கலவையான விமர்சனம் காரணமாக பல நாட்கள் பார்க்காமல் இருந்தேன். படம் பார்த்த பின் ஏன் இவ்வளவு நாளாக பார்க்கவில்லை என்று தோன்றியது. நடிகராக மட்டும் இல்லை, ஒரு இயக்குனராகவும் தனுஷ் என்றுமே ஏமாற்றியதில்லை. பா பாண்டியில் தொடங்கிய ராஜ்கிரண் கெமிஸ்ட்ரி இங்கும் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. தன் தந்தைக்குப் பிறகு அவரின் இட்லி கடையை மீண்டும் எடுத்து நடத்தும் கதையாக இது தெரிந்தாலும், .ஒரு தந்தைக்கு மகனுக்குமான உறவை அழகாகச் சொல்லும் படமாகத்தான் இருக்கிறது.
படத்தின் ஆரம்பத்திலேயே ராஜ்கிரண் இறந்துவிடுகிறார், அவர் தனுஷுடன் உறவாடும் பல மான்டேஜ் காட்சிகள், விபூதியுடன் திரியும் கன்னுகுட்டி, கருப்புசாமி கோவில், தனுஷின் பால்யம் பேசும் panaromic ஷாட்ஸ் என ஒவ்வொன்றும் உருக்கம். பரோட்டா கடை மாரிச்சாமி, கயல் நித்யா மேனன், தொழிலதிபர் விஷ்ணுவாக சத்யராஜ், அஸ்வினாக அருண் விஜய் என அத்தனை பேர் சிறப்பாக நடித்திருந்தாலும் முருகனும் சிவநேசனும் தான் படம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறார்கள். அப்படி ஒரு எழுத்து. 'படிக்கிற பசங்க தான. காசை உள்ள வை. சாப்டுட்டு போட்டும்யா' என்று ராஜ்கிரண் சொல்வது இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ராஜ்கிரண் பாத்திரம் படம் முழுவதும் வந்திருக்கலாம்.
#dhanush #IdliKadai #Rajkiran #NithyaMenen #gvprakash

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக