வெகுநாள் யோசித்து கொண்டிருந்தேன். எங்கள் ஊரகத்தில் நாய் தொல்லை. ஒரு awareness போஸ்ட் போல். திரட்டிய தகவலைத் தொகுத்து போடலாம் என்று. எழுதி முடித்த கையோடு பார்த்தால் உச்ச நீதிமன்ற தீர்ப்பு. ஆஹா. தீர்ப்பு என்று சொல்வதை விட தடாலடி. நாய் வெறியர்கள் சற்று ஓரமாக நிற்கவும் என்று லெப்ட் ஹேண்டில் டீல் செய்திருக்கிறது நீதிமன்றம். அருமை. இனி பத்தி கீழே. நமது நகரில் மட்டுமல்ல. இந்தியா முழுவதும் இப்பொழுது பரவலாக இதுதான் தலையாய பிரச்சினை. தெருவில் திரியும் தெருநாய். வளர்ப்பு நாய். வெறி நாய் மற்றும் சொறி நாய்.
மனிதன் கடவுளுக்கு பயப்புடுகிறானோ இல்லையோ இந்த நாய்க்கு அவ்வளவு பயம் உண்டு. பின்னே கடித்து ஊசி போடாமல் விட்டால் இரண்டே வாரத்தில் பரலோகம் தான். எப்படி பரவுகிறது? ரேபிஸ் தொற்று கொண்ட நாய் கடித்தால் அல்லது அதன் உமிழ் நீர் நமது காயங்களில் பட்டால் தொற்று பரவும். ரேபிஸ் நாய் தான் என்று எப்படி தெரிந்து கொள்வது? அதிகமாக உமிழ் நீர் வடிவது, நடக்கும் பொழுது தள்ளாடுவது, மிதமிஞ்சிய பயம் அல்லது ஆக்ரோஷம் போன்றவை தோற்று வந்த நாய்களிடையே காணப்படும் ஒரு சில அறிகுறிகள். ஆனால் தொற்றின் வீரியத்தை பொறுத்து இந்த அறிகுறிகள் வெளியே தெரியும் அல்லது தெரியாமலும் போகலாம். எனவே நாய் என்பது ஒரு நாய் தான் என்று பொது அறிவு கொள்வது முக்கியம்.
கடித்தால் தான் ஊசி போடவேண்டுமா? இல்லை. நாயின் நகக்கீறல் பட்டாலே ஊசி போட வேண்டும். அதைத்தான் WHO சொல்கிறது. உலக சுகாதார மையம் பாதிப்பு ஏற்பட்ட உடன் என்ன செய்ய வேண்டும்? பாதிக்கப்பட்ட உடன் குழாய் தண்ணீரில் 15 நிமிடம் குறையாமல் கழுவ வேண்டும். உடனே அருகில் இருக்கும் GH அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று 1,3,7,14, 28 நாட்கள் இடைவெளியில் ஊசி போட வேண்டும். கடி தீவிரம் என்றால் ரேபிஸ் இன்ஜெக்ஷனுடன் சேர்த்து ரேபிஸ் இம்மியூனோ குளோபின் ஊசியையும் போட்டுக்கொள்ள வேண்டும். இரண்டு மாதம் மறந்துவிட்டேன். இப்பொழுது போடலாமா? கண்டிப்பாக. கடிபட்ட உடன் போடுவது கட்டாயம். சிலர் கவனக்குறைவாக இருப்பார்கள். எப்பொழுது அதை பற்றிய விவரம் தெரிய வருகிறதோ, உடனே போட்டு விடுதல் நல்லது. உயிரை காக்கும்.
ரேபிஸ் வந்தால் காப்பாற்ற முடியாதா? ரேபிஸ் தோற்று வந்துவிட்டால் நிச்சியமாக காப்பாற்ற முடியாது. பரலோகம் தான். அதற்கான மருந்து நம்மிடையே இல்லை. அதுவும் கொடூர சாவு. அலட்சியம் வேண்டாம். வளர்ப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? நாய்க்கான ஊசி போடவேண்டும். முதல் மூன்று மாதங்களில். பிறகு ஒரு வருடத்தில். அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் அந்த ஊசி போட வேண்டும். நாயை வெளியில் விடாமல் கட்டி வைத்தல் நலம். என்னதான் ஊசி போட்டிருந்தாலும், வளர்ப்பு நாய் தான் என்றாலும் வளர்ப்பவரையோ அல்லது வளர்ப்பவரின் குழந்தைகளையோ கடித்துவிட்டால் என்ன செய்ய முடியும்? ஊசி பயத்தால் அல்லது விளையாட்டு மும்முரத்தில் நாய் கவ்வியதை குழந்தைகள் கூறாது விட்டால்? நாய் வளர்ப்பவர்கள் வீட்டிலும் தவமிருந்து பெற்ற குழந்தைகள் தானே. அலட்சியம் வேண்டாம். நாயா அல்லது தன் குடும்பம் குழந்தை நலமா என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்வது நலம். 'ஊசிலாம் போட்டிருந்தேன். ஆனாலும்...' பிற்காலத்தில் இது போல் வருந்தாமல் இருக்க வேண்டும் என்றால் நாய் வளர்ப்பதை விடுவது நல்லது. ஏதேனும் தொழில் செயகிறார் என்றால், இந்த நாய் வளர்ப்பு காரணமாக மக்கள் வருகை சரிந்து தொழில் சுணக்கம் ஏற்படுவதையும் கவனம் கொள்ள வேண்டும்.
அந்த சுற்றுப்புறத்தில் இருப்பவர்கள் என்ன செய்யவேண்டும்? வீட்டிற்குள் நடப்பவற்றிற்கு நாம் பொறுப்பாக முடியாது. என்று நாய் தொந்தரவு பொது வெளியில் வருகிறதோ அன்றே அதன் உரிமையாளரும் அதற்கு பொறுப்பாகிறார். நாய் கடித்து குற்றம் நிருபிக்கப்பட்டால் IPC 289 செக்ஷன் படி ஆறுமாத தண்டனை பெறுவதற்கு உரியவராகிறார். மேலும் IPC 337, IPC 338, IPC 304A போன்ற சட்டங்களும் செல்லுபடியாகும். கடித்தால் தான் என்றில்லை. துரத்தினாலும் IPC 504/506 இருக்கிறது. சாட்சிக்கு சுற்றிலும் கேமரா இருக்கிறதே. சமீபத்தில் நமது ஊரகத்தில் ஒருவரை வளர்ப்பு நாய் கடித்துவிட, அவர் போலீஸில் புகாரளித்து, வீட்டின் உரிமையாளரை ஒரு நாள் விசாரணை செய்து, கண்டித்து எச்சரித்து அந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார்கள். இவ்வளவுக்கும் அத்தனை முறை அந்த வீட்டின் உரிமையாளரிடம் எத்தனையோ பேர் கூறியும் அவர் கண்டு கொள்ளாமல் இருந்தது தான் இந்த வினை. பொதுமக்கள் தெருவில் நடமாடும்பொழுது ஒரு குச்சியை வைத்துக் கொள்வது நலம். சிறு குழந்தைகள் அல்லது வயதானவர்கள் என்றால் தனியாக செல்வதை தவிர்க்கவும். துரத்தினால் ஓட முற்படாதீர்கள். நாய் இன்னும் குஷியாகிவிடும். மேலும் துரத்தும். கண்ணோடு கண் நேரே பார்ப்பதை தவிர்க்கவேண்டும்.
அரசாங்கம் என்ன செய்கிறது ? அரசாங்கம் என்ன செய்கிறது என்பதை விட அரசாங்கத்தை செய்ய விட முடியாமல் தடுப்பது எது என்ற கேள்வி சரியாக இருக்கும். விலங்குகளுக்கான ப்ளூ க்ராஸ் அமைப்பு இந்த நாய்களை பிடிக்க, கொல்ல விடாமல் கோர்ட் வரை சென்று தடை வாங்கி வைத்திருக்கிறது. லீகலாக எதுவும் செய்வதற்கில்லை. மனிதன் வாழ்வதற்கான ஒரு நல்ல சூழ்நிலையை மிருகங்கள் சுவீகரித்திருக்கின்றன என்பதை என்னவென்று சொல்ல? தேடிப்பாருங்கள். கிட்டத்தட்ட இந்தியாவில் 20000 பேர் ஒரு வருடத்தில் இறக்கிறார்கள். இது உலக அளவில் 36 சதவீதம். இன்று உயர்நீதிமன்ற உத்தரவு வந்திருக்கிறது. 8 வாரங்களுக்குள் தெரு நாய்களை அகற்ற வேண்டும் என. நற்செய்தி என்று ஒரு பெண் நள்ளிரவில் தன்னந்தனியே நடமாட முடிகிறதோ, அன்று தான் நாடு சுதந்திரம் அடைந்ததாக காந்தி கூறுகிறார்.
அந்த வகையில் பார்த்தால் பகல் நேரத்தில் கூட நம்மால் நிம்மதியாக நடமாட முடியாமல் இருப்பது மிகப்பெரும் கையறு நிலை.
#dogmenace #Rabies #SupremeCourt

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக