ஸ்விட்ச போட்டா சாம்பல் ஆயிடும்னு ஒரு கான்செப்ட் வச்சி கூலில லோகேஷ் உருட்டுனாரு. என்னா உருட்டு. அல்லா படமும் இப்போ டிராப்பு. அடுத்து, சமமர்ல பந்தல் போட்டு கொடுக்குற இலவச மோர் மாதிரி போறவன் வரவனுக்கெல்லாம் துப்பாக்கியை சும்மா தூக்கி குடுத்து ஏ.ஆர். முருகதாஸ் மதராஸினு ஒரு உருட்டு. எதுக்கு ஹீரோ போராடறான்ங்கிறதுக்கு இவங்களால ஒரு ஐடியா பிடிக்க முடியல.காசை மட்டும் கரியாக்கிடறானுங்க. அந்த வரிசைல போட்டி போட்டுட்டு நானும் வரேன்னு காட்டி படம்.
அனுஷ்கா,ஆஸ்கார் நாயகன் விக்ரம் பிரபு நடிச்ச படம். அமேசான் ப்ரைம். கஞ்சா இலை வியாபாரத்துல ஹீரோவோட அப்பா மர் கயா. அம்மா புள்ளைகிட்ட சத்தியம் வாங்கிடுது. இனிமே கஞ்சா இலை பக்கமே போகக்கூடாதுனு. அந்த தங்கப்புள்ளையும் படிச்சிட்டு ஒரு லேப்ல வேலை பாக்குது. ஆஸ்கர் நாயகன் விக்ரம் பிரபு தான் அந்த தங்கப்புள்ளை. ஒழுங்கா வேலை பாத்துட்ருக்க அந்த தங்கப்புள்ளையை தருதலையாக்க வருது நம்ம அனுஷ்கா. சிகாட்டிகள்லாம் (மலை வாழ் மக்கள்) கஞ்சா இலை கூலியா கஷ்டப்படுறாங்க. அதனால அவங்கள படிக்க வைக்கணும். ஸ்கூல் கட்டணும். நம்ம தான் அதை செய்யனும். நீ லேப்ல வேலை பாத்தா அனுபவத்தை வச்சி ஒரு கஞ்சா தயாரிக்கலாம். liquid கஞ்சா'. அப்டினு ஒழுங்கா 'இங்கு கபம் சிறுநீர் மலம் பரிசோத்திக்கப்படும்னு' வேலை பாத்துட்ருந்த தங்கப்புள்ளையை கூட்டிட்டு போய் liquid கஞ்சா தயாரிக்க வச்சி, பிஸ்னசை பெரிசாக்கி, பவுடர் கஞ்சா விக்கிற எதிரிங்க வந்து நம்ம தங்கப்புள்ளையை கொன்னுடறாங்க. அனுஷ்காவை வேற அவமானப்படுத்திடறாங்க. இங்க இண்டெர்வெல் ப்ளாக். ரெஸ்ட் என்ன.
இவங்க பாகுபலில போட்ருந்த காஞ்சிவரம் பட்டு சேலையோட அன்பறிவ், அனல் அரசு, கனல் கண்ணன் பைட் பண்ணி எதிரிகளை அழிச்சு, ஞானோதயம் பிறந்து மக்கள்ட போய், 'நாளைலேந்து பேப்பர் போடாதீங்கன்னு' சொல்ற மாதிரி 'நாளைலேந்து கஞ்சா கூலி வேலைக்கு போகாதீங்கன்னு ஒரு மூணு நிமிஷம் ஆத்து ஆத்தி அவங்க மனசை மாத்திடுது. இதான் கதை. இதுக்கு பிரம்மாண்ட ஆக்ஷன் சீன், லொகேஷன் அது இதுனு 45 கோடி செலவு. கதை கேவலமா இருக்கு. சரி, கேஸ்டிங் வச்சாவது சமாளிப்பாங்கன்னு பாத்தா, நம்ம ஆஸ்கர் நாயகனை போட்டு பல க்ளோஸ் அப் ஷாட் வச்சி அனுஷ்காவையும் நம்மளையும் கதறவிட்ருக்காங்க. அவுக தாத்தாவோட கன்னமே குலுங்கி குலுங்கி நடிக்கும்னு சொல்லுவாங்க. ஆனா நம்ம தங்கப்புள்ளை கும்கி யானைப்பாகன் கேரக்டர்லேந்தே வெளில வந்த மாதிரியே தெரில.
காதல், அழுகை, சோகம், கோவம், பொறாமை, பயம், ஆச்சர்யம், அமைதி, சிரிப்பு அப்டினு எந்த மாதிரியான எமோஷனாலும் ஒரே எக்ஸ்பிரெஷன் தான். அது ஒரு hidden gem மாதிரி பெரிய திறமை. அதனால தான் அவரை ஆஸ்கர் நாயகன்னு அன்போட கூப்பிட வேண்டிருக்கு. என்ன ஒரு பெரிய ஆறுதல்னா,
இவுக நடிப்பை முழுப்படமும் பார்த்து நம்ம கஷ்டப்பட வேண்டாம்னு, டைரக்டர் பாதி படத்துலையே இவரு கேரக்டரை முடிச்சி விட்டுடுறார். அந்த மனசு தான் சார் கடவுள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக