புதன், ஏப்ரல் 15, 2026

கலங்காவல்

படத்தைப் பற்றி ஏகபோகமாக சிலாகித்துவிட்டார்கள். மீண்டும் அதைப் பேசி போரடிக்க விரும்பவில்லை. எனக்கு மூன்று விஷயங்கள் மிகவும் பிடித்திருந்தன.


1. இவன் தான் கொலைகாரன் என்று படத்தின் முதல் காட்சியிலேயே தெரிந்துவிடுகிறது. அதன் பிறகும் நம்மை சீட் நுனியில் அமர வைத்த அந்த திரைக்கதை, பின்னணி இசை மற்றும் நடிப்பு 

2. இதுவரை கதாநாயகனாக நடித்த மம்மூக்கா வில்லனாகவும், வில்லனாக நடித்த விநாயகன் (ஜெயிலர்) கதாநாயகனாகவும். கேட்கவே அதிசயமாக இருக்கிறதா? கொடூர சைக்கோ வில்லனாக நடித்திருக்கிறார். 74 வயதில் தனக்குரிய பிரம்மாண்ட ஹீரோ இமேஜை கீழே வைத்துவிட்டு புதியவர் போல் பரீட்சை எழுதுகிறார். அதுதான் மம்மூட்டி. 

3. கதையின் தேவையிருந்தும் ஒரு துளி கூட ஆபாசம் இல்லாமல் எடுத்திருக்கிறார். இயக்குனர் ஜிதின் ஜோஸுக்கு இது முதல் படம். முழுக்க முழுக்க எழுத்தை மட்டுமே நம்பி படம் எடுக்கின்றனர் சேட்டன்மார்கள். 

 #kalamkavalmovie #mammootty #vinayagan

கருத்துகள் இல்லை: