மனித கண்டுபிடிப்புகளில் ஆகச்சிறந்த கழிசடை என்றால் இந்த 20 லிட்டர் தண்ணீர் கேன் தான் ஒரு பொருளை எங்கு பிடித்து தூக்கினால் லகுவாகத் தூக்க முடியும் என்று ஒரு அறிவியல் கோட்பாடு இருக்கிறது. அது அந்த பொருளின் ஈர்ப்பு மைய்யத்தை (சென்டர் ஆப் கிராவிடி) பொறுத்து மாறுபடும். ஆனால் இந்த உருளையை எந்த பக்கம் பிடித்து தூக்கினாலும் முதுகு டேமேஜ் தான். அதுவும் சிறு குழந்தைகள் அல்லது பெண்மணிகள் அல்லது முதியோர்கள் மட்டும் இருக்கும் இடங்களில் இது ஒரு எமன். சில இடங்களில் பாகுபலிகளும் அவதிப்படுகிறார்கள். இரண்டு உதாரணம். நடந்தது.
1. முதியவர். இதை தூக்க முடியாத காரணத்தினால் தண்ணீர் கேன் போடுபவரை வீட்டிற்குள் அழைத்து இந்த கேனை கவிழ்த்து போட கூறியிருக்கிறார். கிட்சன் வரை வந்து சென்று இருக்கிறார்கள். வசதியாய் போய்விட்டது. அந்த வீட்டில் முதியவர்கள் இருவர் தான். இருவரும் சூப்பர் சீனியர் சிட்டிசன்ஸ் வேறு. நோட்டம் பார்த்து ஒரு முகூர்த்த தினத்தில் கிடைத்ததை லவட்டி விட்டார்கள் அந்த பிறன் பொருள் பிரியர்கள்.
2. மற்றொரு இடத்தில். நன்றாக நடமாடிக் கொண்டிருந்த முதியவர். இது போன்ற தொந்தரவு இருக்கக் கூடாது என்பதால் அவரே தூக்கி கவிழ்த்து கொண்டிருந்தார். இதே போல் ஒரு முறை தூக்கியதில் லும்பார் வெர்டிபரெட் என்று சொல்லப்படும் லோயர் பேக் காலி. வெகு நாட்கள் படுத்த படுக்கையாய் கிடந்து மீண்டார். ஆனால் முன்பு போல் நடமாட முடியவில்லை.
நானும் இந்த உருளையை வீட்டின் வாசலில் இருந்து உள்ளே தூக்கி செல்வதற்கு இரண்டு மூன்று கிளிப்கள் வாங்கி முயற்சித்தேன். ம்ஹூம். எங்கயாவது பிடித்து விடுகிறது. அல்லது பிடித்து விடாமல் இருப்பதற்கு அதிக ப்ரயத்தினப்பட வேண்டித்துள்ளது. ஒரே வழி. கவிழ்த்து போட்டு கால் பந்து உருட்டி விட வேண்டிதான். எப்படியோ அதை உள்ளே கொண்டு சென்றாலும் கூட அதனுடைய பாட்டத்தில் இதை தூக்கி கவிழ்த்துவதற்கு அலாதி முயற்சி வேண்டும். இந்தியாவில் தான் இப்படி என்றால் உலகும் முழுவதும் இதே நிலை தான். இதை டிசைன் செய்தவர்கள் கைப்பிடி வைத்து தூக்குவது போல் ஒரு டிசைன் செய்திருக்கலாம். பெட்ரோல் கேன் போல.
இந்த 20 லிட்டர் வாட்டர் கேனில் இப்பொழுது சைட் ஹேண்டில், டாப் கேப் ஹேண்டில் போன்றவை வருகிறது. என்ன இருந்தாலும் இதை லாவகமாக தூக்குவது என்பது முடியாது. அட்லீஸ்ட் ஒரு பத்து லிட்டர் கொள்ளளவு போலாவது முயற்சித்திருக்கலாம். நுண்ணுயிரி போல் கோடிக்கணக்காக உருவாக்கி விட்டார்கள். திரும்புவது என்பது மிகக் கடினம். திருமண வாழ்வில் சொல்வது போலத்தான். ஒருத்தொருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து போங்க என்பது போல இதனுடன் அட்ஜஸ்ட் செய்து தான் வாழ வேண்டும்.
கககபோ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக