புதன், டிசம்பர் 13, 2006

காதலி(?)

நான் தான் கோபாலகிரிஷ்ணன்.யோசிக்க வெண்டாம்.கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இங்கு தான் இந்த பிள்ளையார் கோவில் முக்கு சமீபத்தில் இருக்கும் PWD ஆஃபிஸ் என்று சொல்லப்படும் பாழடைந்த கட்டிடத்தில் வேலை பார்க்கிறேன். இல்லை அப்படி சொல்லிகொண்டு திரிகிறேன்.

இவ்வளவு வருடங்கள் அப்படி ஒன்றும் பிரச்சினை இல்லை.எங்களுக்கு என்று ஒரு கோட்பாடுகள் உண்டு.எங்களுக்கு என்றால் அரசு ஊழியர்கள்.நாங்களே முடிவு செய்து கொள்வோம் .மூன்று மாதம் வேலை என்றால் மூன்று மாதம் ரெஸ்ட்..மூன்று மாதம் இந்திய அரசியல் பிரச்சினைகள், ஆஃபிஸ் கிசுசுக்கள், என்று ரிலாக்ஸ்ட் ஆக இருப்போம்.மீதம் மூன்று மாதம் இதை திட்டம் இடுவதில் கழியும்.உண்மையான அரசு ஊழியன்.

இதில் என்ன பிரச்சினை என்று கேட்பது காதில் விழுகிறது.இன்று காலையில் எப்பொழுதும் போல் டேபிலில் முழங்கையை மடித்து வைத்து தூங்கி கொன்டிருக்கும்பொழுது தற்செயலாக பார்க்கிரேன்.நான் படித்த அதே காலேஜிலிருந்து டென்டெர்.நான் செய்த புண்ணியமா இல்லை காலேஜ் செய்த பாவமா என்று தெரியவில்லை.அந்த வேலையை நான்தான் முடிக்க வென்டும்.படித்த காலேஜ் என்பதால் மனசாட்சி படி கமிஷன் பார்க்காமல் வேலை செய்ய முயற்சிப்பது என்று முடிவு செய்தேன்.

இங்குதான் என்னுடைய பிரச்சினை ஆரம்பம் ஆகியது.என்னுடய ஞாபகங்கள் ஜம்போ ஃப்லைட் வேகத்தில் பதினைந்து வருடங்கள் பின்னுக்கு சென்றன. அதிகமான மார்க் எடுத்ததால் ரசியாவுக்கு மருத்துவம் படிக்க செல்ல முயற்சி செய்த நாட்கள்.தமிழ்நாட்டில் சேர நல்ல காலேஜ் கிடைக்கவில்லை(உண்மை அதுவல்ல).வேறு வழி இல்லாமல் என்னுடய கௌருவமான மார்குக்கு(மார்க் ஞாபகம் இல்லை)ஒரு நல்ல பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது.அப்படி சொல்வதை விட அங்கு யாரும் ஸீட் கேட்க வில்லை என்பதால் எனக்கு கிடைத்தது.மொத்தம் 23 பேர் சேர்ந்திருந்தார்கள்.அவர்களும் அப்படிதான்.

அந்த 23 பேரில் நிர்மலாவும் ஒருத்தி .சத்தியமாக பேர் மாற்றவில்லை.அப்பா அம்மாவோடு வந்து ஹாஸ்டெல் பார்த்து பெட்டி படுக்கை, வாலி இதர சாமன்களோடு தரை இறங்கியே அன்றே ஒன்றிரண்டு நண்பர்கள் பிடித்தாய்விட்டது.இப்போது அது முக்கியம் இல்லை.அவலளுடன் பேச வெண்டும்.

கொக்கு ஒற்றை காலில் நிற்பது போல் தவம் இருக்க ஆரம்பித்தேன்.இவ்வளவு தீவீரம் ஏன் ஏற்பட்டது என்றால் பார்த்த உடனே அவளிடம் அனுமதி கேட்காமலே அவளுடன் ஆஸ்திரேலியா, ஆல்ப்ஸ் இன்னும் வேறு என்ன இடங்கள் உன்டோ அங்கெல்லாம் சென்று டூயட் பாடினேன்.ஆனால் ஐந்து நிமிடம் இல்லை.நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் ஒடும்.இதன் காரணமாகவே ஒரு முறையாவது பேச வேண்டும் என்று ஒரு ஆசை.

ஏதொ ஒரு மதிய வேலையில் உள்ளே சென்ற புளியோதரை செரிக்காமல் சுத்தி கொண்டிருந்தபோது எதிரில் தென்பட்டாள். ஆனால் அவள் நெற்றியில் பொட்டு இல்லை.கூடே இருந்தவன் அதை சொல்லுடா என்ட்று உசுப்பேத்த அவள் கடந்து சென்றவுடன் ‘bindi என்று கத்திவிட்டு திரும்பிவிட்டேன். ஆனால் மதியமே ஒரு பொட்டிட்டுகொன்டு அழகாக வந்தாள்.சும்மா இருப்பேனா?.உடனே ஆல்ப்ஸ் மலை சென்று விட்டொம்.எனக்கு இது வாடிக்கையாகவே போயிருந்தது

காலேஜ் கல்ச்சுரல்சைத்தான் மறக்கமுடியாது.பாடல் ஆடல் நடனம் என்று காலேஜ் கலை கட்டிருந்தது.அவள் ஏதோ ஒரு பாட்டு பாடுகிறாள் என்று எப்படியோ தெரிந்துகொண்டேன்.உடனே ஸ்நாக்ஸ் கமிட்டியிலிரிந்து விலகிவிட்டேன்.என்ன காலேஜ் கணக்கில் ஒரு ஸில பப்ப்ஸ்கள் மினஞ்சியிருக்கும்?.எப்படியாவது ஒரு பாட்டு பாடவேண்டும் என்று நிறைய முயற்ச்சி செய்தேன்.ம்ஹும். ஆனால் அதிலும் ஒரு சின்ன குறை இருந்தது.இசை மேதை போல் பாட வராது என்றாலும் அக்ஷர சுத்தமாக வாசித்து விடுவேன்.அட்ஜஸ்ட் செய்து விடுவார்கள் என்று பார்த்தால் நடக்கவில்லை.

நாடகம் ஒன்றில் அவள் நடிப்பது தெரிந்தது.சரி பாட்டு தான் வரவில்லை கூத்து கட்ட இறங்குவோம் என்று முடிவெடுத்து கெஞ்சி கூத்தாடி மனதில் நடிகர் திலகதையும் நவரசத்தை முகத்திலும் சுமந்துகொண்டு ஒரு ரோலை மிகுந்த சிரமத்தில் வாங்கினேன்.சுக்கிரன் எனக்கு உச்சத்தில் இருந்தான் போலும்.அவளுக்கு ஜோடியான ஒரு கேரக்டெர்.அப்பொழுது வரை கடவுளை கும்பிடாத நான் ஊரில் உள்ள எல்லா கடவுளுக்கும் நன்றி சொல்லிவிட்டு கூத்து கட்ட அயுத்தமானேன்.மூன்று நாள் பிராக்டிஸ்.கடைசியாக மேடையில் ஒரு தடவை.ஆக மொத்தம் அவளுக்கு அருகில் நின்ற நான்கு முரையும் ஆல்ப்ஸ் மற்றும் அமேரிக்கா

நாடகத்தில் பழகியதை வைத்து சிறிது சிறிதாக பேச ஆரம்பித்தேன்.அவள் வீட்டில் ஆரம்பித்து காலேஜ் வரை எல்லாவற்றையும் பேசினோம்.எல்லோரும் கடலை என்று சொல்வார்கள்.ஆனால் இது அப்படி தோன்றவில்லை.அதையும் தாண்டி ………...

ஏதொ ஒரு சந்தர்பத்தில் அவளுக்கு மாமா பையன் இருக்கிறான் என்று தெரிய வந்தது.அதை விட மோசம் என்னவென்றால் அவனும் அவளும் ஒரே வயது என்பது தான். உங்களுக்கு வெடி வெடிப்பது போல் ஏதாவது சத்தம் கேட்டது என்றால் அது கண்டிப்பாக என் சின்ன இதயம் தான்.அவனது முகம் கூட பார்ததில்லை.ஆனல் அவன் எனக்கு வில்லன் ஆகி நானும் அவனும் காட்டில், ஒடும் ட்ரைன் மீதேறி, தண்ணிக்குள்(எனக்கு நீச்சல் தெரியாது),வானத்தில் பரந்துகொண்டே, காரில் துப்பாக்கி வைத்துகொண்டு , மிக உயரமான கட்டிடத்தில் என எல்லா இடத்திலும் சண்டை போட்டோம்.எல்லா சண்டையிலும் அவன் என்னிடம் அடி வாங்கினான்.

