ஸ்பாய்லர் அலர்ட். இதுல என்னத்த ஸ்பாய்லர் அலர்ட். கதையே ஸ்பாய்லர் மாதிரி தான் இருக்கு.
விவசாய நிலத்தை வறண்ட நிலமா மாத்தி அங்க இருக்குற விவசாயிங்களை கடன் வாங்கி போர் போட வச்சி, அந்த கடனை அடைக்க முடியாம செஞ்சு, பேங்க் ஆபிஸர்ஸ் இவங்கள மானாவாரியா திட்டி, அதுல மானம் போய் அஸ்வினோட அப்பா தூக்குல தொங்கிடுறார். இவ்ளோ எமோஷன் சீன்ஸை அனிமேஷன்ல ஓட்டிடுறாங்க. அதுமட்டும் இல்லாம அந்த கடனை அடைக்க பேங்க்ல கொள்ளை அடிக்க அவரு தம்பி போய் அங்கு எக்கு தப்பா மாட்டி ஷூட் அவுட்ல மர்கயா. இதன் காரணமா அஸ்வின் காக்கமனுக்கு போலீஸ்காரங்க பாத்தாலே கோவம். அதனால ஒரு பெரிய திட்டம் தீட்டுறாங்க. அண்டர்க்ரவுண்ட மெட்ரோ மூலமா பேங்க் கொள்ளை அடிக்கறது. அப்புறம் அதை தெரிய வச்சி எல்லா போலீஸ்காரங்களையும் அங்க கூட்டி வந்து சுரங்கத்தை வெடி வச்சி காலி பண்ணி ஒட்டு மொத்த போலீஸையும் அழிக்கிறது. எப்படி பிளான். கிர்ருங்குதுல. இதுல எங்க அதர்வா வர்ராரு. அவரு போலீஸ் கான்ஸ்டபிளா அன்னைக்குத்தான் ஜாயின் பன்றார். இன்னும் ஜாயினிங் ஆர்டரே வாங்கலை. அதுக்குள்ளே இந்த மொத்த பிளானையும் கண்டுபிடிச்சி அஸ்வினை போட்டுத் தள்ளிடுறாரு. இவருக்கு ஒரு லவ் ஸ்டோரி. அஸ்வினுக்கு ஒரு மிலிட்டரி பிளாஷ் பேக் அப்டினு ஏகத்துக்கு குழப்பியிருக்காங்க.
கதை முழுக்க ஒரே நைட்ல முடிஞ்சிடுது. ஒரு ஸ்லம் ஏரியால தான் இந்த மாஸ்டர் பிளான் நடக்குது. அதுக்குள்ளே இந்த புது போலீசுலாம் போய் மாட்டிகிட்டு வெளிவரமுடியலைனு ஒரு சேலஞ் வேற. எங்கிட்டாவது ஒரே பக்கமா ஓடிருந்தா கூட வெளில போயிருக்கலாம்.படம் முழுக்க மண்டைல டார்ச் வச்சிக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் சுத்திக்கிட்டே இருக்காங்க. பேசாம 3D கண்ணாடி கொடுத்த மாதிரி ஆளுக்கு ஒரு டார்ச் கொடுத்துருக்கலாம். படம் முழுக்க அவ்ளோ இருட்டு. ஒண்ணுமே தெரில. குத்து மதிப்பா நம்மளே ஒன்னை கெஸ் பண்ணி படம் பாக்குற மாதிரி தான் இருக்கு. அஸ்வின் காக்காமானு மற்றும் அதர்வா அப்டினு ரெண்டு பேரோட திறமையை திறமையா வீணடிச்ச பெருமை தணலுக்கு சேரும். ரெண்டு பெரும் நல்ல நடிகர்கள். அஸ்வின் ஒரு ரொமான்டிக் ஹீரோவா சாஃப்டா தன்னை நிலை நிறுத்திட்டிருக்கிற சமயத்தில இதுல ஹீரோயிக் வில்லன் மாதிரியான ரோல். மருந்துக்கு கூட சிக்கலை. சுத்தமா செட்டே ஆகல.
அதே மாதிரி அதர்வா. நல்ல ஆக்ஷன் ஹீரோ. அவர் வாய்ஸுக்கும் ஸ்மைலுக்கும் தனி ரசிகர் கூட்டம் இருக்கு. இன்னும் ஒரு ப்ளாக் பஸ்டர் அவருக்கு அமைய மாட்டிக்குது. அவரையும் இதுல வீணடிச்சிருக்காங்க. கதைக்கான கரு நல்லாருந்தாலும் காட்சிப்படுத்துன விதம் ஃப்ளாப். எமோஷன் கனெக்ட் பண்ண முடியலை. லவ் போர்ஷன் டெவலப் பண்ண இடமிருந்தும் கோட்டை விட்டுட்டாங்க. மிலிட்டரி பேக்ரவுண்ட் கதை இருந்தாலும் ஒரு ஆக்ஷன் ப்ளாக் வைக்கலை.
மொத்தத்துல படத்தை எண்ட காமிக்காம ரிலிஸ் பண்ணிட்டாங்க 😉
#thanalmovie #Atharvaa #AshwinKakumanu

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக