சனி, ஆகஸ்ட் 21, 2021

The Heist of the century 2020


வெறும் பொம்மை துப்பாக்கியை வைத்தே வங்கியிலிருந்து 100 கோடி பணத்தைத்திருட முடியுமா?
பணயக்கைதிகளை உள்ளே பிடித்து வைத்திருக்கும்போதே, அங்குள்ள வயதான பாட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடி கேக் வெட்டி கொண்டாட முடியுமா?
நூறு கோடி அடித்த பின்பும் துப்பு கிடைக்காமல் நான்கு வருடங்கள் வெளியே சுதந்திர பறவையாக சுற்ற முடியுமா?
14 வருடங்கள் தண்டனை கிடைத்தும் இரண்டே வருடங்களில் வெளியே வந்து தான் கொள்ளையடித்தது எப்படி என்பதை ஒரு முழு திரைக்கதையாக எழுதி அர்ஜென்டைனாவின் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்த படமாக எடுக்க முடியுமா?

2006 ஆம் வருடம் Banco Rio கொள்ளைச்சம்பவத்தை அடிப்படையாக, இல்லை அதை அப்படியே சுவாரசியமாக திரையில் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள், அதுவும் கொள்ளைக்கு திட்டம் தீட்டிய மாஸ்டர் மைண்டை வைத்தே.



மாஸ்டர் மைண்டான அலெக்சாண்டர், நிஜ வாழ்க்கையிலும் ஒரு சுவாரசியமான கதாபாத்திரமாக இருக்கிறார். தத்துவவாதி. "The virtue that is known as virtue is annulled". அவரது முத்துக்கள். ஒரு அப்செஷனில் கொள்ளையடித்துவிட்டார் என்று தெரிகிறது. அப்செஷனுக்கே இப்படியென்றால் ப்ரொபெஷனலாக இறங்கியிருந்தால், அனால் அது அவருடைய cup of tea இல்லை. கத்தியின்றி ரத்தமின்றி ஒரு கொள்ளை என்று போலீஸ்காரர்களுக்கு டேக் லைன் வைத்துவிட்டு டேக்கா குடுத்தது அலெக்சாண்டரின் அதீத நக்கல்.

தமிழ் டப்பிங்கில் இன்னும் அதகளப்படுத்தியிருக்கிறார்கள். உதாரணத்திற்க்கு இவர்களின் கார் ஒரே இடத்தில் நிற்பதை சந்தேகப்பட்டு அங்குள்ள பெண்மணி போலீசுக்கு தகவல் கொடுக்கிறார். போலீஸ் வந்து பார்த்து இவர்களிடம் பேப்பர் செக் ஏயது விட்டுவிடுகிறார்கள். வண்டியிலிருக்கும் தாத்தா அந்த பெண்மணியைப்பார்த்து சொல்கிறார். Original வசனமாக "you dont need a security for this street" எனறு வரும். ஆனால் தமிழில், 'நீங்க இருக்கிறதுனால இந்த தெருவுக்கு நாயே தேவையில்லை" என்று போகிற போக்கில் தட்டிவிட்டிருக்கிறார்கள். படம் முடிந்தும் தாத்தாவின் கரகர குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

Must Watch - a comedy robbery movie.

Rotten Tomatoes - 100%
IMDB - 7.2 

ஏழு கடல் ஏழு மலை

லேனா தமிழ்வாணனின் பயணக்கட்டுரைகள் அந்தக்காலத்தில் மிகப்பிரபலம். பயணம் செய்ய முடியாதவர்களுக்கு லேனாவின் பேனாவின் வழியாக சிங்கப்பூரையும், அமெரிக்காவையும், ஜப்பானையும் உத்தேசமாக கற்பனை செய்து ரசித்தனர். அந்த இடத்தையும் அதன் சிறப்பையும் ஒரு சுற்றுலா வழிகாட்டி போன்று வர்ணனை செய்திருப்பார்.


இந்த பயணக்கட்டுரைகளை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றவர் எஸ்.ரா. அவர் எழுதிய கட்டுரைகளில் பயணம் தான் உயிர்நாடி. அந்த பயணத்தில் சந்திக்கும் மனிதர்களையும் அவர்தம் வாழ்வியலையும் உணர்வுகளையும் பேசினால் அது எஸ்.ராமகிருஷ்ணனின் 'தேசாந்திரி'. எஸ்.ராவை பொறுத்தவரை பயணம் என்பது, முடிவெடுத்த அந்த நிமிடத்திலேயே எதனை பற்றியும் யோசிக்காமல் தொடங்குவது. உதாரணமாக எழுதிக்கொண்டிருப்பவருக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குக்கிராமத்திற்கோ அல்லது லடாக்கில் பனிப்பொழிவையோ காண வேண்டும் என்று தோன்றினால் பேனாவைக்கூட மூடாமல் எந்த ஒரு முன்னேற்பாடுமின்றி காலணி அணிந்து வெளியே கிளம்பிவிடுவது. தேசாந்திரி புத்தகம், பயணம் என்ற வார்த்தைக்கு நாம் வரையறை செய்து வைத்திருக்கும் அர்த்தத்தை மாற்றிவிடும் என்பதில் மறுபேச்சிற்கில்லை.




இவ்வாறு பயணம் மற்றும் பயணம் சார்ந்த எழுத்துக்களையும் ரசிப்பவர்களுக்காண விருந்து தான் 'ஏழு கடல் ஏழு மலை' என்ற நாவல். எழுத்தாளர் நரன். கொம்பையா என்ற ஒற்றை மனிதனை, அவனது வாழ்வை அவன் பயணிக்கும் வழித்தடம் மூலமாக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பை உவகையாய்த்தருகிறது. கொம்பையாவின் பிறப்பு, அவர் அன்னை, சுதந்திரத்திற்கு முன் கிராமங்களில் ஆங்கிலேயர்கள் உதவியது, பண்ணையார் வீடு, அதுனுள்ளே நடக்கும் துரோகம் என போகிறபோக்கில் எந்த திணிப்பும் இல்லாமல் நம்மால் பயணிக்கமுடிகிறது. இலக்கில்லாமல் பயணம் செயகிறது.கதை தந்தை வழி மகன் வழி என இரண்டு காலங்களில் இட்டுச்செல்கிறது. மகன் வழியில் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாய் துன்பப்படுவர்களின் வாழ்வை கண்முன்னே நிறுத்துகிறது. கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் சித்திரங்கள். தந்தையானாலும் மகனானாலும் இருவரும் பயணம் செய்துகொண்டேயிருக்கின்றனர். மகன் கிடைக்கும் லாரி, பேருந்து என எல்லாவற்றிலும் பயணிக்க தந்தை வழியில் கொம்பையா மேற்க்கொள்வது நடை பயணம் மட்டுமே. பயணம் பயணம் என பயணம் மட்டுமே கதை முழுவதுமே. மனிதனின் நெருங்கிய நண்பனான மாடும் கொம்பையாவுடன் இறுதிவரை பயணிக்கிறது. மாடும், மாட்டைச்சார்ந்த அறிவியலையும், மாட்டுச்சந்தையில் நடக்கும் விறுவிறுப்பும் இதுவரை வந்திடாத புத்தாக்கங்கள். கொம்பையாவினால் ஈர்க்கப்பட்டு அவருடன் பயணம் செய்து வாழ்வியலை கற்றுக்கொள்ள முயல்கிறான் கரியன். பயணமே வாழ்வு. இறுதியில் கொம்பையா இன்றி அவனுக்கான பயணத்தை, வாழ்வைத்துவங்குகிறான்.

அவனுடன் நாமும் !!! 

திட்டம் இரண்டு

ஒரு கொலை வழக்கின் மர்ம முடிச்சை அவிழ்க்கும் துப்பறியும் சினிமா வெற்றி பெறுவதற்கு தேவையான காரணீயாக இருப்பது, இறுதி வரை கொலையாளி யார் என்பதை அந்தரத்தில் நிறுத்தி வைக்கும் சாதுர்யம்.




அந்த பரபரப்பான திரைக்கதையை எழுதி இயக்கியதோடு மட்டுமில்லாமல், திரைமொழியில் பேசுபொருளாக இயக்குனர் எடுத்திருப்பது கொலையை அல்ல என்று இறுதியில் தெரியும் நமக்கு, அது இன்னுமொரு அதிர்ச்சியூட்டும் உள்ளீடு.

D16 போன்று, அதுவரை பார்த்த காட்சிகள் இறுதியில் 'அட' என்று வேறு ஒரு பரிமாணம் பெறுவது, இயக்குனர் ஒரு தேர்ந்த கதை சொல்லி என்பதை நிரூபிக்கும் திரைமொழி.

அவ்வாறு அட சொல்ல வைத்த எதைப்பேசினாலும், spoiler ஆக மாறிவிட வாய்ப்பிருப்பதினால், அவற்றை தவிர்த்திருக்கிறேன்.

அழுது ஆர்ப்பரித்து சோக முகத்துடன் சமூகத்தை புறஞ்சொல்லி ஆவணப்படம் போல் எடுத்திருக்க வேண்டிய ஒன்றை, பார்வையாளர்கள் இறுதிவரை இருக்கை நுனியில் இருக்குமாறு திரைக்கதை அமைத்ததோடு மட்டுமில்லாமல் அதில் வெற்றியும் கண்ட Vignesh Karthick மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்களுடன் அன்பும்