LGBTQ+
Lesbian, Gay, Bisexual, Transgender தெரியும். அது என்ன Q?
Q என்றால் Queer, முரணான என்று அர்த்தம். அதற்குப் பிறகு ஒரு+ வருகிறதைக்
கவனித்தீர்களா? இந்த ஐடென்டிட்டி வகைப்படுத்துதல் இன்னும் முடியவில்லை.
தினுசு தினுசாக ஏதேனும் பேர் வைத்துக் கொண்டே போவார்கள் போல.
ஆணாகப் பிறந்தாலும் மனத்தால் பெண்ணாக உணர்வது அல்லது பெண்ணாகப் பிறந்தபின்
தன்னை ஆணாக உணர்வது transgender பிரிவில் வருகிறது. சுருக்கமாகக்
கூறவேண்டுமென்றால், அக மற்றும் புற பாலின ஒவ்வாமை காரணமாக அவ்வாறு
உணர்கிறார்கள்.
ஆனால் ஒரே பாலின கவர்ச்சி, bisexual மற்றும் Queer
கேட்டகிரிகளை accept செய்து கொள்ளமுடியவில்லை. மனிதர்களைத் தவிர்த்து சில
விலங்குகளிடம் கூட இதுபோன்ற சிக்கலான உறவுகள் காணப்படுகின்றன.
என்னுடைய ஆதங்கம், இந்த LGBQ+ உறவுகளை (ட்ரான்ஸ்ஜெண்டர் தவிர்த்து) வெகு ஜன
பத்திரிக்கை, சினிமா, புத்தகம், அரசியல்வாதிகள் மற்றும் பிரபல ஆளுமைகள்
மூலம் வெகுவாக நார்மலைஸ் செய்கிறார்கள் என்பது தான். டிரான்ஸ்ஜெண்டர் பற்றி
இங்கு நான் எதுவும் கூறவில்லை. இறைவன் படைப்பு.
வெளிநாட்டு
சினிமாக்களில் LGBQ+ மிகச் சாதாரணம். சமீபத்தில் ஸிட்ரேஞ்சர் திங்க்ஸ்
இறுதி பாகத்தில் கூட தேவையே இல்லாமல் வில் கதாபாத்திரத்தை Gayவாக
காண்பித்திருப்பார்கள். என்ன நிர்பந்தமோ புரியவில்லை. சொன்னேன அல்லவா.
பொதுப்படுத்துவது. 'நிறைய பேர் இருக்காங்கப்பா' என்கிற தோற்றத்தை
சித்தரிப்பது.
அங்குதானே என்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட
நேரத்தில், இங்கும், நம் தமிழ்நாட்டிலும் நுழைந்து விட்டது. தமிழ்
சினிமாவில், தற்போது வரும் படங்களில் எல்லாம், வெகு இயல்பாக, ஏதோ
வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல், இந்த LGBQ+ உறவுகளை
திணித்துவிடுகிறார்கள். ஆரம்பத்தில் வேட்டையாடு விளையாடுவில் ஆரம்பித்தது.
கோவா, காதல் என்பது பொதுவுடைமை, ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை என
இந்தப் பட்டியல் நீளும். ஆரம்பத்தில் கிண்டல் கேலியாக இருந்த நிலை மாறி,
தற்போது அவர்களின் உணர்வுகளை மதிக்கும் ஒரு பரிமாணத்தைக் கையில்
எடுத்திருக்கிறார்கள்.
முன்பெல்லாம் couple பிரெண்ட்லி என்று
தங்கள் ஹோட்டலை விளம்பரப்படுத்தியவர்கள், தற்போது LGBTQ+ பிரெண்ட்லி
என்கிறார்கள். LGBTQ+ என்பதற்கென்றே தனி அமைப்புகள், நிகழ்வுகள்,
திரையிடல், ஊர்வலம் என மெட்ரோ நகரங்கள் ஒரு அடையாளம் தருகின்றன.
இதை அங்கீகரிக்கவில்லை என்றால் அவர்கள் நவ நாகரிகத்தில் பின்தங்கியவர்கள்
என்ற ஒரு மாய பிம்பம் மெதுவாக கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
LGBQ+ மட்டுமல்லாது, இயற்கைக்கு முரணான வேட்கை கொண்டவர்களும் இந்த கூட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு குளிர் காய வாய்ப்புண்டு.
அது இருக்கட்டும். உனக்கு LGBQ+ மனதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று
யாரேனும் முட்டுகுடுக்க வந்தார்களேயானால், அவர்கள் வீட்டில் ஒருவர் (மகனோ,
மகளோ, தந்தையோ, தாயோ, கணவனோ, மனைவியோ) LGBQ+ என்றால் ஏற்றுக்கொள்ளும்
மனப்பக்குவம் உண்டா?
நாகரீகம் என்கிற போர்வையில் மிகப்பெரியதொரு அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
கலாச்சாரச் சீர்கேடு!
#lgbtqindia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக