நடந்து முடிந்த US ஓப்பனில் முக்கியமான ஒரு சாதனையை நிகழ்த்தும் வாய்ப்பு சின்னருக்கு கிடைத்தது. ஆனால் அதை நடக்கவிடாமல் கார்லோஸ் கோப்பையை வென்று விட்டார். அந்த சாதனை, தொடர்ந்து இரண்டு முறை அல்லது அதற்கு மேல் கோப்பையை வெல்வது. தொடர்ந்து என்பது கேட்சிங் பாய்ண்ட். அதிகபட்சமாக மூன்று முறை தொடர்ச்சியாக வென்றிருக்கிறார்கள். ஜான் மெக்கென்ரோ இவான் லெண்டல். அதுவும் 1987 வரை மட்டுமே.
ஆனால் 2003 இல் இருந்து 2008 வரை தொடர்ச்சியாக ஐந்து முறை கோப்பையை வென்று தகர்க்க முடியாத சாதனையை வைத்திருக்கிறார் ரோஜர் பெடரர். தி மோஸ்ட் எலிகண்ட் பிளேயர் இன் டென்னிஸ். 2009 இல் ஆறாவது கோப்பையை வெல்லும் கனவை அர்ஜென்டினாவில் டெல் போட்ரோ தகர்த்திருப்பார். இல்லையென்றால் ஆறாவது தொடர் வெற்றி கிட்டிருக்கும். ஆனால் பாருங்கள், நடால், ஜோகோவிக் போன்ற டாப் டென் பிளேயர்களை தவிர்த்து டென்னிஸ் வீரர்கள் ரோஜரை க்ராண்ட்ஸ்லாமில் தோற்கடித்ததுண்டு. ஆனால் அவர்கள் அடுத்த்ட்ட ரவுண்டில் காலியாகிவிடுவார்கள்.
இதற்கு ஏன்டா சரித்திர நாயகனை சரித்திர வெற்றி பெற விடாமல் தடை செய்தீர்கள் என்பது போல இருக்கும். ஆனால் நாயகர்களின் பழைய புராணத்தை தேய்ந்த ரிக்கார்ட் போல் பாடுவதினால் தற்போதைய இளம் வீரர்களின் திறமையை கவனிக்கத் தவறவில்லை. சின்னரும் அல்கராசும் சேர்ந்து கடந்த எட்டு க்ரண்ட்ஸ்லாமை கைப்பற்றியிருக்கிறார்கள். தலைக்கு நான்கு என பிரித்துள்ளார்கள். பெடெரர் ஜோகோவிக் மற்றும் நடாலுக்குப்பிறகு ஒரு ஆதிக்கம் இப்பொழுது ஆரம்பமாகியிருக்கிறது. அதற்கு sinkaraz என்று ஒரு பேரும் டென்னிஸ் உலகி உருவாகியிருக்கிறது. நாம் சிங்கராசு என்று அழைப்போம். டென்னிஸ் மிக மிக நல்ல ஜாம்பவான்களின் கைகளில் தற்போது தஞ்சமடைந்திருக்கிறது. ஆனால் எது எப்படியோ, சிங்கிள் ஹேண்டட் பேக் ஹண்ட் இல்லாத ஒரு டென்னிஸ் மேட்ச்சை பார்ப்பதற்கு பீஸ் இல்லாத எம்டி பிரியாணியை சாப்பிடுவது போல் உள்ளது. #USOpen #sinner #Alcaraz #RogerFederer #nadal #Djokovic #tennis

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக