அதனுடைய ஸ்பேர் பார்ட்ஸை குறிப்பிட்ட காலத்திற்கு மாற்றுவது போல் உடலிலும் உறுப்புகளை மாற்றும் பகீரத முயற்சியில் இருக்கிறார். 

ஆண்டுக்கு 17 கோடி ரூபாய் செலவில் மருத்துவ கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள். ஒரிஜினல் வயது 47. ஆனால் அவருடைய பையாலாஜிக்கல் ஏஜ் 18 தான். உள்ளே அவ்வளவு இளமையாக இருக்கிறார் போல். அதிகாலை 4.30க்கு எழுகிறார். 6.45 மணிக்கு ப்ரேக்பாஸ்ட. 9 மணிக்கு மத்திய உணவு. 11 மணிக்கு இரவு உணவு. அதன் பிறகு அடுத்த நாள் தான் உணவு. இரவு 7.45க்கு தூக்கம். தினமும் 8மணி 34 நிமிடங்கள் ஆழ்ந்த உறக்கம். இந்த அட்டவணை நமக்கு ஒத்து வர வாய்ப்பில்லை. ஆனால் இரவு உணவை தள்ளிப்போடாமல் எவ்வளவு சீக்கிரம் எடுத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்துக்கொள்ளுதல் நல்லது என்கிற கோட்பாட்டில் இந்த அட்டவணை ஒத்துப்போகிறது. மேலும் 16 மணி நேர இண்டர்மிட்டன்ட் பாஸ்டிங் போல் 18 மணி நேர பாஸ்டிங். உண்டு உண்டே உடலை வருத்தக்கூடாது. நிற்க. இவர் ஆண்டுக்கு 17 கோடி ரூபாய் கொடுத்து கண்டுபிடித்தது கீழே உள்ளவை தான். அனைத்துமே பேசிக்கான விஷயங்கள். இதை முன்பே ஒருமுறை உடல் நலம் எனும் பத்தியில் கொடுத்திருந்தேன். அதைத்தான் மீண்டும் மீண்டும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.



1. தூக்கத்துக்கு முன்னுரிமை கொடுங்கள். அருமருந்து இதுதான். 

2. மன உளைச்சல் கூடாது. stress creates inflammation. Inflammation causes diseases. அதனால் நோ ஸ்ட்ரெஸ். 

3. ஊட்டச்சத்து உணவை சாப்பிடவேண்டும். வெறும் சக்கையாக இல்லாமல் புரதம், அளவான கொழுப்பு, எரிசக்திக்கு கார்போஹைட்ரேட். நிறைய காய்கறிகள். குறைவான சோறு. 

4. எனக்கு வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான் தான் என்கிற கொள்கை. செவிமடுப்போம். 

கட்டுரை எழுதிய அகஸ்டஸ்க்கு நன்றிகள்.

கருத்துகள் இல்லை: