இந்த மாம்பழத்தை இப்படி டெஸ்ட் பண்ணிப்பாருங்கனு ஒரு நண்பர் டிப்ஸ் கொடுத்தார். ரொம்பல்லாம் மெனெக்கட வேண்டாம். நல்ல இனிப்பான ஒரு மாம்பழ வகையை வாங்கிக்கணும். என்னை பொறுத்த வரை மாம்பழத்தின் ராஜா இமாம் பசந்த் தான் எப்பவும் நம்பர் ஒன். அதுக்கப்புறம் ஒரு அஞ்சு ரேங்க் தள்ளி தான் செந்தூரம். அப்புறம் அல்போன்சா, பங்கனப்பள்ளி, தோத்தாப்புரி, நீலம், காசா லட்டு, ருமானி வகையாறலாம் வரும்.
நல்ல பழுத்த ஒரு இமாம் பசந்த்தை கழுவி கொண்டு போய் பிரீஸர்ல வச்சிடனும். குறைஞ்சது ரெண்டு அல்லது மூணு மணிநேரம் கழிச்சு அதை தண்ணில கழுவினோம்னா தோல் மட்டும் தனியா உரிச்சிடலாம். அதுக்கப்புறம் பல்லு கூச அத சாப்பிட்டு பாருங்க. மாம்பழ ஐஸ் க்ரீம் தோத்துரும். அப்டி ஒரு டெஸ்ட். அல்மோஸ்ட் மாம்பழ சீசன் முடியப்போற நேரம். இருந்தாலும் ட்ரை பண்ணிடலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக