புதன், ஏப்ரல் 15, 2026

வணக்கம்

இந்த வணக்கத்தில் பல தினுசுகள் புழக்கத்தில் உள்ளன. வயதுக்கேற்ப, பழக்கத்திற்கேற்ப, இடத்திற்கேற்ப இது மாறுபடும். 'ஹாய்' என்று நார்மலாக கையை தூக்கி காமிப்பது ஒரு வகை. இதுதான் பெரும்பான்மையினர் கடைபிடிக்கும் வணக்கம். சிலர் உள்ளங்கையை விரித்து ஆசிர்வதிப்பது போல் வணக்கம் வைப்பர். 



இன்னும் சிலர் 'ரோஜர் கேப்டன்' என கூறும் ராணுவ வீரன் போல் நான்கு விரல்களால் நெற்றியைத் தொட்டு வெட்டி எறிந்து ராயல் சல்யூட் அடிப்பார்கள். கையை நடுவாக்கில் தலைக்கு நேராக தும்பிக்கை போல் தூக்கி போடுவது ஒரு ஸ்டைல். இன்னொரு வகை அட்டகாசம். சாவி கொத்தை தலைக்கு மேல் எறிந்து அப்டியே கேட்ச் பிடிப்பது போல் ஒரு வணக்கம் வைப்பார்கள். படு எனர்ஜெடிக் மக்கள். வண்டி ஓட்டும்போது இடது கை தூக்கி ஒரு வணக்கம். வலது கை என்றால் ஆக்சிலேட்டரை முறுக்கிக் கொண்டே இருவிரல்களால் ஒரு மினி வணக்கம். என்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் மிகவும் அட்வான்ஸ்ட். கழுத்தை மேலே பார்த்தவாறு வளைத்து புருவத்தை மட்டும் தூக்கி WWE ROCK போல் ஒரு வணக்கம் சொல்லுவார். 

இப்பொழுதெல்லாம் மரியாதை கொடுக்கிறேன் எனும் பேரில் வலது கையை மட்டும் நெஞ்சில் வைத்து வணக்கம் சொல்கின்றனர். 'மகாபிரபு, இங்கேயும் வந்துட்டீங்களா?' எனும் அதிர்ச்சியில் கை வைக்கிறார்களா என்று எண்ணத் தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை: