புதன், ஏப்ரல் 15, 2026

சாமானிய நாயகர்கள்

மனைவி பிரிவதாக அறிவித்த ஒரு வருடத்திற்குப் பிறகு, ஏ ஆர் ரஹ்மான் மனம் திறந்திருக்கிறார். குடும்பத்திற்கு போதுமான நேரத்தைச் செலவிடவில்லை என ஒரு பேட்டியில் வருத்தத்தைத் தெரிவித்திருந்தார். சில நாட்களுக்கு முன், இசைஞானி இதுபோலவே கூறியிருப்பார். ஆனால், கர்வத்துடன். ஒரு நிகழ்ச்சியில் யுவன் மற்றும் கார்த்திக்கைப் பார்த்து 'உங்களுடைய சிறு வயதில் நான் உங்களுடன் நேரம் செலவழிக்கவில்லை என்று வருந்தியிருப்பீர்கள். அந்த வருத்தம் வேண்டாம். அதுதான் இந்த 'சிம்பொனியாக' மாறியிருக்கிறது' என்பார். இவர்கள் மட்டுமல்ல. குடும்பத்திற்கு நேரம் செலவிடாமல், தொழிலில் அதீத கவனம் செலுத்துபவர்களின் குடும்பத்தினரிடம் அதிருப்தி இருந்து கொண்டே இருக்கிறது. 



வெளி உலகத்திற்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், நான்கு சுவர்களுக்குள் அந்த ஓசை இருக்கும். அவ்வாறு மனத்தாங்கல்கள் இல்லையெனில், தம் சுகதுக்கங்களைப் முழுவதுமாக புறந்தள்ளி துணைகள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இவற்றையெல்லாம் கவனிக்கும்போது, புகழ் வெளிச்சம் இல்லாமல், தான் உழைக்கும் நேரம் போக, குடும்பத்தினருக்கும் நேரம் செலவிட்டு, இடையிடையே நிறைவேறாத தன் கனவுகளைத் துரத்தி வாழ்ந்துகொண்டிருக்கும் சாமானிய நாயகர்களின் வாழ்வு மிகவும் நிறைவானது. 

 #ilayaraja #arrahman

கருத்துகள் இல்லை: