வியாழன், அக்டோபர் 22, 2020

மெட்ரோ மாலை

இசைஞானியின் படைப்புகள் ஆறாத வடுவுக்கும் மருந்து போதும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. தேநீர் கடைடவுண் பஸ்இரவு பத்து மணிக்கு மேல் கேட்கும் பக்கத்து பால்கனி FM என அடுக்கிக்கொண்டே போகலாம். அவ்வாறான பாடல்களை திரையில் ஆங்காங்கே பாங்காக எதிர்பாராத இடத்தில் சொருகி ரசிகனை ஆழ்நிலை மன அமைதிக்கு இட்டு செல்லும் கைப்பக்குவம் ஒரு சில இயக்குநர்களுக்கே முத்தாக வாய்த்திருக்கிறது. உதாரணமாக ‘சூப்பர் டீலக்ஸில் உபயோகப்படுத்தபட்டிருக்கும் பாடல்கள். போலவே ஞானியின் பாடல்களை ஆத்மார்த்தமாக ரசிப்பத்தில் வெளிவாழ் தமிழர்கள் முக்கிய இடம் வகிக்கிறார்கள். வேறொரு ஊரில் ஒட்டாத கலாச்சாரத்தில் மற்றும் தமிழ் சுற்றம் சூழாதிருப்பதே இதற்கான பொதுவான காரணமாக முன்வைக்கபடுகிறது. இதன் பொருட்டே தமிழ் சங்கங்கள் கனடாலண்டன்சிங்கப்பூர்ஆஸ்த்ரேலியா என்ற தமிழர்கள் கோலோச்சிய இடங்களில் தமிழர்களால் உணர்வுப்பூர்வமாக நிறுவப்பட்டு இருக்கின்றது. நாடகம்பட்டிமன்றம்தமிழர் விழாக்கள்குழு நடனங்கள் என்ற பல வடிகால்கள் அதில் உற்பத்தி ஆகிருக்கின்றன. அதில் ஒன்றாக பூத்திருப்பது ‘மெட்ரோ மாலை திரைப்படம். 




பெயருக்கேற்றார் போல இசைஞானியின் இசைகோர்ப்புகள் ஆங்காங்கே பதமாக கோர்க்கப்பட்டிருக்கின்றன. பிரதானமாக இரண்டே கதாபாத்திரங்கள். அடல்ட்டரியை மெலிதாக நியாப்படுத்த முயற்சி செய்து பின் ஒரு மொரட்டு சிங்கிளின் வாழ்க்கையை கூராய்வு செய்து இனிதே முடித்திருக்கிறது. அனானிமஸ் ஆண் கதாப்பத்திரத்தில் கைதேர்ந்த நடிப்பாக முத்தய்ப்பு பதித்திருக்கிறார் அந்த வெளிவாழ் தமிழர். அரவணைப்பு தேடும் கதாப்பத்திரத்தில் ‘புனிதா சண்முகம். யெட் அனதர் NRI கேர்ள் என்றாலும்நடிப்பில் முதிர்ச்சி. கணவனிடம் முயங்கிமுரண்டு பிடித்துஅநாமதேய ஆணுடன் வார்த்தை சல்லாபம்விடைபிரியும் நேரத்தில் சொல்லாமல் காதல் சொல்வது என பல பரிமாணங்களில் மிளிர்கிறார். படம் தொடங்குவதற்கு முன் ஸிக்ரிப்ட்டில் ஏகப்பட்ட மெனக்கெடல்கள் செய்திருக்கிறார்கள். இடத்தேர்வுகாஸ்ட்யூம்ஒப்பனைஉறைவிடம்இசைகோர்ப்புகள் என அவ்வளவும் திரையில் மிளிர்கிறது. அமெச்சூர் ப்ராஜக்ட் என்ற சொல்லுவதற்க்கு இடமில்லை. அதிலும் கதாநாயகிக்கு தேவையில்லாத கணவனின் முகத்தை ஒரு காட்சி தவிர  படம் நெடுகிலும் காட்டாதுஇல்லையில்லைஅலட்சியபடுத்தியிருப்பது இங்குள்ள உதவி இயக்குனர்களுக்கான  ஒரு யுரேக்கா ஐடியா. பிரமாதம். 


சிங்கப்பூர் தமிழரின் அடுக்கக வாழ்க்கையை சமரசம் இல்லாது காட்ச்சிபடுத்திய விதத்தில் மெட்ரோ மாலை தனித்து நிற்கிறது.