புதன், ஏப்ரல் 15, 2026

3 BHK

எப்படியாவது சொந்த வீடு வாங்கிடணும்னு கனவுல இருக்குற ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தோட கதை. இந்த ஒன் லைன் தான் உயிர் நாடிங்கிறதுனால அதை சுத்தியே கதை நகர்றது கொஞ்சம் அலுப்பா தான் இருக்கு. அது என்னவோ தெர்ல பாய்சல பாத்த சித்தார்த் மாதிரியே அவ்ளோ யங்கா இருக்கிறார். டென்த் என்ன, அடுத்து சிஸ்த் ஸ்டேண்டர்டுக்கும் நடிக்க வைக்கலாம் போல. அதே மாதிரி அப்பாவோட கனவை சுமத்துட்டு இருக்கிற 35 வயசு இளைஞனா தாடி மீசையோட அயர்ச்சியான கெட்டப்பும் பக்கா. இந்த மீதா ரகுநாத்தும், புடவைய சுத்திவிட்டு கைல ஒரு குழந்தையை குடுத்தாப்புறம் கூட, 'எந்த ஸ்கூல் மா?' அப்படிங்கிறது மாதிரி தான் இருக்குது. சூர்யவம்சம் ஜோடியை திருப்பி கொண்டு வந்துருக்காங்க. இந்த மாதிரி ஓடா தேஞ்சு உழைச்சு கொட்டுற மிடில் க்ளாஸ் குடும்பத்துல கட்டுமஸ்தான ஒரு உடற்கட்டோட சரத் துருத்திட்டு தான் தெரியுறார். சரத் உழைச்சார். உழைக்கிறார். உழைத்துக்கொண்டே இருக்கிறார். நம்ம அப்பா அப்பாவை பாக்கும்போது ஒரு கட்டத்துல அது தான் உண்மைங்கிறதை மறுக்க முடியலை. 

தேவையானியை கூட்டு வந்து தேவையா நீ அப்படிங்கற ரேஞ்சுல யூஸ் பண்ணிருக்காங்க. ஒரு பத்து டயலாக் பேசிருந்தா ஜாஸ்தி. படம் முழுக்க ஒரு உறுத்தல். அப்பாவோட 3BHK கனவை, அந்த குடும்பத்தோட 3BHK கனவை சித்தார்த் மேல திணிக்கிறது. அவர் டென்த்ல ட்வெல்த்ல காலேஜ்ல எல்லாத்திலேயும் பெயில் ஆகுறார். இல்லனா குறைஞ்சு பட்சம் மார்க் எடுத்து பாஸ் ஆகுறார். அவ்ளோ எபர்ட் போட்டும் தோல்வி மேல ஏன் தோல்வி அப்டிங்கிறதுக்கு காரணம் தெரிலை. படத்துல எமோஷன் கம்மியா இருக்கு. இந்த பயலை பெயில் பண்ணி விட்டு அழ விடுங்கங்கிற ரேஞ்சுல தான் அந்த சீன்ஸ் இருக்குது. குடும்பம் அவன் மேல உறிஞ்சி விழலையே தவிர்த்து, பெரிய பாரத்தை நாசூக்கா அவன் தலைல வச்சிடுறாங்க. பய தம், தண்ணி, ஊர் சுத்துறது, லவ் பண்றதுனு எதுவுமே பண்ண விடலை. இன்டெர்வியு போறான். ரிஜெக்ட் ஆகுறான். ரிபீட்டு. ஒரு வழியா வேலை கிடைச்சு, ஜாயின் பண்ண உடனே தங்கச்சி கல்யாணத்துக்கு 25 லட்சம் லோன், 30 வயசுல வீட்டோட மாப்பிள்ளை சம்பந்தம் அப்டினு சரத் பாலிஷா அந்த பையன்கிட்ட பாய்சன் கொடுக்குறாரு. கிட்டத்தட்ட ஒவ்வொரு மிடில் க்ளாஸ் இளைஞனோட வலியை அந்த பிரபு கதாப்பாத்திரம் பிரதிபலிக்குது. 



பொறுப்புணர்ந்து பிரமாதமா நடிச்சிருக்காரு சித்து. நல்ல ரைட்டிங் பை ஸ்ரீ கணேஷ். ஒரு மிடில் க்ளாஸ் பேமிலியால வீடு வாங்குறதுங்கிறது கஷ்டம் தான். பல தடைகளை தாண்டனும். ஆனா இந்த குடும்பம் 3BHK வீடை வாங்குறதுக்கு உலகமே எதிர்த்தப்புல நிக்குற மாதிரி இருக்குது. அவ்ளோ தடங்கல்ஸ். உதாரணத்துக்கு டேலி பாஸ் பண்ணி ஒழுங்கா வேலை பாத்தும் சாரத்தை வேலையை விட்டு தூக்குனது ஏன்?. ஆடியன்ஸை எமோஷனாவே வச்சுக்கணுங்கற இந்த யுக்தி ஓவர் டோஸ் தான். அதுவும் ஒரு வழியா வீடு வாங்கினப்புறம் எல்லா சொந்தமும் 'எங்க வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை..ஆன்ஹஹான்' ரேஞ்சுல சேந்துக்குறதுல படு போங்கு பாஸ். இவன் எப்படி அதுக்குள்ள வீடு வாங்குனானு சொந்தக்காரங்க மூஞ்ச தூக்குற இடம் தான் ரியாலிட்டி சீன். 

பகல் கனவு சீன் தான் அப்டினாலும், சித்தார்த் அவன் பாஸை அப்புற அந்த சீன் வேலை பாக்குற பல பேருக்கு ஒரு வடிகால். இன்னும் தூக்கி போட்டு நாலு மிதி மிதிச்சிருக்கலாம். அதுபோல, லெஹெங்கா எடுக்க போய், தைரியமா ஐஷு கைய பிடிச்சது, சரத் மற்றும் அவரோட ஓனர் ரிலேஷன்ஷிப் காட்சிலாம் ஒரு நெகிழ்வான உணர்வை கொடுக்குது. குடும்பத்தோட பாக்குறதுக்கு ஒரு பக்கா பேமிலி டிராமா. #3bhkmovie #meetharaghunath #Sarathkumar #devaiyani #sriganesh

கருத்துகள் இல்லை: