ஞாயிறு, அக்டோபர் 08, 2023

சித்தா 2023

 

படத்தோட ப்ரோமோஷனுக்காக என்னன்னலாமோ பண்றாங்க. ஏன் paid reviews கூட இருக்குது. முன்னெல்லாம் பேப்பர்ல மட்டும் தான் இந்த paid ப்ரோமோஷன்ஸ். இப்போ சகட்டு மேனிக்கு 'வேற லெவல் ப்ரோ' அப்டினு திரும்புன பக்கம்லாம் அலற விடுறானுங்க. 'புலி வருது' கதை மாதிரி இவனுங்கள நம்பலாமா வேணாமான்னு யோசிச்சு யோசிச்சு ஒரு முடிவும் எடுக்க முடிறதில்ல. அது மாதிரி தான் படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முத வாரம் ஆனந்த விகடன்ல படம் சம்பந்தப்பட்ட பேட்டி வரும். சித்தாவுக்கும் அதுமாதிரி ஒன்னு படிச்சேன். வழக்கம்போல ஒரு டெம்ப்லேட்ட யூஸ் பன்னிருந்தாங்க. படத்தோட கதையை கேட்டு முத நடிக்க மட்டும் இருந்த சித்தார்த் அப்புறம் அதை ப்ரொட்யூஸ் பண்ணவும் ஆசைபட்டாருனு. போதும்டா ரீல் அந்துருச்சு சாமின்னு புக்க மூடி வச்சிட்டேன். பட் படம் பாத்தப் பிறகு தான் தெரியுது, உண்மைலேயே 'வேற மாறி. வேற மாறி'. அப்டி ஒரு மேக்கிங். தி பெஸ்ட் பிலிம்.




கதை குழந்தைகள் பாலியல் சம்பந்தப்பட்ட படமாச்சே, குடும்பத்தோட பாக்கலாமான்னு பல பேரு கேட்ருந்தாங்க. இந்த படத்தை குடும்பத்தோட மட்டும் தான் பாக்கணும். ஒரு அத்துமீறல் காட்சி கூட இல்லை. ரொம்ப பிரமாதமான ரைட்டிங்.

சித்தார்த் எங்கே இவ்ளோ நாள் இந்த நடிப்பை ஒளிச்சு வச்சிருந்தாருனு தெரில. படம் முழுக்க அவர் தான். எவ்ளோ எமோஷன்ஸ். எல்லாத்தையும் அப்டி left handல அசால்ட்டா டீல் பண்ணிட்டு போய்டே இருக்காரு. சந்தோசம், வாஞ்சை, அழுகை, வருத்தம், வலி, அவமானம், தேடல் இன்னும் பலப்பல உணர்ச்சிகள். அப்பப்பா. நமக்கே ஒரு கட்டத்துல என்னடா மனுஷன் இந்த பாடு படறானே ஒரு இது வரும் பாருங்க. The Best movie for sitharth. சித்தா தொட்டாலும் அம்மாகிட்ட சொல்லனும் அப்டினு அஞ்சலி சொல்லும்போது வருத்தமும் அடுத்த செகண்ட் சுந்தரி பாக்கும்போது ஒரு சின்ன புன்னகையும் பண்ணுவாரே, கவனிச்சீங்களா? Wow.

அந்த ரெண்டு சுட்டி பொண்ணுங்களும் அப்படி ஒரு அசகாய நடிப்பு. பத்து வயசுக்குள்ள தான் இருக்கனும். அந்த கதையை உள்வாங்கி அவங்க கொடுக்கற அந்த matured ஆக்ட்டிங். simply superb.

தமிழுக்கு நல்வரவு நிமிஷா சஜயன். அபர்ணா பாலமுரளி சாயல். அவங்க பேசுற கோர்ட் சீன் அப்புறம் கிளைமாக்ஸ் வசனங்களும் படத்துக்கான உயிர்.

படம் முழுக்க கிட்டத்தட்ட எல்லா சீன்லயுமே மெனக்கடல்கள். அந்த உயரதிகாரி விசாரிக்கிற சீன் சின்னது தான். ஆனா அதுல கூட 'வாட்டர் பாட்டில் எப்படி தவற விட்டீங்க?' அப்படிங்கற கேள்விக்கு இன்ஸ்பெக்டர் வழியறதும், இன்னைக்கு wife birthday அப்டினு அந்த அதிகாரி சொன்னதும், 'விஷ் பன்னேனு சொல்லுங்க' அப்படின்ற பெண் போலீஸ் கேரக்டர், 'பாயசம் நல்லாருக்குனு' சொல்ற இன்ஸ் எல்லாம் அருண்குமார் அவரோட எழுத்து திறமைக்கு ஒரு சோறு பதம்.

