டென்னிஸ் உலகின் மிக அதிர்ச்சிகரமான சம்பவம் 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அதை புரிந்துகொள்ள மோனிகா செலஸ் மற்றும் ஸ்டெபி கிராப் பற்றிய பின்னணி அவசியம். மார்டினா நவரத்திலோவா போன்ற ஜாம்பவானுக்குப் பிறகு மகளிர் டென்னிஸில் தனது ஆதிக்கத்தை உறுதியாக நிலைநாட்டிக் கொண்டிருந்தவர் ஸ்டெபி கிராப். அதே காலகட்டத்தில் இளம்புயலென களத்தில் நுழைந்தார் மோனிகா செலஸ். தொடர்ச்சியாக நான்கு கிராண்ட்ஸ்லாம் பைனல்களில் ஸ்டெபி கிராபை தோற்கடித்தார்.
சம்பவம் நிகழ்வதற்கு முன்பு ஒன்பது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக உயர்ந்தார். ஆனால் 1993 ஏப்ரலில் ஜெர்மனியில் நடந்த ஒரு டோர்னமெண்ட், அவரது வாழ்க்கைப் பாதையையே மாற்றியது. போட்டி நடந்து கொண்டிருக்கும்போது மைதானத்துக்குள் ஓடி வந்த ஒருவன், செலஸை கத்தியால் குத்தினான். விசாரணையில் அவன் ஸ்டெபி கிராபின் தீவிர ரசிகன் என்றும், மனநிலை பாதிக்கப்பட்டவன் என்றும் அறிவிக்கப்பட்டு, இரண்டே ஆண்டுகளில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டான். ஆனால் டென்னிஸ் உலகின் தங்க மங்கையாக ஜொலிக்க வேண்டிய மோனிகா செலஸ், அந்த சம்பவத்துக்குப் பிறகு மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். 1996 இல் கடைசியாக பெற்ற ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்துடன் அவரது வெற்றிப் பயணம் மெல்ல முடிவுக்கு வந்தது. #MonicaSeles

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக