அது என்ன காலேஜா இல்லை லாட்ஜா. பால்கனி, மொட்டைமாடி, வராண்டா, க்ளாஸ் ரூம் என கிடைத்த இடங்களில் எல்லாம் நாயகர் தீக்ஷித் ஷெட்டி, ரஷ்மிகாவை கட்டிப் பிடித்துக் கொண்டே இருக்கிறார். போனசாக லிப் கிஸ் வேறு. ஆடிட்டோரியம் ஹால் உள்ளே சென்று கதவை சாத்திக் கொள்கிறார்கள்.
கேர்ள்ஸ் ஹாஸ்டலில் இரவு படுத்து எந்திரித்து போகிறார். ரஷ்மிகா பாய்ஸ் ஹாஸ்டலில் வந்து ஷெட்டியின் ரூமைப் பெருக்கி கோலம் போட்டு விடுகிறது. வா, ஊட்டி விடுகிறேன் என்று ஷெட்டிக்கு கேண்டீனில் ஊட்டி விடுகிறார். தற்போது ஹாஸ்டல் இந்த அளவுக்கு லிவ் இன் அபார்ட்மெண்டாக மாறிவிட்டதா என்ன? பேசிக்காக ஒரு ஆணாதிக்காவதியின் காதலில் மாட்டிக்கொண்ட ரஷ்மிகா, அந்த டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்து பிரேக்கப் செய்து வெளியேறுவது தான் கதை. ரஷ்மிகா மந்தனாவுக்கு நடிப்பதற்கு நிறைய ஸ்கோப். ஆனால் இறுதி பத்து நிமிடங்கள் மட்டும் தான் நான் மேல சொன்ன சீன். மீதி இரண்டு மணி நேரம் ஷெட்டியின் கைப்பாவையாக இருக்கிறார். காதல், காமம், ஆல்ஃபா மேல், பெண் சுதந்திரம், நட்பு, தந்தை பாசம் என எல்லாவற்றையும் போட்டு குழப்பியிருக்கிறார்கள். ப்ரோபசராக வரும் ராகுல் தான் படத்தின் டைரக்டர். அவரது கதாபாத்திரத்தை மட்டும் மிக மிக நல்லவராக எழுதிக்கொண்டு மற்றவற்றை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் அணுகியுள்ளார்.
இந்த விக்ரம் கேரக்டரை எத்தனை புள்ளிங்கோ பாய்ஸ் ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு பூமாதேவியை டார்ச்சர் செய்யப்போகிறதோ என்று நினைத்தால் தான் பயமாக இருக்கிறது கலாச்சார சீர்கேடு.
#TheGirlfriendMovie #rashmikamandanna #RahulRavindran #DheekshithShetty

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக