கௌதம் மிகவும் பிரயத்தனப்பட்டு 16 கிலோவைக் குறைத்தான். இன்னும் 10 குறைக்க வேண்டும். ஆனால் முடியவில்லை.
ஈபி போஸ்டில் ஒட்டியிருந்த விளம்பரத்தை பார்த்து ராஜ வைத்திய சிகாமணி காமராஜரிடம் சென்றான்.
'இந்த பௌடரை நைட்டு தண்ணில கரைச்சு ஊற வச்சிடுங்க. காலைல வெறும் வயித்துல குடிக்கணும். முப்பதே நாள்ல…..'
'பத்து கிலோ குறைஞ்சிடுமா?'
'இல்லை. பௌடர் காலியாயிடும். திருப்பி வாங்கிக்கோங்க. ஆறு மாசம் போதும்' என்றார்
'நாளைக்கு கணபதி ஹோமம் பண்ற வேளைல கண்டதையும் குடிச்சிட்டு படுத்துக்காத' என்றாள் அம்மா.
சட்டை செய்யாமல், ஒரு டம்ளரில் இரண்டு ஸ்பூன் கரைத்து ஊற வைத்தான்.
மறுநாள் காலை ஆவலுடன் எழுந்து வந்து பார்த்தபொழுது நுரை ததும்பி இருந்தது.
முகர்ந்து பார்த்தவனுக்கு சகிக்கவில்லை. மூக்கை பொத்திக்கொண்டு
குடித்துவிட்டு நடைப்பயிற்சி சென்றான்.
அரை மணி நேரம் கழித்து
வீட்டிற்குள் நுழையும் போது அவன் அம்மா பால்காரிடம் பேசிக்கொண்டிருந்தது
இவன் காதில் விழுந்திருக்க வேண்டாம். 'வீடு முழுக்க தெளிக்கனுமுனு
வச்சிருந்தேன். வாங்கி வச்சதை காணோம். நீங்க இன்னொரு சொம்பு கோமியம் கொண்டு
வந்துடுங்க'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக