ஒரு ஆறு வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம்
ஆபிஸ்ல ப்ரெஷர். அடிவயித்திலேயும் ப்ரெஷர். நம்மால முடிஞ்சது எதுவோ அத பண்ணுவோம்னுட்டு 'சூச்சு' போய்ட்ருந்தேன்.
அப்போ பாத்து போன் கால். கழுதைக்கு மூக்குல வேர்த்த மாதிரி அப்போதான் கால் வரும் பாருங்க. மல்டி டாஸ்கிங் அப்படிங்கிற பேர்ல அப்போவே ஒத்தக்கைல பிடிச்சிட்டு பேச ஆரம்பிச்சேன். போனைத்தான்.
கால் பண்ணவன் பழைய கம்பெனில ஒண்ணா ஒர்க் பண்ண நண்பன். அஞ்சு வருஷம் கழிச்சி போன் பன்றான்.
'டேய் மச்சா. நல்லாருக்கியா?'
'சொல்லுடா'
'ஒரு அர்ஜன்ட் மேட்டர்.'
'நானும் அர்ஜன்ட் தான். சொல்லு'
'பிரான்ஸ்லேந்து வந்துட்டேன். பட் PR ப்ராசஸ் பண்ணனும். கொஞ்சம் பணம் தேவைப்படுது'
'ஒ எவ்ளோ டா'.
'ஒரு 9000 தேவைப்படும். இருக்காடா மாப்பிள'
'9000மா. அக்கவுன்ட்ல இல்ல'
'டேய். ஹெல்ப் பண்ணு டா. கைல காசு இருக்கு. atm பக்கத்துலதான் இருக்கேன். என்னால foreign அக்கௌண்டுக்கு போடமுடியாது. உனக்கு உடனே போட்டு விட்டுடுவேன்'
சரி. நண்பன் கேக்குறான். எதோ பிரச்சினை போல அப்டினு யோசிச்சுட்டு கைய கழுவுன கையோட கூட வேலை பாக்குறவர் கிரெடிட் கார்டு டீடெயில்ஸ் வாங்கி கொடுக்குறேன். அந்த பக்கம் அவன் லைன்ல வெயிட் பண்ணிட்டே இருக்கான்.
'ஒரு otp வரும் பாருடா'
சொன்னேன். 18576 ரூபாய் டெபிட் என்று வந்தது. என்னது 9000 ரூபா தான் சொன்னான். 18576 வருதே அப்டினு யோசிச்சுட்டு அவனை கேட்டேன். இப்போ போன வச்சிருந்தான்.
'டேய். 18576 டெபிட் ஆயிருக்கு. நீ 9000 தான சொன்ன'
'ஓ. சாரி மச்சா. அதுல அட்ரஸ் தப்பா போட்டுட்டேன். ரிவர்ஸ் பண்ணிட்றேன். இப்போ ஒரு otp வந்துருக்கும் பாரு'
otp வந்திருந்தது. சொன்னேன். மீண்டும் 18576 டெபிட்.
'டேய் திரும்பவும் டெபிட் மெசேஜ் தான் வந்திருக்கு'
'அது. ஒன்னுல்ல. இப்போ தான் கரெக்ட்டா டெபிட் ஆகியிருக்கு. முத டெபிட் ஆனது ரிட்டர்ன் ஆயிடும். பேங்க் பொறுத்து ரெண்டு மூணு நாள் ஆகும்'
'ஓகே. பணம் போட்டு விடு'
'ஓகே' னு வச்சிட்டான்.
அதுக்கப்புறம் ரெண்டு நாள் நாங்க, அதாவது நானும் அந்த க்ரெடிட் கார்ட் கொடுத்த நண்பரும் பேங்குக்கு போன் பண்றதும், நான் என்னோட பேங்க் ஸ்டேட்மென்ட் செக் பண்றதும் விடாம நடந்துச்சு.
பட் பணம் வரல. ரிவர்சலும் ஆகல. அவனுக்கு போன் பண்ணினா எடுக்கல. விஷயம் கொஞ்சம் சீரிஸ்னு புரிய ஆரம்பிக்குது. ஏமாந்துட்டோமோன்னு முத பயம் வருது. சும்மாவா பின்ன 38000 ரூபாய்.
அதுக்கப்புறம் ஏதோ தோணினதுல என் கூட ரூம்ல இருந்த இன்னொரு பைய்யனுக்கு கால் பண்ணி கேக்குறேன். அவன் சொல்றான். சாரி திட்டுறான். 'லூசாடா நீ. ஒரு வார்த்தை யார்டையாவது கேக்கமாட்டியா? அவன் இது மாதிரி நிறைய பேருட்ட பணம் வாங்கிட்டு ரிட்டர்ன் பண்ணாம சுத்திட்டு இருக்கான். நீ என்னடானா கொஞ்சம் கூட யோசிக்காம பணத்தை தூக்கி..'
'டேய்..friend கேக்குறானேன்னு...'
'ஆமா..பொல்லாத friendship . அவன்ட நீ பேசி ஆறு வருஷம் மேல ஆகுது. இடைல என்ன ஆச்சுன்னு உனக்குத் தெரியுமா?'
ரஜினி சொன்னமாதிரி எனக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு.
பாதிக்கப்பட்டோர் சங்கம் மாதிரி அவனால ஏமாத்தப்பட்ட இன்னும் ரெண்டு பேர் facebookல contact பண்ணாங்க. புலம்பல் ஒண்ணே தீர்வு அப்படிங்கற முடிவுல என் சோகக்கதையை அவருக்கு சொல்ல அவரு சோகக்கதையை என்கிட்ட சொல்ல...இப்டியே ரெண்டு மாசம் ஓடிடுச்சு.
இதுக்கு நடுவுல அவுங்க ஊரு ஆளுங்க ரெண்டு பேர பிடிச்சி விசாரிச்சு, அவன் wife அப்புறம் மச்சான் ப்ரொபைல்லாம் facebookல கண்டுபிடிச்சி மெசேஜ் பண்ணி பணம் கேட்டு கடைசில இவன் பண்ண பாவத்தை இவங்க மாமனார் கழுவிட்ருந்தார். ஒவ்வொருத்தருக்கா அவர் பணம் பைசல் பண்ராருனு கேள்வி பட்டு அவரை contact பண்ணா, அவரு '38000 தான தம்பி. சின்ன அமௌன்ட் தான். இந்த வாரம் வெள்ளிக்கிழமை போட்ருவேன்' அப்டின்கிறார்.
என்னங்கடா 38000 சின்ன அமௌண்ட்டா அப்டினு விசாரிச்சா சில பேருட்ட 2 அல்லது 3 லட்ச வரைக்கு லவட்டிருக்கான். அதுமட்டுமில்லாம கிட்டத்தட்ட ரெண்டு மூணு கோடிக்கு இந்த ஏமாத்துவேலை. காரணம் சூதாட்டம் அப்டினு சொன்னாங்க. சரியா விவரம் கண்டுபிடிக்க முடில.
எப்படியோ அவங்க மாமனார்ட்ட கெஞ்சி கூத்தாடி அவரு பணத்தை போட்டுவிட்டார். 750 ரூபா கம்மியா வந்துச்சு. வந்தவரைக்கு ஓகே அப்டினு வாங்கிகிட்டேன்.
அதுவும் கடைசி நேரத்துல அவரு அக்கௌன்ட் நம்பர் மாறி பணம் போட, நல்ல வேலையா அந்த அக்கௌன்ட் நம்பர் ஆக்ட்டிவேட் ஆகாம அவருக்கே ரிவர்ஸ் ஆக, ஒரே ரணகளம் அந்த நாள். எப்டியோ பணம் கைக்கு வந்துச்சு. அன்னைக்கு எழுதுன அந்த transaction reference நம்பர் தான் இந்த படத்துல இருக்குது.
கடந்த வருஷம் தான் தெரிய வந்துச்சு. அவன இண்டர்போல் தேடுற அளவுக்கு பெரிய கிரிமினல் ஆகிருக்கான் அப்டினு. PR வாங்கித்தரதா சொல்லி foreign ஆட்களையும் ஏமாத்திருக்கான். அவனுக்கு FBல தனி பேஜ் ஆரம்பிச்சு அவன் குடும்பம் வரைக்கும் இழுத்து நாரடிசிருக்காங்க. அதனாலே அத இங்க ஷேர் பண்ண முடில.
அவனோட முழு ரூபம் தெரியாத டைம்ல, நடுவுல அவங்கிட்ட பணத்துக்காக போன் பண்ணும்போது விட்டான் பாருங்க ஒரு ரீலு, 'டேய். செல்வ மகள் சேமிப்பு திட்டம் போடு. நல்ல ரிட்டர்ன்ஸ் வருது'ன்னு. எப்படியெல்லாம் கூலா ஏமாத்துறாங்க.
அந்த ரெண்டு மாசம் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் இல்ல. இதெல்லாம் ஒரு தினுசான ரண வேதனை அனுபவம் தான்.
அன்னைலேந்து முடிவு பண்ணிட்டேன். 'சுச்சு' டைம் நோ போன்.


.jpeg)