கொஞ்ச நாள் கழித்து செல்போனில் நான் சொன்ன அந்த புனித……....யை ஆரம்பித்தொம். விடியலும் அவள் மெசஜில்தான். தூங்க தொடங்குவதும் அவள் குட்நைட் சொன்ன பிறகு தான்.பல நாட்கள் பழகிய பின்பும் ஏதொ என் உள் மனதில் தடுத்துகொண்டே இருந்தது.நல்ல நண்பர்கள் என்று வெளியில் நான் சொல்லிகொண்டேன்.அவள் உண்மையாக சொன்னாள்.நான் அதை பொய்யாக சொன்னேன்.ஏதொ ஒரு முறை திருமணத்திற்கு என்னை கூப்பிடுவாயா என்று அவள் கேட்ட பொழுது நீ இல்லையென்றால் என்னுடய திருமணம் நடக்காது என்று சொல்லிவைக்க, அவளுக்கு புரிந்தமாதிரி தெரியவில்லை.நான் புரிந்திருக்கும் என்ற நம்பிக்கையில் ஆல்ப்ஸ் மலை போய்விட்டேன்.

ஓரு வழியாக காலேஜ் முடிந்து எல்லோரும் சம்பிரதாயாமாக ஒவ்வொருவரிடமும் ஆG வாங்கினோம்.அவளும் 'என்றும் நட்புடன்’ என்று எழுதி குடுக்க நான் ‘என்றும் மறவாத’ என்று எழுதி குடுக்க காலேஜ் வாழ்க்கை ஒரு வழியாக முடிந்தது.அப்பொழுதும் சொல்ல தோன்றாமல் அமைதியாக கன்னங்களில் கண்ணீரோடு விடை பெற்றொம்

பதினைந்து வருடம் ஆகி விட்டது.இருவருமே நலமாக இருக்கிறோம்.அவள் கணவனொடு அமெரிக்காவில், நான் என் மனைவியொடு இங்கே.இப்பொழுதெல்லாம் அதிகம் பேசதோன்றவில்லை.ஏதொ சுர்ரென்று கையில் கடிக்கிறது.இருங்கள் பார்க்கிறேன்.பாடவதி கொசு தான்.முதலில் கொசுவர்த்தி வைத்தால் தான் நிம்மதியாக தூங்க இல்லை இல்லை வேலை பார்க்க முடியும்.இதற்கு மேல் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை.ஏற்கனவே சொன்னது போல் உண்மையான அரசு ஊழியன் என்பதால் டீ குடிக்க செல்கிறேன்.பிரிதொருமுறை உங்களை சந்திக்கிறேன்.

வெள்ளி, டிசம்பர் 08, 2006

எனக்கு இது மிகவும் பிடிதிருக்கிறது

எனக்கு இது மிகவும் பிடிதிருக்கிறது.
ஆம்! நானே ராஜா. ஆனால் மந்திரி நானில்லை
என்னகென்று ஒரு மந்திரி சபை.
சில பல சேவகர்கள் என் சேவை அறிந்து செய்ய.
அதிகம் ஆசை படாததால் அந்தபுரத்தில்
ஒரே ஒரு ராணி !(சத்தியமாக உண்மை இல்லை)
எங்கு படை எடுத்து சென்றாலும் வெற்றி முழக்கம்.
என் தினவெடுத்த தோள் கண்டவுடன்
எதிரி நாட்டு மன்னன் அடி பனிகிறான்.
கப்பம் பலர் கட்டுகிறார்கள்.
எனக்கு இது மிகவும் பிடிதிருக்கிறது!


அதோ அங்கே சாலையில் ஒருவன்
என்னை பார்த்து முறைக்கிறான்
“யாருடா நீ ? “ ஒங்கி ஒரு குத்து
உடனே கீழே விழுந்தான்.
அதோ காரில் பந்தாவை ஒருத்தன்.
கார் உடனே எனக்கு சொந்தமாகியது.
போலிஸ்காரர்கள் என்னிடம் ஒன்றும் கேட்பது
இல்லை. லைசென்ஸ் காமிக்க முடியாது என்று
சொல்கிறேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை.
எனக்கு இது மிகவும் பிடிதிருக்கிறது!



வானத்தில் பறந்து கொண்டிருக்கிறேன்.
ஏபிஜே அப்துல் கலாமோடு.
அவரிடம் நான் அப்பாயின்ட்மன்ட் வாங்கவில்லை.
அவர் என்னிடம் வாங்கினார்.
பல நாடுகள் செல்லுகிறேன்.
சென்ற இடமெல்லாம்
ரத்தின கம்பள வரேவெற்பு!
இது எனக்கு புதிது இல்லை.
எனக்கு இது மிகவும் பிடிதிருக்கிறது!

இதோ மீண்டும் என் பின்னால் பெண்கள் கூட்டம்.
வேண்டாம் என்று அடிக்கடி சொல்கிறேன்.
அதிகமாய் என்னிடம் எதிர்பார்கிறார்கள்
என் ஆட்டோகிராபை!
நான் விரும்பிய என் காதலியுடன்
அல்ப்ஸ் மலையிலும் ஆகாயத்திலும்
டுயட் அரங்கேறியது செலவில்லமால்.
எனக்கு இது மிகவும் பிடிதிருக்கிறது!



என்னுடைய ராஜ்ஜியம் இது.
உலகம் முழுவதும் என் கட்டளையில்.
சொடக்கு பொடும் நேரத்தில்
ஆரவாரம் என்ன? அரங்கேற்றம் என்ன?
நினைத்த நேரத்தில் எல்லாம் நடக்கிறது.
கர்ப்பக மரம் அதிகம் வளருகிறது
என் வீட்டின் முன்னால்.
போதும் எனக்கு சேவை செய்வதை நிறுத்துங்கள்.
போதும் போதும் என்று சொல்லி எனக்கு அலுக்கிறது.
எனக்கு இது மிகவும் பிடிதிருக்கிறது

இது என் கனவுலகம்

ஞாயிறு, அக்டோபர் 29, 2006

படித்ததில் பிடித்தது

அவசரம் ஆரவாரம் இவற்றினிடையே அமைதியாய் நடப்பாய்!
ஒசையில்லா மோனதின் ஒப்பற்ற அமைதியை எண்ணி பார்!இயன்றவரையிலும் எல்லோரிடமும் அன்பு காட்டு-ஆனால்
அடிமை படாதே!உண்மையே பேசு!
அதை மெல்ல தெளிவாக பேசு!
மடத்தனமாக பேசுபவர்கள் சொல்வதையும் கேள்,
அவர்களுக்கும் கதைகள் உண்டு மறக்காதே!
காட்டு தனமான முரடர்களிடமிருந்து தள்ளியே இரு!
அவர்கள் வெறுப்பில் உருவானவர்கள்.
மற்றவர்களோடு உன்னை ஒப்பிட்டு பார்க்காதே!
அதனால் மிஞ்சுவது மன உளைச்சலும் கசப்பும் தான்!
உன்னை காட்டிலும் மேலானவர்களும், கீழானவர்களும்
இருக்கத்தானே செய்வார்கள்?உன் சாதனைகளையும்
திட்டங்களையும் மகிழ்வோடு எண்ணி பார்!
செய்யும் தொழில் எத்தனை எளிமை ஆனாலும்
அதில் கண்ணும் கருத்துமாய் கவனம் செலுத்து.
காலசக்கரம் மாறிச்சுழலும்போது அது கை கொடுக்கும்!
ஏமாற்றுகின்ற உலகில் ஏமாறாமல் கவனமாக இரு!
அதற்காக எல்லாமே ஏம்மாற்று தான் என எண்ணாதே!
அதிலுள்ள நல்லவைகளைக் கண்டு கொள்ளத்தவறாதே!
உயர் நோக்குடன் வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.
உயர்வு தருகின்ற பெருமை மிகப்பெரியது!
நீ நீயாக இருக்கப் பழகு! அன்பு காட்டுவதாக நடிக்காதே!
அதற்காக வெறுப்பை வளர்த்துக்கொள்ளாதே!
வெறுமையிலும் வறட்சியிலும் கூடப் பசுமயான புல் தழைக்கவில்லையா?இளமையின் வளமையை முழுவதுமாகத் தந்து முதுமையை ஏற்று கொள்!மன உறுதியை வளர்த்துகொள், தாழ்மையில் அது உதவும்
கற்பனை உலகில் துயரப்படாதே சோர்வும் தனிமையும் அச்சம்தரும்
கட்டுப்பாடுகள் உனக்குத் தேவை தான்!
அதில் கொஞ்சம் கனிவும் இருக்கட்டுமே!
நீ இந்த பிரபஞ்சத்தின் குழந்தை!
வளரும் மரங்களை போல,வானத்து நட்சத்திரங்களைப்போல
உனக்கும் இங்கே வாழும் உரிமை உண்டு!
உனக்கு புரிகிறதோ இல்லையோ இந்தப்பரந்த
பிரபஞ்சம் உனக்காகவே மடியை விரிக்கிறது
நீ எதை கடவுள் என்று நம்புகிறாயோ-அதைஅமைதியாக மனதில் நினை!உனது கனவுகள் கடும் முயற்சி, மற்றும் வாழ்கையின்
ஆரவாத்திலும்உனது ஆன்மாவை அமைதியாக வைத்துக் கொள்!
பொய்மை சிதைந்த கனவுகள்; மனச்சோர்வு இவைகளின்
நடுவே இந்த உலகம் மிக அழகானது!
கவனமகாச் செல் மகிழ்ச்சியை எட்டி பிடிக்க முயற்சி செய்!
-Anonymous
written in paldimore st.paul's church