இடைல பதினோரு வயசு பொண்ணு ஒன்னு உருக்குலையாம எரிஞ்சிருக்கு அப்டினு வர காட்சி; அது சுந்தரியா இருந்திடக்கூடாதுங்கற பார்வையாளர்கள் பதைபதைப்பு, அதையும் தாண்டி பெத்தவன் அத பாத்தா என்ன பாடு படுவானோ அப்படிங்கற வேதனை; இந்த கலவையான உணர்ச்சி கடத்தலுக்கே இயக்குனருக்கு ஒரு சலாம்.

சித்தார்த் மேல சுமத்தப்படுற பழிக்கான காட்சியமைப்பு கொஞ்சம் கூட நெருடல் இல்லாத யதார்த்தம். அந்த காட்சிகளுக்கான பேக் ஒர்க் உழைப்பு ஸ்க்ரீன்ல நம்மால உணர முடிது. தவிர பல சீன்கள் ஈர்ப்பு. குறிப்பா தொடக்கத்துல மளிகை கடைல பேலன்ஸ் 150 ரூபா அப்டினு வர சீன்ல சுந்தரி லாலிபாப் சாப்பிட்டு வரது, அது மாதிரி ஒவ்வொன்னும்.

முக்கியமா பின்னணி இசை விஷால் சந்திரசேகர். அவரோட பங்கு அளப்பரியது. BGMம் ஒரு கேரக்டரா இருக்குதுனா மிகையல்ல

சுந்தரியை கடைசியா காப்பாத்தறது கூட அந்த யாரோ ஒரு லேடி தான். அப்போ கூட நமக்கென்ன அப்டினு இருக்கக்கூடாது அப்டிங்கறதுக்கு ஒரு சின்ன கதாப்பாத்திரம். கல் எரிஞ்ச நாய் மாதிரி நாம ஓடாம கொஞ்சம் அக்கம் பக்கம் கண் திறந்து பாக்கணும் அப்டிங்கறதுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வு. அந்த யாரோவாக நாம ஒவ்வொருத்தரும் இருக்கணும் அப்டிங்கறது படத்தோட ஒரு படிப்பினை அப்டின்னுதான் புரிஞ்சிக்க முடியுது.

போனை கைல கொடுக்காதீங்க அப்படிங்கற பொத்தாம் பொதுவான வசனம் மட்டும் பிள்ளைங்களை காப்பாத்திடுமா அப்டினா இல்லை. கூட சேர்ந்து உக்காந்து பேசி அவர்களுக்கான வெளிய நாம அமைச்சு கொடுக்கிறதுல தான் பாதுகாப்பு தொடங்குது.

அண்ணன் பொண்ண வளக்குற சித்தப்பா கேரக்டர், அந்த பொண்ணுக்கும் சித்தப்பாவுக்கும் நடுவுல உள்ள கெமிஸ்ட்ரி, காணாம போற பதைபதைப்பு, குழந்தை மீதான அத்துமீறல், கோர்ட் விசாரணை, பழிவாங்கல், இறுதில முத்தம் கொடுக்குற பொன்னி, சட்டையை இழுக்கிற சுந்தரி அப்டினு படம் முழுக்க நம்மள நாம அறியாமையே சீட் நுனில உக்கார வைக்கிற அந்த படைப்பு ஆளுமைக்கு மிகப்பெரிய வந்தனம்.

The Best Movie of Recent Times. தவற விடாதீங்க.

#chithha #chithhareview #ChithhaMovie #Siddharth #NimishaSajayan #SuArunkumar #etakientertainment

சந்திரமுகி 2


ஒரே பாயிண்ட் தான். சந்திரமுகி பார்ட் 1 கதையே அப்டியே ரீமேக் பண்ணி வச்சிருக்காங்க. அப்டியே அப்டினா அதே அரண்மனை, அதே பால்காரர் பெண், அதே சந்திரமுகி misunderstanding, அதே நடன மங்கை, அவுக லவ்வர் பாய், ராஜா தூக்கிட்டு வரது, கொல்றது, பழி வாங்கறது, வேட்டையன எரிக்கறது எல்லாமே டிட்டோ. அவ்ளோ ஏன்? ரஜினிய அப்டியே காப்பி அடிச்சி லாரன்ஸ் நடிச்சிருக்காப்புல. வடிவேலு காமெடிலாம் சுத்தமா ஒர்க் அவுட் ஆகல. லக்ஷ்மி மேனன் வீல் சேர்ல உயரத்துல சுத்துற காட்சி மட்டும் த்ரில் factor.



 அரங்கு நிறைந்த காட்சி.

பி. கு. தானைத்தலைவி கன்னக்குழியழகி ஸ்ருஷ்டி டாங்கேவை முதன்மை கதாப்பாத்திரத்தில் போடாதமைக்கு அகில உலக ஸ்ருஷ்டி டாங்கே ரசிக மன்றம் சார்பாக கண்டனங்கள்.