மத்யமாவதி ராகத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் எந்தவொரு இசை கச்சேரியின் முடிவிலும் மத்யமாவதி பாடல் தான் இறுதியாக பாடப்படும் பாடலாக இருக்கும். வான் வருவான்’, ‘சந்திரனை தொட்டது யார்’, ‘தைய்ய தைய்ய தையா தையா’, ‘நீ தானே எந்தன் பொன் வசந்தம்’, ‘வனமெல்லாம் ஷெண்பகப்பூ’ போன்ற பாடல்கள் மத்யமாவதி. அவ்வளவு ஏன்? ஆஸ்கர் வாங்கிய ‘நாட்டு நாட்டு’ பாடலும் இந்த ராகம் தான்.
இப்பொழுது ஆகாய கங்கைக்கு வருவோம். இந்த ரொமான்டிக் பாடலை மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி பாடியிருப்பர். ஒரு சில எண்ணங்கள்.
1. பாடலில் வரும் இடையிசைக்கே தனி விவாதம் வைத்துக்கொள்ளலாம். ராகதேவனின் ஆசீர்வாதங்கள் அவை. முதல் இடையிசையில் ட்ரம்ஸ், கீபோர்ட், புல்லாங்குழல் மற்றும் வயலின். இரண்டாம் இடையிசையில் வாத்தியங்களுடன் கோரஸ். அதுவும் இரண்டாம் இடையிசையின் வயலின் பிட்டை என்னவென்று சொல்லுவது. மென்சோகத்துடன் அப்படியே நெஞ்சை பிழிந்து விடும் ஒரு இசை. கேட்டுப்பாருங்கள்.
2. முதல் சரணம் மலேசியா வாசுதேவனுடையது.
காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே
மேள தாளம்..ஓஓஒஒ
காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே
மேள தாளம்..ஆ ஆ ஆ ஆ
காலை வேளை பாடும் பூபாளம்
மன்னா இனி... உன் தோளிலே...
படரும் கொடி நானே
பருவப் பூ தானே
பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ…
இதில் ‘காலை வேளை பாடும் பூபாளம்’ என்பதை கிட்டதட்ட் ஹை பிட்ச்சில் மலேசியா வாசுதேவன் முடிக்கிறார். அதற்கு அடுத்த வரிகள் இன்னும் இரண்டு கட்டை மேலே. உடனே மூச்சுவாங்கி அவரே பாட முடியாது என்பதால் பெண் பாடுவது போல் வரிகள் அமைத்து அதை ஜானகி லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்ய வைத்திருப்பார் ராஜா.
தேவை யாவும் ஹே ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
தேவை யாவும் ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
பூவை நெஞ்சில் நாணம் போராடும்
ஊர்கூடியே உறவானதும்
தருவேன் பலநூறு
பருகக் கனிச்சாறு
தளிராடும் என் மேனி தாங்காது உன் மோகம்
சரணம் இரண்டிலும் இதே தான். முதலில் ஜானகி. ‘பூவை நெஞ்சில் நாணம் போராடும்’ என்று ஒரு ஹை நோட்டில் முடித்து பின் மலேசியா வாசுதேவன் உச்ச ஸ்தாயில் ‘ஊர்கூடியே உறவானதும்’ என்று ஆரம்பிப்பார்.
3. அதுபோல, இந்த ‘ஹே ஹே ஹே’ மற்றும் ‘ஓஓஒஒ’ வில் ஒரு விஷயம். முதல் சரணத்தில் இந்த ‘ஹே ஹே ஹே’ மற்றும் ‘ஓஓஒஒ’ வை ஜானகி பாடுவார். இரண்டாம் ஹே ஹே ஹே’ க்கு பிறகு ஆ ஆ ஆ ஆ என்று பாடுவார். ஆனால் இரண்டாம் சரணத்தில் இரண்டையுமே ‘ஹேஹேஹே’ மற்றும் ‘ஓஓஒஒ’ என்று தான் மலேசியா வாசுதேவன் பாடுவார்.
4. இரண்டாவது சரணத்தில் இறுதியாக ஜானகி சிணுங்கும் சிணுங்கல் உச்சம். ஒரு முறை கேட்டு பாருங்கள் இந்த வரியை ‘தளிராடும் என் மேனி தாங்காது’
5. அவ்வளவு மெனக்கெடல்களுடன் ராஜா இடை இசை அமைத்திருப்பார். ரஜினியோ தன் கண்ணாடியை நான்கைந்து முறை சுழற்றி சட்டையில் தேய்த்து ஸ்டைலாக ஒரு நடை, ஒரு போஸ் என்று அலட்டிக்கொள்ளாமல் கவனிக்க வைத்திருப்பார்.
6. ரஜினி அப்படியென்றால், ஜானகியின் குரலுக்கு நீதி கொடுக்கும் விதமாக ஸ்ரீதேவி, சிணுங்கல், தலையை அசைத்து கண்சிமிட்டல், தோளை குலுக்கி கன்னத்தில் கைவைத்து புன்சிரிப்பு, வெட்கப்பட்டு என கிறங்கடித்திருப்பார்.
எனக்கென்ன ஆச்சர்யமென்றால் இத்தனை விஷயங்கள் கொட்டி கிடக்கின்றன. ஆனால் ஒரு படத்திற்கான ஆறு பாடல்களை நாற்பத்தைந்து நிமிடங்களில் முடித்திருக்கிறார் என்றால்...எப்படி அவரால் இவ்வளவு சிரத்தையாக வேகமாக பல மாஸ்டர் பீஸ்களை கொடுக்க முடிந்திருக்கிறது.
சட்டை பைய்யில் இருந்து எடுத்து தூக்கி எறிவது போல் எறிந்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக