கார்த்தி பக்கத்து வீட்டுப் பைய்யன் போல் ஒரு தோற்றம், நடிப்பு, முகவெட்டு என தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பிரபலம். க்ரெசென்ட் என்ஜினியரிங் காலேஜில் மெக்கானிக் முடித்த சென்னைப் பையன். சினிமா தான் என்றிருந்தவர் படிக்கும்பொழுதே க்ராபிக் டிசைனராக பணியாற்றியிருக்கிறார். பின்பு ஆய்த எழுத்தில் AD.
அங்கிருந்து நேரே பருத்திவீரன். 'என்ன சித்தப்பு?' என்ற ஒரு வசதியாக டையலாக்கில் மட்டுமே பருத்தி வீரன் மூலம் அறியப்பட்டவரை, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மஹான் அல்ல, சிறுத்தை போன்ற படங்கள் வெவ்வேறும் தளத்தில் அவரது திறமையை பறைசாற்றியது. ஏனோ அவரது லிஸ்டில், 'ஆல் இன் ஆல் அழகு ராஜா' ஒரு தோல்விப்படமாக அறியப்படுகிறது. ஆனால் என்னளவில் அதைப்போன்று வயிறு வலிக்க வைக்க சிரிக்க வைக்கும் ஒரு காமெடி படம் அவரது கேரியரில் இல்லை.
காஜலின் மேடைப்பாட்டு, சந்தானத்துடன் ஆபிஸ் ஆபீசர் லூட்டி என கலகலப்பான ஒரு சித்திரம் அது. அதன் பிறகு வெகு சீரியஸான ரோலில் மெட்ராஸ், செண்டிமெண்ட் கதாபாத்திரத்தில் கடைக்குட்டி சிங்கம், துப்பறியும் ரோலில் சர்தார், தீரன், டில்லியாக கைதி, சகுனி என வெரைட்டி காமித்திருப்பார். நடித்த முப்பது படங்களில் மூன்று அல்லது நான்கு படங்கள் மட்டுமே அவருக்கு கைகொடுக்காதவை. மற்றவை அனைத்தும் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நல்ல ரீச் கொடுத்தவை.
கலகலப்பாக நடிப்பத்தில் இவருக்கு நிகர் இவரே. பொன்னியின் செல்வன் என்று பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படத்தில் கார்த்தி மட்டும் வந்தியத்தேவன் கேரக்டரில் நடிக்காது போயிருந்தால் இன்னும் மோசமாக இருந்திருக்கும். பொ.செ. படத்தில் எப்பொழுது கார்த்தி அறிமுகம் ஆவாரோ அந்த சீன் முதல், ஏன் கார்த்தி வரும் அனைத்து சீன்களும் படத்தில் கலகலப்பு தான். வந்தியத்தேவன் பாத்திரத்துக்கு அவரைத் தவிர வேறு ஒருவர் நியாயம் சேர்த்திருக்க முடியாது. அதற்கு முன் வந்த தோழா. இன்று வரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டால் ரிப்பீட் மோட் தான்.
கொஞ்சம் தவறினாலும் சுய பச்சாதாபம் மிஞ்சி நிற்கும் இடத்தில் அவ்வளவு எள்ளலும் குசும்புமாக அந்த படத்தை வேறொரு பரிணாமத்தில் எடுத்துச்சென்ற வித்தை கார்த்தி ஒருவருக்கு மட்டுமே சாத்தியம். மெய்யழகன் அவரது திரைவாழ்க்கையில் ஒரு மைல்கல். பிரேம்குமாரின் எழுத்திற்கு மேலும் மெருகூட்டியது கார்த்தியின் துள்ளலான நடிப்பு என்றால் அது மிகையில்லை. சிரிக்க மட்டும் அல்ல பல இடங்களில் எமோஷனலிலும் நம்மை கட்டி போட்டிருப்பார். ஒரு சிலரை பார்த்தாலே எனெர்ஜி தொற்றிக்கொள்ளும் அல்லவா? அந்த கேட்டகரியில் வருபவர் தான் கார்த்தி.
48 வயது இளைஞன் என்றால் நம்ப முடிகிறதா? மார்க்கண்டேயர் வரம். ஆன் ஸ்க்ரீனில் கார்த்தி வந்தாலே ஒரு பயர் அண்ட் எனெர்ஜி தான். கண்ணுல ஹார்ட்டுல எமோஜி ❤️❤️❤️

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக