உண்மைக்கு மூன்று முகங்கள் உண்டு. நம்மால் சொல்லப்படும்
உண்மை, எதிராளியின் பார்வையில் உள்ள உண்மை. மூன்றாவது எது நடந்ததோ அந்த
மாற்றமுடியாத உண்மை. இதை புரிதலுக்கும் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது.
சிறு வயதில் ஒரு விளையாட்டு பொம்மையுடன் எவ்வளவு நெருக்கமாக
இருந்திருப்போம். கட்டிப்பிடித்துத் தூங்கும் அளவுக்கு மகிழ்ச்சியை கொடுத்த
அதே பொம்மையை வயதான பின் அதே அளவு நேசித்தோமா என்றால் இல்லை. ஆனால் சிறு
வயது ஞாபகங்களை பொக்கிஷமாக நினைவூட்டும் ஒரு பொருளாக மாறியிருக்கும். பின்
ஒருநாள் ஷோகேஸில் அழகுப்பொருளாக உக்காந்திருக்கும். உண்மையில் அது ஒரு
பொம்மை மட்டுமே. நமது அறிவு மற்றும் புரிதலுக்கு ஏற்ப ஒவ்வொரு முறையும்
அதற்கு ஒரு உருவத்தை கொடுத்துவிடுகிறோம்.
சில நேரங்களில்
ஏற்படும் புரிதல்கள், இவ்வளவு நாட்கள் இதை இவ்வாறு புரிந்து கொள்ளாமல்
விட்டுவிட்டோமே எனும் வருத்தத்தை தருகின்றன. இந்தப் புரிதலில் உள்ள மாற்றம்
தான் நம்மை நம்மிடம் மட்டுமல்ல பிரபஞ்சத்துடனும் இன்னும் நெருக்கமாக
ஆக்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக