பள்ளியில் பேச்சு போட்டிக்காக தன்னை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்றாள் மகள். 'ஆளும் அரசின் கல்வி திட்டங்கள்-2025' என்பது தலைப்பு.
கூகிள், chatgpt மூலம் ஒருவாராக பேச வேண்டியதை தேற்றிவிட்டோம். தைரியமாக அடித்துப் பேச வேண்டும் என்றோம். எப்படி என வினவினாள்.
பர்வீன் சுல்தானா வீடியோ போட்டு காண்பித்தாயிற்று. அதை உள்வாங்கி மிகப் ப்ரமாதமாகப் பேசினாள். முதல் பரிசுக்கான பேச்சு அது.
போட்டி நாள் அன்று குறிப்பிட்ட பள்ளிக்குச் சென்றோம். கூட்டம் அதிகம்
என்பதால், பேசிமுடித்தவுடன் அழைக்கச் சொல்லிவிட்டு கிளம்பினோம். மதியம்
அழைத்தாள். பள்ளிக்கு மீண்டும் சென்றபோது இன்னும் சிலர்
பேசிக்கொண்டிருந்தனர்.
அங்கிருந்தவரிடம் 'மகளுக்கு பரிசு எப்போது
கொடுப்பீர்கள்? என்று வினவினேன். 'sir, ஒரு சின்ன பிரச்சினை. அப்படியே
மேடைக்கு பின்புறமாக அவளை வீட்டுக்கு கூட்டுச் செல்லுங்கள்' என்றார்.
'ஏன்' எனக் கேட்டேன்?
'மேடையில் அமர்ந்திருப்பது இந்த வார்டு DMK கவுன்சிலர். 'உங்கள் மகள்
ப்ரமாதமாகப் பேசினாள். ஆனால் DMK என்பதற்கு பதில் ஒவ்வொரு முறையும் ADMK
எனக் கூறிவிட்டாள்'.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக