கீழடி அருங்காட்சியகம்: ஒரு காலப்பயணம்!
கடந்த வாரம் ஒரு விசிட்.
முதற்கட்ட அகழாய்வு நடக்கும்போதே (2016-ல்) அங்குச் சென்று பார்த்த ஞாபகம்
இருக்கிறது. அப்போது தமிழ் பிராமியில் எழுதப்பட்டிருந்த ஒரு உடைந்த பானை
ஓட்டை (சில்லை) கையில் எடுத்தது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. அகழ்ந்த
குழிகளில் உறை கிணறு, வடிகால், செங்கல் கட்டடங்கள் என ஒவ்வொன்றும்
வியப்பளித்தன.
"எப்படியும் 2500 வருஷம் இருக்கும் சார். கடல்
கடந்து பிசினஸ் பண்ணிருக்கோம்!" என்று அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்
அன்று பெருமையுடன் கூறினார். அந்த முதல் பயணத்தைப் பற்றி அன்று நான்
எழுதியவற்றைக் கீழே முதல் கமெண்டில் பகிர்ந்துள்ளேன்.
2500
ஆண்டுகளுக்கு முன்பே தமிழரின் நாகரிகம் எவ்வளவு மேம்பட்டிருந்தது என்பதைப்
பறைசாற்றுவதற்கு அன்று அத்தனை இடர்பாடுகள். ஆனால் இன்று, அதே பெருமையை
உலகிற்குச் சொல்ல ஒரு பிரம்மாண்டமான அருங்காட்சியகமே
அமைக்கப்பட்டிருக்கிறது.
அகழ்வாய்வில் கிடைத்த உலோகங்கள்,
மண்பாண்டங்கள், அரிய காசுகள், மணிகள் மற்றும் செங்கல் கட்டட அமைப்புகள் என
அனைத்தையும் ஐந்து வெவ்வேறு கட்டடங்களில் மிக நேர்த்தியாகக்
காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும்
வகையில் மினி தியேட்டரில் ஒரு விளக்கக் காணொலியையும் திரையிடுகிறார்கள்.
தகவல் செறிவோடு, உலகத்தரத்தில் அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகம்
ஒவ்வொரு தமிழரும், வரலாற்று ஆர்வலரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்.
உங்கள் 'Bucket List'-ல் மறக்காமல் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்!
#Keezhadi #TamilHeritage #History #KeezhadiMuseum #TamilNaduTourism
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக