புதன், ஏப்ரல் 15, 2026

வத்தல்

எங்கள் ஊரகத்தில் அவ்வப்போது மகளிர் சுய உதவிக்குழுவின் கண்காட்சி நடைபெறும்

வழக்கமாக இடம்பெறும் காதி சோப்பு, நாட்டுச்சக்கரை, செக்கு எண்ணெய், மூலிகைப் பொடி, ஊறுகாய் போன்றவற்றில் இந்தமுறை என்னைக் கவர்ந்தது கூழ் வத்தல்.

வெங்காயத்தோல் போல் மெலிதாக இருந்தது. ஒரு கிலோ பாக்கெட் நூறு ரூபாய்.

அன்று இரவே வாணலியில் எண்ணெய் ஊற்றி வத்தலைப் பொரித்தோம். இன்னும் மெலிதாக லேஸ் சிப்ஸ் போல் ஆனது.

அரிசி, சீரகம் என அந்தச் சுவை அபாரமாக இருந்தது.

வத்தல் விற்ற பெண்மணியின் நம்பரைக் கண்டுபிடித்து பாராட்டினேன்.

அதோடு சரி. வத்தல் வாங்கியதையே மறந்துவிட்டோம். ஒரு மாதம் கழித்து திறந்து பார்த்தால், ஏதோ நெளிவது போல் இருந்தது. புழு. ஒன்றுதான் என்று தட்டிவிட்டு வத்தலைக் கலைத்தால், பூச்சிகள் பறந்தன. ஒரு மெட்டாமார்ஃபஸிஸே நடந்திருக்கிறது.

அக்மார்க் ஆர்கானிக் வத்தல்.

கருத்துகள் இல்லை: