புதன், ஏப்ரல் 15, 2026

இளங்கோ குமரவேல்

பார்க்கவே பாவமாக இருக்கும் அப்பிராணி முகமா?, கடன் வாங்கி குடும்ப பாரத்தை சுமக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் தலைவனா?, நம்பிக்கைத் துரோகத்திற்கு ஆட்படும் ஒரு ஏமாளி கதாபாத்திரமா? கூப்பிடு இளங்கோவை என்னும் அளவுக்கு இவர் நடிப்பு தனி ரகம். இவர் முகத்தை ஸ்க்ரீனில் பார்த்தாலே ஒரு பதைபதைப்பு வந்து விடும். சமீபத்தில் வந்த தக் லைஃப் இவர் வெறித்த பார்வையுடன் மரணித்த காட்சியை மறக்க முடியுமா? அதுமட்டும் தானா, வில்லன் கதாபாத்திரத்திலும் சைக்கோத்தனமான டெரர் காமிப்பதில் கில்லி. ராதா மோகனின் அனைத்து படங்களிலும் ஆஜர். 



ஒரு துணை கதாப்பாத்திரமாக மட்டுமே பரவலாக அறியப்படும் இவர் ஒரு படு பயங்கர தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். மெத்தட் ஆக்டிங்கில் புலி. உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் நாடகத்தை எடுத்துச்சென்றதில் இவருக்கு முக்கிய இடமுண்டு. 2500 பக்கங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலை நான்கு மணி நேரமாக மாற்றிய கதாசிரியர். இதன் காரண்மாகவே மணிரத்தனத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் அழைப்பு வந்தது. ஜெயமோகன் மற்றும் மணிரத்னத்துடன் இணைந்து திரைக்கதை அமைத்து கொடுத்தார். வி.கே. ராமசாமி, டெல்லி கணேஷ், எம்.எஸ் பாஸ்கர், ஆடுகளெம் நரேன், காளி வெங்கட் வரிசையில் தமிழ் சினிமாவில் இவருக்கும் ஒரு காத்திரமான இடம் உண்டு. #ElangoKumaravel @[1323516530:2048:DrKumaran Kumanan]

கருத்துகள் இல்லை: