புதன், ஏப்ரல் 15, 2026

ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்

கோணங்கித் தனமான ஆராய்ச்சியின் காரணமாக mutation cross breeds டைனோசர்கள் ஜனிக்க ஆரம்பிக்கிறது. மனிதனின் இதயத்தை வலுப்படுத்தும் ஆராய்ச்சிக்காக அதன் ரத்த மாதிரி தேவைப்படுகிறது. இறந்த டைனோசர்களிடம் இருந்து அல்ல. உயிருடன் உள்ள டைனோசர்களிடம் இருந்து கலெக்ட் செய்ய வேண்டும். அந்த டைனோசர்களின் ரத்த மாதிரியை கலெக்ட் செய்யும் பொருட்டு ஒரு குழு பயணம் செய்கிறது. வெற்றி பெற்றார்களா என்பது தான் கதை. இதுவரை வந்த அத்தனை ஜுராசிக் படங்களிலும் இந்த படம் ஒரு தனி ரகம் தான். ஆரம்பம் முதல் இறுதி வரை கட்சிகள் விறுவிறு என்று நகர்கின்றன. சொல்லப்போனால் பதைபதைப்பாக இருக்கிறது. VFX, எடிட்டிங், 3D எபெக்ட் என எல்லாமே தரம். தனி ரகம் என்று சொன்னேன் அல்லவா? திரில்லர் ஒரு காரணம். மற்றொன்று ஆங்காங்கே தெளித்து விடப்பட்டுள்ள தத்துவங்கள். இதற்கு முன்னால் வந்த படங்களில் இது போல் கவனித்தது இல்லை. 



அதில் எனக்கு பிடித்த ரெண்டு. 

1. நாம் புத்திசாலி என்றும் டைனோசர்களை முட்டாள் என்றும் கூறுகிறோம். முட்டாள் டைனோசர்கள் 167 மில்லியன் ஆண்டுகள் இங்கு வாழ்ந்திருக்கின்றன. ஆனால் மனிதன் ஒரு மில்லியன் ஆண்டுகள் தாண்டுவானா என்பதே கேள்விக்குறிதான். தன் இனத்தையே அடையாளமின்றி அழிக்கும் அளவுக்கு புத்திசாலி. 

2. மற்றவர்கள் நம்மை பற்றி புறம் பேசுவதை எப்பொழுதும் கவனிக்கக் கூடாது. அப்படி கவனித்தால் அவர்கள் பேசுவதை உண்மை என்று நிரூபிக்க ஆரம்பித்து விடுவோம். Must Watch

கருத்துகள் இல்லை: