ஆறு ஏழு எட்டாம் வகுப்பின் ( CBSE ) வரலாற்று பாடப் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். நான் வரலாறு படிக்கும்போது கூட இதுபோன்று படித்ததாக நியாபகம் இல்லை. முக்கியமாக சமூக அநீதிகள்.
வாணிபம் நடத்த வந்து ஆட்சியைப் பிடித்தது எப்படி? ஆதிவாசிகள், பழங்குடியினர், ஒடுக்கப்பட்டவர்கள், மனிதக் கழிவை அகற்றும் manual scavengers, பெண்கள், சாதி ஏற்றத் தாழ்வுகள், சமுதாயப் புரட்சி, உடன்கட்டை ஏறுதல், மறுமணம், குழந்தைத் திருமணம், பெரியார், பிர்சா முண்டாவின் வாழ்க்கை என குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களும் அடிக்கடி நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டிய பொக்கிஷமாக இருக்கிறது. எங்கிருந்து வந்தோம், எவ்வளவு தடைகளைத் தாண்டி இங்கு இதனை இப்பொழுது செய்து கொண்டிருக்கிறோம்? எத்தனை முன்னோடிகள்? எத்தனை தியாகங்கள்?
பெரியார் பற்றி குறிப்பிட்டு இருந்ததினால் ஆசிரியர் குழுவில் தமிழர்கள் யாராவது இருப்பார்களா என்று தேடி பார்த்தால் ஒருவரும் இல்லை. பெரியாரின் வீரியம் அத்தகையது.
பிரமாதமாக இருக்கிறது. முக்கியமாக சமூக நீதி மற்றும் சுயமரியாதை எனும் இரு கோட்பாடுகளுக்கிடையில் நீந்திச்செல்லும் மீன்கள் போல இருக்கின்றன இந்த உள்ளடக்கங்கள். கிட்டத்தட்ட ஒவ்வொரு குழந்தைகளின் கையிலும் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு போல் இருக்கிறது இந்த புத்தகம்.
உரத்துக்கூறி பெருந்தீயாக மாற்றவேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கடமை.
செயல்படுத்துவோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக