திங்கள், நவம்பர் 13, 2023

ஜோசப் இடமருகு

 

நாம அதிகமா ரொமாண்டிசைஸ் பண்ணி வச்சிருக்கிறதுல ஒன்னு இந்த தாய்மை அப்படிங்கற சப்ஜக்டும் ஒன்னு. புனிதம், பேறு, அப்புறம் அந்த புள்ளைய வளக்குறதுக்கான டோட்டல் ரெஸ்பான்சிபிலிட்டிய அம்மாகிட்ட தள்றது. புள்ளை இல்லாதவங்கள ஒரு மாதிரி பாக்குறது. அது இதுனு இன்னும் நிறைய இருக்கு. சமீபத்துல வாசிச்சிட்டிருக்கிற ஒரு புத்தகம். இந்த கருத்த முன் வச்சி ஒரு தியரியை சொல்லிருக்கார்.



 
புத்தகத்தோட பேரு நான் சொல்ல விரும்பல. எழுத்தாளர் ஜோசப் இடமருகு அப்டினு ஒருத்தர் எழுதிருக்காரு. அவ்விட தேசத்துக்காரர். தமிழ்ல மொழிபெயர்த்துருக்காங்க.

 
விஷயம் என்னன்னா பெண்களை எப்படி இந்த தாய்மையை முன் வச்சி அடிமையாக்கினங்களோ, அதே மாதிரி சமையல் வேலையும் பெண்கள் கிட்ட போனது எப்படினு சொல்லிருக்கார். அவரு சொல்லிருக்கிறது கீழே.


தியரி ஆப் எவல்யூஷன்லேந்து இந்த புத்தகம் ஆரம்பிக்குது. நம்மள விடப் பெரிய ஆளுங்கள பாத்து எப்படி நாம பணிவாவும் பயந்த மாதிரியும் நடந்துக்கிறோமோ அந்த உணர்வுலேந்து ஆதி காலத்து மனிதன் கடவுள உருவாக்குறான். இயற்கை வழிபாடு முதல்ல ஆரம்பிச்சிருக்கு. அதுல ரொம்ப முக்கியமா நெருப்புக்கு ஒரு பெரிய இடம் இருந்துருக்கு. உணவை சமைச்சி சாப்பிடறதுக்கு உண்டான காரணத்தைக் காட்டிலும் குளிரிலேந்து தப்பிக்கிறது முக்கியமா விலங்குகள் கிட்டேருந்து தப்பிக்கிறது அப்டினு நெருப்பு ஒரு பெரிய அதிசயமா இருந்துருக்கு. அப்படிப்பட்ட அதிசயத்தை அவங்களால நினைச்ச நேரத்துக்கு வசப்படுத்த முடில. இப்போ இருந்தது மாதிரி தீப்பட்டியோ மாஸ் ஹீரோ நடந்து வந்தா பொறி பறக்குமே, அந்த மாதிரி வஸ்துலாம் அவங்ககிட்ட இல்ல. ரொம்ப கஷ்டப்பட்டு தான் நெருப்பை உருவாக்குறாங்க. உருவாக்கினவனும் அவங்களுக்கு பெரிய வித்தகன் தான். இப்போ இவ்ளோ கஷ்டப்பட்டு உருவாக்கினத பாதுகாக்கனும். தாய்மைங்கற பேருல குழந்தைகள பாத்துக்கணும் அப்டினு அல்ரெடி பெண்கள்லாம் வெளில வர்ரதில்ல. உருவாக்கின நெருப்பையும் பாத்துக்கோ அப்டினு கொடுத்திட்டு போய்டுறாங்க. அப்டியே உணவை சுடுறதுனு ஆரம்பிச்சு சமையல் வேலை அப்டினாலே பெண்கள் அப்படிங்கற பழக்கம் வந்திடுச்சு அப்டினு சொல்றார்.

 
இதே பிரின்சிபலை ஆபிஸ்ல ஏன் எல்லா இடத்திலேயும் பாக்கலாம். உதவின்னு நம்மகிட்ட வர ஒரு வேலைய செஞ்சு கொடுப்போம். அது ஒரு ரிக்கரிங் வேலையா இருந்துச்சுனு வச்சிக்கோங்க, அதுவும் நாம ஒன்னு ரெண்டு தடவ செஞ்சு கொடுத்துட்டோம்னா அவ்ளோதான். அப்டியே நம்ம தலைல கட்டிடுவாங்க. காரணம் மித்தவனுக்கு செய்யத்தெரியாது, செய்ய மாட்டான். நாம செஞ்சு கொடுத்ததுனால சுகம் கண்டுட்டான். பழியம் பாவமும் நம்ம மேல.

 
நூற்றாண்டுகளா பெண்களை அடிமையா வச்சிக்கிறதுக்கு பல தத்துவங்கள் உருவாகிக்கிட்டே தான் இருந்திருக்கு. ஜோசப் இடமருகுவின் கண்ணோட்டம் ஏத்துக்கிற மாதிரி தான் இருக்குது.

லியோ


ரஜினியோட படம் அப்டினு குடும்பத்தோட ஜெயிலர் படம் போனா வெட்டு குத்து ஆசிட்ல கரைக்கிறது அப்டினு பயங்கர வன்முறை. ரத்தக்களரி. இதுல ட்ரைலர் பாத்தா அவரு வம்படியா அத்தான்ன்ன்ன்ன் பெரிய வாளை எடுத்து வச்சிக்கிட்டு பிளடி ஸ்வீட்னு சொல்றாரு. இதனாலேயே தியேட்டர்ல போய் பாக்கறதுக்கு யோசிச்சிட்டே இருந்தேன். ஸ்கூல்ல peer பிரஷர் போல. பசங்க விடல. தீபாவளிக்கு முன்னாடி படத்த தூக்கிருவாங்களே அப்டினு ஊர்லேயே ஒரே ஒரு தியேட்டர்ல ஓடிட்ருந்த படத்தை புக் பண்ணி போய் பாத்தா...அவ்ளோ நாள் நம்ம எடுத்த முடிவு கரெக்டு தான் அப்டினு தோணுச்சு. 

நல்ல லொகேஷன். அழகா ஒரு பேமிலி. தோளுக்கு மேல வளர்ந்த ஒரு பையன். குட்டி பொண்ணு. த்ரிஷா. இதெல்லாம் வச்சிட்டு இப்டி ஒரு தெய்வ குத்தத்த பண்ணி வச்சிருக்காப்புல லோகி பாய். 



எனக்கு ஒன்னு புரியல. ஊரே கஞ்சாவை ஒழிக்க ட்ரை பண்ணிட்டு இருக்குது. லோகி பாயோட ஹீரோ என்னடான்னா சரக்க ஒரு ஊர்லேந்து இன்னொரு ஊருக்கு பத்திரமா கொண்டு போய் சேக்கிற கெட்டிக்கார கேரக்டர். அவரு சரக்க முழுக்க எப்போ அழிக்கிறார்னா நரபலிங்குற பேர்ல தன்னோட தங்கச்சியை கொல்லத் துணிஞ்ச அப்பாவ பாத்து காண்டாகி சரக்க எரிக்கிறார். படத்துல அவரு ஹீரோவா இல்ல வில்லனா தெரில. By far தி ஒர்ஸ்ட் கேரெக்டரைசேஷன் by லோகி. கதைக்குத் தேவையான சரக்க அப்டிங்கறத தப்பா புரிஞ்சிக்கிட்டார் போல. இவரு எடுக்குற கதை முழுக்க சரக்கு தான். கைதில சரக்கு. விக்கிரம்ல சரக்கு. மாஸ்டர்ல சரக்கு. ஆனா இந்த படங்கள்ல கொஞ்சம் கதை இருந்துச்சி. சென்டிமென்ட். எமோஷன்ஸ். எல்லாமே இருந்துச்சி. லியோல எதுவுமே ஒர்க் அவுட் ஆகல. விஜய் ஒருத்தர் தான் மெனெக்கெட்டு நடிச்சிருக்கார். கதையே இல்லாத படத்துக்கு அவ்ளோ உழைப்பு. அம்பது வயசு நெருங்குனாலும் ஆளு செம ஃபிட். அம்புட்டும் விழலுக்கு இறைச்ச நீர் மாதிரி ஆயிடுச்சு. 

ஆனா கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம அந்த ஹேர்ஸ்டைல எங்கேந்துடா பிடிச்சீங்க. புள்ளிங்கோ தலை மாதிரி இருக்குது. பிளாஷ்பேக் கெட்டப் ஓகே. தேவையே இல்லாத லிப் லாக் வேற. சங்கீதா மேடம் கோவப்பட்டது தான் மிச்சம். ஒரே ஒரு டுமீலு சீனுக்கு அனுராக் காஷ்யப் வேற பிளைட் பிடிச்சி வந்துருக்கார். விஜய் சேதுபதி மாதிரி மிஷ்கின். எல்லா படத்திலேயுமே மிஷ்கினாவே வரார். இதுல ஒரு பார்ட் டைம் கேரக்டர். அர்ஜுனுக்கு அவ்ளோ பில்டப். ஒண்ணுமே இல்லாம பண்ணிட்டாய்ங்க. இந்த ஜோஷ்யம் நரபலி சென்டிமென்ட் வச்சி எப்படி கூச்ச நாச்சமே இல்லாம இந்த கதையை சொன்னாரோ. அத கொஞ்சம் கூட யோசிக்காம எப்படி இவரு ஒத்துக்கிட்டாருனு தெரில. மல்டி ஸ்டார் போடறேனுட்டு ஊர் ஊருக்கு ஒரு பாட்டன் முப்பாட்டன கூட்டிட்டு வந்துடறானுங்க. அவனுங்க வேற ஸ்பைஸி ஷவராம சாப்பிட்டுட்டு கக்கா போற மாதிரி படம் முழுக்க கத்திக்கிட்டு (ஜெய்லர்லயும் சேத்துதான்). படம் முழுக்க சிகரட்டை எடுத்து பத்த வச்சிக்கிட்டே இருக்குறாங்க. 

இதுல என்ன ஒரு கூத்துனா, லியோ பாத்துட்டு வந்த ஒரு அலுவலக கோவொர்க்கர் கிட்ட படம் எப்பிடி இருக்கு. அடிதடி நிறையாவா அப்டினு கேட்டா 'அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. லைட்டா பைட்டு அவ்ளோதான்' அப்டின்னார். இப்போதான் புரியுது அவரை மதுப்பிரியர் மாதிரி விஜய் பிரியர் போல. படம் முழுக்க எடுத்து சொருவிட்டே இருக்கானுங்க. 

ரசிகர்களுக்காக ஒரு படம். ஓகேதான். ஆனா அவங்களையும் ஒரு மனுஷனா மதிக்கணுமா இல்லையா? கூறே இல்லாதவனா அவன். அரசியல் கட்சி தொண்டன் மாதிரி அவனும் எவ்ளோதான் முட்டு குடுப்பான். பட் அடுத்த வருஷம் அரசியல்ல இறங்கப் போற விஜய்க்கு இது நல்ல ஓப்பனிங் இல்ல. எப்படி எம்.ஜி.ஆர். செதுக்கினாரோ அது மாதிரி செதுக்கனும். 'டதுரா'லாம் வேலைக்கு ஆகாது.   

படத்துல எனக்கு பிடிச்ச ஒரே சீன். கௌதம் மேனன் மன்சூர் கிட்ட போய் சொல்லு சொல்லும்பாரு. அவரு சொல்றேன். ஆனா உனக்கு பயந்துக்கிட்ட்டோ இந்த சரக்குக்காகவோ சொல்லல. நான் மூணு நாள்ல செத்துடுவேன். அதுக்கப்புறேன் இத பத்தி பேச முடியாது. அதனால சொல்றேன் ' அப்டின்னுவாரு. அந்த லந்து தான் மன்சூர். 

அது என்ன LCU. பெரிய இன்டர்ஸ்டெல்லார் ரேஞ்சுக்கு பில்டப் வேற. கைதில வர கான்ஸ்டபிள் இங்க வராப்புல. விக்ரம் கமல் வாய்ஸ் கடைசில கேக்குது. இதுல என்ன LCU. கதையே கனெக்ட் ஆகல. ஒரு prequel, sequel, spinoff எதுவுமே இல்ல. அந்த படத்தோட கேரக்டர் இங்க வந்துட்டா அது சினிமாட்டிக் யூனிவெர்ஸா. முட்டாள் குரு கதை தான் ஞாபகம் வருது. அவரு ஒன்னு எடுத்தாராம். இவனுங்கள ஒன்னு கண்டுபிடிச்சாங்களாம். அந்த மாதிரி இருக்குது. 

தில்லி, விக்ரம், தாஸ் இவங்களுக்கெல்லாம் எப்படி இனிமே ஒரு கதையை ரெடி பண்ணி இவங்க எல்லாத்தையும் அதுல கனெக்ட் பண்ணி, எல்லாரும் சரக்க பத்திரமா கொண்டு போய் ரோலேக்ஸ்ட கை மாத்தி, அத வேற நாம நல்லாருக்குனு சொல்லி பாக்கணுமே அப்டினு நெனச்சாத்தான்...என் உச்சி மண்டைல டர்ருருருருருங்குது.

 

நல்லாருக்கும்போதே...

கடந்த வாரம் பேங்க் சென்றிருந்த சமயம். மதியம் மூன்று மணி இருக்கலாம். வேலை முடித்து வெளியே வந்தபோது ஒரு முதியவர் நின்று கொண்டிருந்தார். வயது எழுபதுக்கு குறையாமல் இருக்கும். நடையில் சிறிது தள்ளாட்டம் மற்றும் பார்வையில் ஒரு வெறுமை இருந்தது.

அந்த சமயத்தில் அந்த சாலையில் அவ்வளவாக போக்குவரத்து இல்லை. பெரியவரும் சாலையோரம் நின்று யாருக்கோ காத்து கொண்டிருந்தது போல் இருந்தது. அருகில் சென்று கேட்டபொழுது பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடுமாறு கூறினார். இரண்டு குழந்தைகள். இருவருமே வெளிநாட்டில். யாருமே உடன் வராமல் பேருந்தில் ஏறி சிரமப்படுவதற்கு பதில் ஆட்டோ எடுத்துக்கொள்ளலாமே என்பதற்கு

'நானே போய்ட்டு வந்துடலாம்னு பாத்தேன்ப்பா. கொஞ்சம் தலை கிர்ருங்குது' என்றார்.

இந்த உலகம் யார் யாராலோ இயங்கி கொண்டிருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும், ஒரு கட்டத்தில் பெற்றோர் இன்றி அருகில் குழந்தைகள் இன்றி தள்ளாட்டத்துடன் அந்த யாரோ ஒருவரின் உதவிக்காக காத்திருக்கும் கணம், நினைத்தாலே சற்று திகிலூட்டுவதாக இருக்கிறது. பாத்துக்கலாம் என்று மனது தைரியம் சொன்னாலும் உடல் ஒத்துழைக்குமா என்று தெரியவில்லை. 

நல்லாருக்கும்போதே...

 

 

உத்தம புருஷன்

யாரை வேணாலும் நம்பிடலாம் ஆனா பட்டையும் கழுத்துல கொட்டையும் போட்டுட்டு சுத்துறவன நம்ப முடியாது. மதத்தை பழிச்சி பேசுறேன்னு தூக்கிட்டு வரக்கூடாது. என்ன சொல்ல வரேனா நல்லவன் மாதிரி நடந்துக்கிறவன நம்புறது ரொம்பபபபத்தப்பு.

போன வாரம் கதை இது. போன்ல ஸ்டேட்டஸ் பாத்துட்டு இருந்த நேரம். சமீபத்துல ரிட்டையர் ஆன ஒருத்தர் ஒரு ஸ்டேட்டஸ் வச்சிருந்தார். ஏன் ரிட்டையர் ஆனவர்னு சொல்றேன்னா வயசு அறுபது ஆயிடுச்சுனு சொல்ல வரேன். ஸ்டேட்டஸ் என்ன வச்சிருந்தார்னா ஒரு ஹார்ட்டினலாம் போட்டு அவரு wifeக்கு மெசேஜ் வச்சிருக்கார். வெட்டிங் போட்டோஸ் லவ் கிவ்வு அது இதுனு ஏகப்பட்ட quotes. 2k கிட்ஸ் தோத்துரும். அந்த அளவுக்கு பொங்கிருந்தார். அத பாத்துட்டு இல்லாள் சொன்னது. சே. மனுஷன் எவ்ளோ உருகி உருகி காதலிச்சிருக்கார். இத்தனை வயசுலேயும் எவ்ளோ அன்பா இருக்கார் அப்டி இப்டினு. 

ஆனா கேட்ட எனக்குதான் தெரியும் இந்த பார்ட்டி எவ்ளோ பெரிய தகடு தகடு பார்ட்டினு. வேலைக்கு சேந்த புதுசுல அதாவது 1985 வாக்குல. பொழுதுபோக்கத்தான் ஒன்னும் பிரமாதமா ஏதும் கிடையாதே. அதனாலேயே ஒண்ணுக்கு ரெண்டா வச்சிட்டு திரிவங்களாம். வீட்டைத்தான் சொல்றேன். பெருசு ஒன்னு சிறுசு ஒன்னு. அதுலேயும் நம்ம ஸ்டேட்டஸ் பார்ட்டி வேற லெவல். அவரு ஆபிஸ் டேபிள்ள ஒரு கையடக்க நோட்டு. குறைஞ்சது இருபது முப்பது நம்பராவது இருக்குமாம். ஆபிஸ் நேரத்திலேயே பெர்மிஷன போட்டு இவரு பண்ண அளப்பரைலாம் அப்படி ரகம். ஆனா கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இல்லாம எப்படித்தான் இப்படி நடிக்கறாங்களோ தெரியல....உத்தம புருஷன்

கிரிக்கட் கமெண்டரி

முன்னெல்லாம் கிரிக்கட் கமெண்டரி இங்கிலீஷ்ல இருக்கும். சிலது புரியும். சிலது புரியாது. சில வார்த்தைகளாம் கேக்கவே நல்லாருக்கும். 

ஆனா அந்தந்த ஸ்டேட் லாங்குவேஜ்லேயும் கமெண்டரி ஆரம்பிச்சாங்க. தமிழ்ல எப்டிடா இருக்கப்போதுனு பாத்தா..ஆரம்பத்துல மசமசனு இருந்துச்சு. அப்படியே இங்கிலீஷ் தமிழ் டிரான்ஸ்லேட் பண்ண மாதிரி இருக்கும்.

அதுல நம்ம வாய்ச்சொல் வீரன் RJ பாலாஜி வந்தப்புறம் கொஞ்சம் களை கட்டுச்சு. கிட்டத்தட்ட அந்த டெம்ப்ளேட் கமெண்டரிய உடைச்சார்னு சொல்லலாம் 😉🤐. 

ரொம்ப நாள் கழிச்சி (ஒரு பத்து வருஷம்) இப்போதான் ஒரு லைவ் மேட்ச் பாத்தேன். கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த்லாம் பூந்து விளையாடுரார். ஒருமைல விளிக்கிறது ஆகட்டும், டேய் மாமா, மச்சான்னு சொல்றதாகட்டும்...இவங்க கமென்டரிக்காகவே திரும்பவும் கிரிக்கெட் பாக்கலாம் போல 🙆.

ஷாபி


கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள ஷாபி அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள நேர்ந்தது. ஷாபி ஒரு சித்தாள். ஐம்பது வயது மதிக்கத்தக்கவர். என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா? அவர் பகலில் சித்தாளாகவும் இரவில் ஒரு மொழிபெயர்பாளராகவும் இருக்கிறார். ஆச்சரியமாக இருக்கிறதா? இன்னும் ஆச்சர்யப்படுங்கள். 

அவரது தாய் மொழி மலையாளம். தட்டுத்தடுமாறி பத்தாவது வரை பள்ளிக்குச் சென்றவர் வறுமையின் காரணமாக மேலும் படிக்க முடியவில்லை. ஆனால் அவரின் தந்தையிடமிருந்து வாசிப்பு பழக்கம் அவரிடம் தொத்திக்கொண்டுள்ளது. எங்கு சென்றாலும் வாசிக்கிறார். எந்த நேரத்திலும் எல்லா கணங்களிலும் பேய் போல வாசிக்கிறார். இருபது வயதில் புனே பேக்கரியில் வேலைக்குச்சென்றவர் பிறகு ஒரு வருட காலத்தில் பெங்களூருவின் டீக்கடைக்கு வருகிறார். தனது வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை புத்தகம் வாங்கி வாசிப்பதற்கு செலவிடுகிறார். சு.ராவின் 'ஒரு புளியமரத்து கதையை' மலையாளத்தில் வாசிக்கிறார். அந்த இலக்கியத்தில் மயங்கி தமிழ் எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புகளை தேடித்தேடி வாசிக்கத்தொடங்குகிறார்.

அவரின் பார்வையில் தமிழ் இலக்கியம் பல புதிய பரிமாணங்களை அளக்கிறது எனவும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஓங்கி ஒலிப்பதாகவும் உணர்கிறார். மொழி பெயர்ப்பு மட்டுமல்லாமல் அதனின் உண்மையான ரசனையை உணர தமிழ் கற்றுக்கொண்டால் என்ன என்று முடிவு செய்து கடைக்கு வருவோர் போவோரின் தமிழை உற்றுக் கவனிக்கிறார். சில வார மாத இதழ்களை வாங்கி எழுத்து கூட்டி வாசிக்கிறார். நேரடி தமிழ் புத்தகங்கள் படிக்கும் அளவுக்கு தேர்ச்சி பெறுகிறார். பின்பு தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிற மொழிக்கிணங்க தான் படித்தவற்றை மலையாளத்தில் மொழி பெயர்க்கிறார். சோ.தர்மனின் 'கூகை' போன்ற முக்கியமான பல நாவல்களை மொழி பெயர்த்திருக்கிறார். என்ன தலை சுற்றுகிறதா? இதற்கே இப்படி என்றால்? தற்போது இவர் வெங்கடேசனின் காவல் கோட்டம் புத்தகத்தை மொழி பெயர்த்து கொண்டிருக்கிறார். 500 பக்கங்கள் முடிந்துவிட்டதாகவும் பாக்கி 600 பக்கங்கள் இருப்பததாகவும் கூறுகிறார். 

படித்து முடித்தவுடன் பிரமிப்பாக இருந்தது. ஏன்? சற்று கூச்சமும் கூட. எவ்வளவு சவுகரியங்கள் இருந்தும் நம்மால் சேர்ந்தாற்போல் இரு பக்கங்கள் வாசிக்க முடிவதில்லை. பாழாய்ப்போன வாட்ஸப்போ அந்துபோன ரீல்சோ நம்மை இழுத்துச் சென்று விடுகிறது. இப்படியான மனிதர்கள் தெரிந்து கொள்வது நம்மை நாமே பகுப்பாய்ந்து தெரிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பு என்று தான் கூறுவேன்.  

எளிய சாதனை மனிதர்களைத் தேடித்தேடி அடையாளம் கண்டு வெகு ஜன மக்களிடம் சேர்க்கும் வெ. நீலகண்டன் அவர்களுக்கும் நன்றி.

மத்தகம் 2




சீரிசோட முதல் எபிசோடுலேயே இவரு தான் வில்லன் இவரு தான் ஹீரோ அப்டினு சொல்லிடறாங்க. ரெண்டு பேருல யாரு ஜெயிக்க போறாங்க எப்படி ஜெயிக்க போறாங்க அப்படிங்கறது தான் சீரிஸ். முதல்ல அஞ்சு எபிசோட் ரிலீஸ் பண்ணாங்க. அஞ்சு எபிசோடுக்கு இதுல என்ன கதை இருக்க போகுதுனு பாத்தா அவ்ளோ டீடைலிங் இருந்துச்சு. கேங்ஸ்டர், அவங்க ஒவ்வொருத்தரையும் ப்ரெசென்ட் பண்ண விதம், லேடி SP, அந்த கானா பாடுற கஞ்சா வியாபாரி எல்லாமே அவ்ளோ தரம். அஞ்சு எபிசோடும் பயங்கர விறுவிறுப்பு. இதில முடிப்பாங்கனு பாத்தா வெயிட் பண்ணி அடுத்த நாலு எபிசோட் ரிலீஸ் பண்ணிருக்காங்க. செம க்ரிப்பிங் ஸ்டோரி ரைட்டிங். கதை முடிஞ்சிடுச்சுனு பாத்தா இனிமே தான் அந்த ரவுடியை ஆபரேட் பண்ற மெயின் கேங்ஸ்டர கண்டுபிடிக்க போறாங்க. த்ரில்லிங்கான ஒரு நல்ல நரேஷன் உள்ள வெப் சீரிஸ். அதர்வாவுக்கு பக்காவா பொருந்திப்போற ஒரு வேஷம். waiting for next season. Prasath Murugesan

 #Mathagam #mathagamonhotstar #PrasathMurugesan