அன்று அதுபோல் எதோ ஒரு காரணத்திற்காக பார்த்தபோது வலது காலின் பெருவிரல் மற்றும் இரண்டாவது விரலில் தோல் பழுப்பு மஞ்சளாக இருந்தது. அழுக்குதான் என்று காலை சோப் போட்டு கழுவினால் போகவில்லை. என்னவென்று தெரியவில்லை. மற்றுமொருமுறை அழுத்தி தேய்த்தும் ம்ஹும். போகவில்லை.
சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தது போல் கூகிளிடம் foot ஸ்கின் yellow கலர் என்று கேட்டால் அது கொடுத்த லிஸ்ட் பக்கென்றிருந்தது.
Calluses Fungal Infections Raynaud's Disease Anemia Jaundice Diabetes என்று வகைதொகை இல்லாமல் எல்லாவற்றையும் கூறியது. ஏண்டா பாதத்தை தூக்கி பார்த்தோம் என்பது போல் ஆகிவிட்டது.
நெட்டை ஆப் செய்துவிட்டு க்ளினிக்கிற்கு ஓடினேன். இப்பொழுது தான் வித விதமாக நோய் வருகிறேதே. தெனாலி போல் ஜெபிக்க பயம் என்று எல்லாம் பய மயம் தான். வெள்ளை எழுத்து வந்தால் எப்படி தூரமாக தள்ளி வைத்து படிப்பார்களோ அது போல் டாக்டர் ஒரு டார்ச்சை தூரமாக வைத்து பார்த்து விட்டு ஒரு கிரீமை சுழித்து சுழித்து எழுதி கொடுத்தார். காதல் கோட்டை ரசிகராக இருப்பார் போல. தொடாமலே காதல் என்பது போல் தொடாமலே வைத்தியம். அவர் சொன்ன கடையில் தான் வாங்க வேண்டும் என்ற ஒரு அன்பு கட்டளை வேறு.
சரியானால் போதும் என்ற மனநிலையில் வீட்டிற்கு வந்து செருப்பை கழட்டும் போது தான் பார்க்கிறேன், செருப்பின் முன் பகுதியில் மஞ்சள் கொட்டியிருக்கிறது. அதை கவனிக்காமல் இரண்டு நாட்கள் போட்டிருந்ததால் தான் இந்த Calluses Fungal Infections Raynaud's Disease Anemia Jaundice Diabetes போன்ற குழப்பங்கள். க்ரீம் 157ரூபாய். டாக்டர் பீஸ் ஒரு 150. போக வர கணக்கு என்று எல்லாவற்றையும் சேர்த்தால் 350தோராயமாக இருக்கும். வீண் வெட்டிச்செலவு.
ஆக, எதுவானாலும் சொல்யூஷன் சிம்பிளாகத்தான் இருக்கிறது. நாம் தான் ஓவர் காம்ப்ளிகேட் செய்து கொள்கிறோம் போல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக