கடந்த வார நீயா நானா பார்த்துக் கொண்டிருந்தேன்.
லவ் என்று
ப்ரபோஸ் செய்யும்போது ‘இல்லை இல்லை ஃப்ரெண்ட் ஆகத்தான் நினைத்துப்
பழகினேன்’ என்று ஆப்பு அடிக்கும் பெண்கள் ஒருபுறம். எதிர்பக்கம், வேறு
யார்? ஏமாந்த சோணகிரிகள் தான்.
ஆண்களின் கதை பாவமாகத்தான் இருக்கிறது.
நண்பர்கள் பல பேர் கூடி குழுவாக இருக்கும்போது தேடிவந்து இவனுக்கு மட்டும்
ஊட்டி விடுவார்களாம். கேண்டீனில் பெஞ்சில் படுத்தால் மடியில்
படுத்துக்கொள் என்று தலையைத் தூக்கி வைத்துக் கொள்வார்களாம். விடியவிடிய
போன் பேசுவது, மற்றொரு பெண்ணுடன் பேசாதே என்று பொசசிவ்னஸ் காமிப்பது,
சாப்பிட்டாயா?, தூங்கினாயா?, உனக்காக சமைத்து எடுத்து வந்திருக்கிறேன்
என்று எக்ஸ்ட்ரா கேர் காமிப்பது, இது போல etc etc. இவை எல்லாவற்றையும்
கவனித்து, ‘சரி லவ் தான் போல’ என்று அவன் ப்ரோபோஸ் செய்யப் போனால் ‘உன்னை
அப்படிப் பாக்கலை. ஃப்ரெண்டாத்தான் பாத்தேன்’ என்று கழட்டி விட்டு
விடுகிறார்கள். Exceptional கேஸ் இதில் சேர்த்தி இல்லை.
அரங்கத்திற்குப் பேச வந்தப் பெண்கள், மேலே சொன்னவை எல்லாம் லவ் சிக்னலே
இல்லை என்கிறார்கள். இதைக்கூட விடுங்கள். ‘லவ் யூ’ என்றால் ‘லவ் யூ டூ’
என்று கூறுவது கூட, பெண்களைப் பொறுத்தவரை லவ் சிக்னல் இல்லையாம்.
பிறகு எது தான் லவ் சிக்னல்?
எந்தப் பெண்ணும் தெளிவாகப் பதில் கூறவில்லை. எல்லாம் மழுப்பல்.
ஆக ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. வீட்டில் கழுத்தைக் கவ்வும்
அளவுக்கு நெருக்கடி வரும் வரை எந்த முடிவு எடுக்காமல் அலைக்கழிப்பது
என்பதில் தெள்ளத் தெளிவாக இருக்கிறார்கள். இந்த சோனகிரிகளும் இது புரியாமல்
குழம்பிப் போய் எல்லா நேரமும் அந்தப் பெண்ணுக்கு எஸ்கார்ட் போலத்
திரிகிறார்கள்.
பேராண்டிகளா, கையெடுத்துக் கும்பிடுறேன். வேணாம்டா.
#neeyanaana
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக