ராஜாதி
ராஜனென்ற ராஜா
MSV காலம் தொட்டே இந்த ட்ரெண்ட் தொடங்கிவிட்டது. எந்த ட்ரெண்ட் என்றால் ஜோடியாக டூயட் பாடுவதில் யார் சிறந்தவர் என்று. ஏனென்றால் அப்போதைய விமர்சனங்களும் ஆண் பாடகர் மற்றும் பெண் பாடகர் என இருவரையும் ஒப்பிட்டே எழுதப்பட்டன. இந்த ஆரோக்கியமான போட்டி பாடகர்களை வளர்த்தெடுத்தது மட்டுமல்லாமல் பாடல்களையும் சேர்த்தே மெருகூட்டி வளர்த்தெடுத்தது. பயனடைந்தது இசையமைப்பாளர் மட்டுமல்ல ரசிகர்களுக்கும் போனஸ் தான்.
அதன் நீட்சியில் ஒரு வெகுமதி தான் இந்த 'பாட வந்ததோர் கானம்' பாட்டு. சில கூர்நோக்குகள்.
1. சுஷீலா மற்றும் யேசுதாஸ் இருவரும் போட்டி போட்டு பாடியுள்ளனர். சந்தேகமின்றி வெற்றி பெறுவது யேசுதாஸ் தான் (என்னளவில்).
2. பாடலின் முதல் ஐந்து நொடிகள் மெதுவாக மிக மெதுவாக மெலடி போல் ஆரம்பித்தாலும் அடுத்த பத்து நொடிகளில் வரும் சுஷீலா மற்றும் கோரஸின் ஆலாபனைகள் பாடலின் மனநிலையை வெகுவாக உயரச்செய்துவிடுகிறது. Mood Elevating Song.
3. வழக்கம் போல ராஜாவின் ராஜாங்கம் அதகளம். Solo flute இல் ஜமாய்ப்பது என்ன, கோரஸில் தேவதைகளை பறக்க விடுவது என்ன? பல்வேறு வாத்தியக்கருவிகளை வைத்து நடத்தும் orchestration தான் என்ன. என்ன. என்ன. என்ன.
4. இந்த பாடலில் யேசுதாஸ் ஏன் ஒரு படி மேலே என்றால்,
4a. பெண் பாடு பாடும் அனுபல்லவியில் 'கள்ளூறும் பொன் வேளை' மேல் ஸ்தாயி குறைவாக இருக்கும். அல்லது ஒரு punch கம்மி என்று சொல்லலாம். அதே 'கள்ளூறும் பொன் வேளை' யேசுதாஸ் பாடும்போது உள்ள வித்தியாசத்தை கவனிக்க முடியும்.
4b. சரணம் 1 யேசுதாசுக்கு. 'கண்ணில் குளிர்காலம்.' என்கிற பாடல் வரியில் யேசுதாஸ் பிரவாகிக்கும் பாவம் (பாவனை) சரணம் 2இல் சுஷீலா பாடும் 'இமைகள் உறங்காது..' வில் கொஞ்சம்ம்ம் கம்மி.
4c. எல்லாவற்றுக்கும் மேலே, சரணம் 1 இல் high pitch இல் சுஷீலா பாடும் 'அன்பே...எந்நாளும் நான் உந்தன் தோழி' என்ற வரியில் ஒரு breath gap. அதை ராஜா ஒரு சோலோ flute இல் நிறைத்திருப்பார். whereas, சரணம் 2 இல் யேசுதாஸ் எடுக்கும் high pitchஇல் 'தேனே...கங்கைக்கு ஏன் இந்த தாகம்' என்பதில் மூச்சு விடாமல் 'கடலும் வழி விடும்' என்று பாடி தான் முடிப்பார். ராஜா அதே flute soloவை இவர் தம் கட்டும் இடத்தில் backgroundஇல் உபயோகித்திருப்பார்.
5. சுஷீலாவின் வாய்ஸ் மெல்லிய சோகத்தை வெளிப்படுத்தும் பாடகி
ஜென்சியின் குரலை நினைவுபடுத்துவது போல் உள்ளது.
6. ஆனபோதிலும், கதாநாயகிக்காக குரலை மாற்றாமல் authentic சுஷீலா வாய்ஸ் இந்த பாடலில் வெளிப்படும்.
7. சரணம் 1 இல் ஜெயசந்திரன் குரல் போல தெரிந்தாலும் பின்பு ஒரிஜினல் யேசுதாஸ் குதித்தோடி வெளிவந்துவிடுகிறார்.
8. பாடலின் இறுதியில் கோரஸுக்கு பின் சுஷீலா பாடும் 'லாலா' evergreen hello tunes ரகம்.
9. பாடல் படமாக்கிய விதம் பல கவனச்சிதறல்களை கொண்டுள்ளதால்,
ஆடியோ லிங்க் மட்டும்
பகிர்ந்திருக்கிறேன்.
பாடலின்
வரிகள் கீழே.
பெண் :
பாட வந்ததோர் கானம்
பாவை கண்ணிலோ நாணம் (2 times repeat)
கள்ளூறும்
பொன் வேளை
தள்ளாடும்
பெண் மாலை
இளமை
வயலில் அமுத மழை விழ
பாட
வந்ததோர் கானம்
பாவை
கண்ணிலோ நாணம்
சரணம்
1
ஆண்:
ராஜமாலை தோள்சேரும்
நாணமென்னும்
தேனூறும் (2 times repeat)
கண்ணில்
குளிர்காலம்
நெஞ்சில்
வெயில்காலம்(2 times repeat)
பெண்:
அன்பே (high pitch)
அன்பே
எந்நாளும்
நானுந்தன் தோழி (Breathe gap. flute solo)
பண்பாடி
கண்மூடி
உனது
மடியில் உறங்கும் ஒரு கிளி
ஆண்:
பாட வந்ததோ கானம்
பாவை
கண்ணிலோ நாணம்
******************************************
சரணம்
2
பெண்:
மூடிவைத்த பூந்தோப்பு
காலம்
யாவும் நீ காப்பு(2 times repeat)
இதயம்
உறங்காது
இமைகள்
இறங்காது(2 times repeat)
ஆண்:
தேனே (double high pitch)
தேனே
கங்கைக்கு ஏனிந்த தாகம் (No gap for Breathe gap. flute in the background)
உல்லாசம்
உள்ளூரும் நதிகள்
விரைந்தால்
கடலும் வழிவிடும் (breathless for three lines)
பல்லவி
பெண்:
பாட வந்ததோர் கானம்
பாவை
கண்ணிலோ நாணம்
தள்ளாடும்
பெண் மாலை
இளமை
வயலில் அமுத மழை விழ
லா லா லா லா லல லா லா
லா
லா லா லா லல லா லா
