புதன், ஏப்ரல் 15, 2026

கூலி

ரஜினி எப்பவும் போல் சூப்பர். டான்சு, பைட்டு, எமோஷன் எல்லாம் கிளாஸ். அவருக்கு பிரமாதமா வரும் காமெடி ஏரியா இதுல இல்லை. ஜெயிலர் மற்றும் வேட்டையனில் பார்த்த நடுக்கம் இங்கு இல்லை. விரைப்பா இருக்கார். சத்யராஜுக்கு ஸ்பேஸ் கிடையாது. அல்லது குறைவாக உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். 

காமெடி ஒன் லைனரில் பிச்சி உதறும் லொள்ளு சபா மாறன் இங்கே துணைக் கதாபாத்திரமாக. சுருதி ஹாசன். 'தம்பி. சாரி. பாப்பா. நீ அழுதுகிட்டே இரும்மா' என்று சொல்லியிருப்பார்கள் போல. அது அழுகையா அல்லது...நோ கமெண்ட்ஸ். உபேந்திரா பாத்திரம் பரவாயில்லை. ரஜினியுடன் கொஞ்ச நேரம் பயணிக்கிறது. ரியல் வில்லனாக சௌபின் சாஹிர். அசத்தல். சைக்கோத்தனம், டேன்ஸ் என எல்லாவற்றிலும் அசத்தல். ஆனால் வில்லன் கதாபாத்திரம் தொடர்ச்சியாக தெளிவாக எழுதப்படவில்லை. கல்யாணியாக வரும் ரச்சிதா கதாபாத்திரத்தின் ட்விஸ்ட் சற்றே எழுந்து உட்கார வைக்கிறது. அது எப்படி பாஸ் ஒழுங்கா எழுதுவோம் என்பது போல் அந்த ட்விஸ்டுக்கு பிறகு டம்மியாக்கி குழப்பியிருக்கிறார்கள். மெய்ன் வில்லனாக நாகர்ஜுனா. 


ஆள் அசத்தலாக இருக்கிறார். 65 வயதுக்குள்ள முடியா அது. நடையா அது. என்ன ஒரு ஸ்டைல். எல்லாம் இருந்தும் அவரையும் இறுதியில் ஒரு டம்மி டப்பாசாக்கிருக்கிறார்கள். அமீர் கான், இறுதியில் பீடி குடித்து பான்பராக்கு வாயர்களை திருப்தி படுத்துகிறார். ஹரே ஓ சம்போ. கேவலமான கேமியோ ரோல். சிக்கிடு, அரங்கம் அதிரவே தீம், நாகர்ஜுனா தீம் போன்றவை நன்றாக இருக்கிறது. இருந்தாலும் ஜெயிலர், வேட்டையன் தீமுக்கு கால் தூசி பெறாது. ரைட்டிங்கும் ஒரு காரணமாயிருக்கலாம். எப்படி அந்த ஸ்க்ரிப்டை படித்தாலும் அனிருத்துக்கு ம்யூசிக் போடும் மூட் வந்திருக்காது. கூலிக்காக போராடுகிறார் என்றால் அது சம்பந்தமான காட்சிகளே இல்லை. சத்யராஜ் நட்பு காட்சிகள் அறவே இல்லை. 

மிக்சி ஜாரில் புஷ் மாற்றுவது போல் ஹார்ட்டை மாற்றிவிடுகிறார்கள். ஆனால் அந்த ஆழ் கடலில் பாடி எரிப்பதுதான் பிரச்சினை போல. அடேங்கப்பா. என்ன மாதிரியான ஒரு சேர் அது. அத்தனை சூட்டிலும் எரியாமல் இருக்கிறது. அந்த தம்பி பாப்பா சத்யராஜிடம் எப்படி வந்து சேர்கிறது போன்ற தெளிவு இல்லை. வெறும் ஹீரோயிசம். முழுக்க முழுக்க கத்தி குத்து, துப்பாக்கி, குடி போதை, டேபிள் மேல் ஏறி நின்று ஆடுவது, சட்டையை கழட்டி விட்டு சிலுப்பிக் கொள்வது, கையில் ஏந்தி பிராந்தி குடிப்பது, பீடி, சிகரெட், அரிவாள். லோகேஷின் பேவரைட்டான கொக்கைன் இங்கே மிஸ்ஸிங். அய்யாவுக்கே போர் அடித்து விட்டது போல. ரியல் லைப் வில்லன்கள் பண்ணாத கூத்தையெல்லாம் இங்கே லோகேஷின் வில்லன்கள் செய்கிறார்கள். 

ஏதோ படு ஷாக்கிங்கா அந்த மிஸ்டரி இருக்கிறது என்று பார்த்தால், ஹார்ட் ட்ரான்ஸ்பிளெண்டெஷன் என்று உருட்டியிருக்கிறார். காக்கிசட்டை துரை செந்தில்குமாரிடம் இருந்து ஒரு பேஜை உருவியிருக்கிறார் போல. இறுதி ஐந்து நிமிடங்கள் பிளாஷ்பேக்கை இடைவேளைக்கு பின் வைத்து இன்னும் கொஞ்சம் நீட்டி வைத்திருக்கலாம். ஏதோ கிர்ணி பாயசம் போல் இறுதியில் கொடுத்திருக்கிறார்கள். ஸ்டேட்டுக்கு ஒரு பயலை கூப்பிடு. கேரளா, ஆந்திர, கர்நாடகா, பாலிவுட். அப்புறம் ஹைப்பை ஏத்து. ஒரு லீவ் நாள்ல ரிலீஸ் பண்ணு. ஏழு நாளைக்கு டிக்கட் புக்கிங்கை ஓபன் பண்ணி வை. போட்ட காசை எடு. பத்து நாளுக்கப்புறம் ஆயிரம் கோடி வசூல்னு ரசிக குஞ்சுகளை ஹைப்பிலேயே வை. அவ்ளோதான் பிசினஸ். ஆக மொத்தம் ஒழுங்கா ஒரு கதை எழுதி படம் எடுக்குற மாதிரி தெரியலை. போதை கலாச்சாரம் தான். இந்த லட்சணத்துல கமலையும் ரஜினியையும் சேத்து வச்சி படம் எடுக்குறாப்புல. அப்டி என்ன கிழித்துவிட்டார் என்று இவரை புக் செய்திருக்கிறார்கள். எல்லா பழத்தையும் பிழிஞ்சி ப்ரூட் மிக்ஸர் குடுத்த மாதிரி பல காட்சிகளை சுட்டு உருவி படம் எடுக்கிற அட்லீட்ட குடுத்துருக்கலாம். ஜமாச்சிருப்பார். 

எது எதுக்கோ தடை போடுற கோர்ட் கொக்கைன் கனகராஜ் படத்துக்கு ஒரு தடா போடணும். சுருக்கமா சொன்னா 120 ரூபா இல்லை. ஒரு 300 எம்பி டவுன்லோடுக்கு கூட ஒர்த் இல்லை. 

 #coolie #Rajnikanth #lokeshkanagaraj #shoubinshahir

கருத்துகள் இல்லை: