யாராவது உங்களிடம், இதுநாள் வரை உனக்கு பிடித்த ஒரு பெருமைமிகு தருணம், நிகழ்ச்சி அல்லது மகிழ்வான ஒரு நாள் என்று கேட்டால் என்ன நினைவுக்கு வருகிறது?
ஆயிற்றா?
நீங்கள் மட்டும். அல்ல நானும். நாம் எல்லாரும். பெரும்பான்மையானோர் நினைவு கொள்வது என்பது மற்றவர் உங்களை பாராட்டும் தருணம் தான். மேடையேறி கைதட்டு வாங்கிய தருணம், பள்ளி கல்லூரியில் கிடைத்த பாராட்டு, ஆசிரியர், அலுவலக மேலாளர் பாராட்டியது, பெஸ்ட் எம்பிளாயி அவார்ட், குடும்பத்தில் உறவினர் மத்தியில் புகழப் பட்டது, சமைத்த உணவு, வரைந்த ஓவியம், எழுதிய கவிதை கட்டுரை அருமை என்று கூறியது இதுபோல் ஏதாவது ஒன்று தான் நம் ஞாபகத்தில் வரும். அதுதான் உங்களை என்னை எல்லோரையும் மகிழ்வடைய வைக்கிறது. Happy hormones சுரக்கும் தருணங்கள். நோயை நொடித்து வாழ்நாளை நீட்டிக்கும் தருணங்கள்.
நமக்குத் தெரியாமலேயே நம்மை அறியாமலேயே அந்த ஒரு goose bumps மோமெண்டுக்காக மட்டுமே நாம் நம் வாழ் நாள் முழுவதும் காத்துக்கொண்டிருப்போம். நமக்கான ஒரு பாராட்டிற்காக, அது கிடைக்குமா என்று தெரியாமலேயே ஏங்கிக் கொண்டிருப்போம்.
நமக்கு பிடித்த ஒன்றை நமக்கு பிடித்த முறையில் செய்துவிட்டு அடுத்தவர் பாராட்டிற்காக ஏங்கி நிற்க வேண்டிய அவசியம் என்ன?. என் சமையல், எனது வேலை, எனது படிப்பு, எனது கவிதை, எனது கதை, எனது கற்பனை, எனது படைப்பில் எனக்கு கிடைக்காத மகிழ்ச்சி ஏன் மற்றவர் பாராட்டி கிடைக்க வேண்டும்.
என்று நாம் அந்த ஏக்கதிற்கு, அடுத்தவரின் ஒப்புதலுக்கு விடை கொடுத்து நம்முடைய படைப்பில் ஒரு திருப்தி, மகிழ்வு, பரவசம் கொள்கிறோமோ அன்று தான் பிறப்பின் அதி உன்னதமான சுதந்திர உணர்வை அடைகிறோம்.
என்றென்றும் happy hormones தான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக