மோகன்லால், மாளவிகா மோஹனன், சொல்லாமலே சங்கீத நடிப்பில் வெளிவந்துள்ள படம். ஜியோ ஹாட்ஸ்டாரில். மாளவிகா மோகனின் அப்பா இறந்துவிட அவரது இதயம் மோகன்லாலுக்கு பொருத்தப்படுகிறது. அப்பாவின் இதயம் பொருத்திய நபரை நேரில் சந்திக்க விரும்பும் மாளவிகா, அதன் பிறகு நடக்கும் சிறு சிறு கலாட்டாக்கள் என இதம் தரும் காட்சிகளாக படம் விரிந்து ஒரு அழகான பயணமாகிறது.
படத்தில் வலிந்து திணிக்கப்படாமல் இணைந்திருக்கும் காமெடி களேபரங்கள், ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமான கிளைக்கதை அல்லது பின்புலம் என ரசிக்க தாராளமாய் கொட்டித்தருகிறது இந்த ஹ்ருதயபூர்வம். உதாரணமாக, கர்னலின் நண்பராக வரும் லாலு அலெக்ஸ், கர்னலின் மனைவி சங்கீதா, நர்ஸாக வரும் சங்கீத் பிரதாப், மச்சான் சித்திக் என ஒவ்வொருத்தரின் பின்புலமும் சுவாரஸ்யமானவை. முடிந்த அளவு எங்கெல்லாம் நகைச்சுவை அளிக்க முடியுமோ அங்கெல்லாம் வஞ்சனை இல்லாது நகைச்சுவையை சேர்த்திருக்கிறார் மூத்த இயக்குனர் சத்யன் அந்திக்காடு. லாலேட்டனுக்கு மாளவிகாவின் மேல் என்ன மாதிரியான உணர்வு ஏற்படுகிறது என்று சொல்லாமல் கதை நகர்ந்ததில் தெரிகிறது சாமர்த்தியம்.
சில பேருடன் மட்டும் விடைபெற்ற பின்பும் இன்னும் கொஞ்ச நேரமும் பேசிக் கொண்டிருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றும் அல்லவா, அது போல் இன்னும் கொஞ்ச நேரம் படத்தின் நீளத்தை அதிகரித்திருக்கலாமோ என்று ஏங்க வைக்கும் ஒரு படம் தான் ஹ்ருதயபூர்வம்.
#Hridayapoorvam #mohanlal #malavikamohanan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக