டென்னிஸ் உலகில் மார்டினா நவரத்திலோவா, கிரிஸ் எவெர்ட், ஸ்டெபி கிராப், மோனிகா செலஸ், மார்டினா ஹிங்கிஸ், வீனஸ் வில்லியம்ஸ், ஷரபோவா, செரீனா வில்லியம்ஸ் era என்று சொல்வதற்கு இடமுண்டு.
ஆனால் இவர்களுக்குப் பின்னால் வந்த எந்த ஒரு வீராங்கனைக்கு அந்த era அதாவது அவர்கள் ஒரு சில வருடங்கள் ஏதேனும் ஒன்று அல்லது பல க்ரண்ட்ஸ்லாம்களை வென்று கோலோச்சுவது என்பது கிடையாது. அந்த இடைவெளியை பூர்த்தி செய்வதற்கு தங்கத் தாரகையாக வந்திருக்கிறார் போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக். நடப்பில் விளையாடும் வீரர்களில் அதிக ஸ்லாம்கள். அதாவது ஆறு ஸ்லாம்கள். நான்கு பிரெஞ்சு ஓபன், ஒரு விம்பிள்டன், ஒரு யூஎஸ் ஓபன். அவருக்கு பின்னால் ஒசாகாவும் (4), சபலங்காவும் (3) தொடர்கிறார்கள். ஆனால் ஒரு மேஜர் வெல்வது என்பது அத்தனை எளிதானது அல்ல. பார்க்கலாம். அதுவும் இந்த விம்பிள்டன் பைனலில் இகா ஸ்வியாடெக் ஆடியது ருத்ர தாண்டவம். 6-0, 6-0 என்ற நேர் செட்களில், அதுவும் டபிள் பேஜல்களில் (ஒரு கேம் கூட தோற்காமல்) வென்றிருக்கிறார். அதே ஒரு பாயின்ட் கூட விடாமல் ஜெயித்தால் கோல்டன் செட். வெற்றி என்று சொல்வதைக் காட்டிலும் எதிரியை துவம்சம் செய்திருக்கிறார் என்று கூறினால் பொருத்தம். அப்படி ஒரு வெற்றி. அருமை.
இந்த பக்கம் சின்னர் மற்றும் அல்காராஸ். விமன்ஸ் டென்னிஸ் போல் அல்லாது, ரோஜர், நடால், ஜோகோவிக் eraவுக்குப் பிறகு நல்ல ஒரு டாமினேஷன். இரண்டு பெரும் தொடர் வெற்றிகள். கடந்த ஏழு க்ராண்ட்ஸ்லாமை இருவரும் பங்கு போட்டுக்கொண்டனர். ஆகப்பெரிய கொண்டாட்டம் தான். அது போல் இரண்டு பேரும் கோர்ட்டில் நட்பு பாராட்டிக் கொள்வது உவப்பாக இருக்கிறது. அவ்வளவு முதிர்ச்சி. தோள் கொள்கிறார்கள். போஸ்ட் மேட்ச் கான்பெரென்சில் கலாய்த்துக்கொள்கிறார்கள். ஆரோக்கியமான போட்டி. ஆனால் பெடரர், நடால், வாவ்ரிங்கா, முர்ரே போன்றோர் விளையாடும்போது ஒரு எலிகன்ஸ் இருக்கும். முதற் காரணம் பெடரர். அது இப்போது மிஸ்ஸிங். முரட்டு அடியாக அடிக்கிறார்கள். அது ஒரு சின்ன நெருடல். ஆட்டத்தின் சட்ட திட்டத்திற்கு உட்பட்ட எதுவுமே தவறு இல்லை தான். A form of evolution என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும். என்னமோ போடா மாதவா, நோக்கு வயாசியிண்டே இருக்கு பீல் தான்.
அதுபோல் இனொரு முக்கிய நிகழ்வு. முன்னணி ஆட்டக்காரர், Tsitsipaas முதல் ரவுண்டிலேயே வெளியேறினார். போட்டி முடிந்ததும் மிகவும் வெறுமையாக உணர்கிறேன் என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். காலுக்கு கீழ் எல்லாமே நழுவுவதைப் போல் உள்ளது என்று கூறியிருந்தார். அதற்கு பதிலுரையாக ஜோகோவிக், 'Tsitsipas வெறுமையாக உணர்வதை புரிந்து கொள்ள முடிகிறது என்றும், அவருக்குத் தேவையென்றால் எப்பொழுதும் நான் இருக்கிறேன். என்னைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறார். தன் போட்டியாளரின் விரக்தியை, துவண்ட மனநிலையை, ஒரு சக வீரராக எண்ணி ஆதரவுக்கரம் நீட்டிய இடத்தில் ஜோகோவிக் மட்டுமல்ல டென்னிசும் ஜெயித்திருக்கிறது.
#Wimbledon2025

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக