ஒருசேர இரண்டு படங்களையும் பார்த்தாகிவிட்டது.
ஹாட்ஸ்பாட் 1. ஒரு A சர்டிபிகேட் அந்தாலஜி மூவி. நடு ஹாலில் பார்க்க
முடியாத அளவுக்கு பாதகக் காட்சிகள் ஏதும் இல்லை. இயக்குனர் விக்னேஷ்
கார்த்திக் ஒரு ப்ரொட்யூசரிடம் கதை சொல்லும் இயக்குநராகவே வருகிறார்.
நான்கு கதைகள். முதல் மூன்று கதைகள் தரம். நான்காவது போதனை. முதல்
மூன்றுடன் ஒட்டவே இல்லை. மிகக் குறைந்த பட்ஜெட்டில் நல்ல ஒரு ஸ்கிரிப்ட்
ரைட்டிங்கிற்கு உதாரணம்.
ஹாட்ஸ்பாட் 2. U/A. இரண்டே கதைகள்.
முதல் கதையில் தம்பி ராமையாவின் ட்விஸ்ட் அதகளம். ஆனால் அவரின் அட்வைஸ்
ஓவர்டோஸ். டைம் ட்ரேவல் பேசும் இரண்டாவது கதை ஒரு மஸ்ட் வாட்ச். அதுவும்
இறுதியில் வரும் அந்த ட்விஸ்ட் 👌 ரகம்.
ஜாலியாக பார்க்கலாம். பிரைம் வீடியோ.
#HotSpot2Much #Hotspot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக