புதன், ஏப்ரல் 15, 2026

பன் பட்டர் ஜாம்

ஒண்ணு ரெண்டை லவ் பண்ணுது. அந்த ரெண்டு இவன் வேண்டாம்னு டொச்சு காரணம் சொல்லிட்டு மூனை லவ் பண்ண போய்டுச்சு. இப்ப அந்த ஒண்ணு பின்னாத்திக்கிட்டு சுத்துது. நாலும் அஞ்சும் தனியா ஒரு ட்ரேக்ல லவ்வு கசமுசா பண்ணிட்டு திரியுது. திடீர்னு அந்த நாலு, எங்க அப்பா உன்னை சுட்டுடுவார்னு சொல்லிட்டு அஞ்சை கழட்டிவிடுது. மேல சொன்னேனே, அந்த பினாத்திக்கிட்டிருக்குற ஒண்ணு இந்த அஞ்சை இப்போ லவ் பண்றேன்னு சொல்லுது. அத்தோட படம் முடியுது. 


சரண்யாவுக்கு ஒரு டயலாக் வச்சிருப்பாங்க. '' நீங்க பிடிச்சா லவ் பண்றீங்க. வேணும்னா கல்யாணம் பண்றீங்க. அதே வேண்டாம்னா டைவர்ஸ் பண்றீங்க. உங்களை புரிஞ்சிக்க ட்ரை பண்ணி பண்ணி டயர்டா ஆகுதுடா. யார்ரா நீங்க?" அதேதான் நானும் கேக்கறேன். யார்ரா நீங்க? பாட்டு BGMனு போட்டு இந்த கண்றாவிய புனிதமாக்கி கல்லா கட்டிடுறாங்க. ஜென் ஆல்பாக்கு அமேசான்ல நியூ பிராடக் கிடைக்காது போல. படம் பிடிக்கலன்னா பூமர். பிடிச்சிருந்தா ஜென் ஆல்பா. 

 #bunbutterjam

கருத்துகள் இல்லை: