அது என்னவோ தெரியல. கண் கெட்ட பிறகு தான் சூரிய நமஸ்காரம்னு சொல்லுவாங்க இல்லையா?. அது மாதிரி ரிட்டயர் ஆன பிறகு தான் எல்லாரும் சொல்லிவச்ச மாதிரி ‘வேலை வேலைனு இருக்காதீங்க. கொஞ்சம் குடும்பத்தையும் கவனிங்க’ அப்டினு ஒரே மாதிரி டயலாக்.
எனக்கு தெரிஞ்சே பல பேரு ரிட்டயர் ஆன பிற்பாடு குடும்பத்துல பெர்பெக்டா தோத்து போறதை பாத்திருக்கேன். ஒருத்தர் பதவி பதவினு ஆஃபிஸ்லேயே பழியா கிடந்தார். காலைல ஏழு மணிக்கு ஆபீஸ் கார் வந்திரும். ஏறி ஆஃபிஸ் வந்தாருனா நைட்டு ஒன்பது மணிக்கு தான் வீட்டுக்கு கிளம்புவார். ஆறு நாளும் இதே கூத்து தான். அஸ்பைரிங்க் கேரியர் அது இதுனு ஓடி ஓடி ரிட்டயர் ஆகுறதுக்கு ஒரு மாசம் தான் இருந்துச்சு. அந்த ஒரே மாசத்துல பதினஞ்சு நாள் கேப்புல அவரோட அம்மாவையும் மனைவியையும் அடுத்தடுத்து பறிகொடுத்தார். கோலாகலமா நடக்க வேண்டிய ரிட்டயர்மண்ட் பங்ஷன் நடக்கவே இல்ல. அவ்ளோ ஏன் இவரால ஆபீஸ் போய் கூட ரிலீவிங்க் லெட்டர் வாங்க முடியாத நிலைமை.
இன்னொருத்தர். செம ஜாலி டைப். விட்டுனா விட்டு அந்த அளவுக்கு காமெடி பண்ணிட்டே இருப்பார். வயசு அறுபதுனாலும் முப்பது வயசு ஆளுங்க அளவுக்கு தர லோக்கலா ஓட்டுவார். ரிட்டையர்மண்ட் ஆச்சு. ஒரே வாரம் தான். ஆளு சூசைட் அட்டம்ப்ட். பத்து நாள் கழிச்சி பிழைச்சிகிட்டார். காரணம், சேர்ந்தாப்புல ரெண்டு மூணு மணி நேரம் வீட்டுல வைஃப் கூட குடும்பம் நடத்த முடியலை. காலைல ஏழு மணிக்கு ஓடி வந்து இங்கேயே கேண்டீன்ல சாப்பிட்டு, மதியம் கேண்டீன் அப்டியே நைட்டு எட்டரை வரைக்கும் ஆஃபிஸ்லேயே ஒட்டி நாப்பது வருஷத்தை கழிச்சிட்டார். போதா குறைக்கு ஞாயித்துகிழமையும் அரை நாள் வந்துர வேண்டிது. எங்கேந்து வீட்டுல இருக்குறவங்களை புரிஞ்சிக்கிறது?
இப்போல்லாம் பரவாயில்லை. கொஞ்சம் பிட்னஸ் விழிப்புணர்வு இருக்குது. கொஞ்சம் வயசானுவங்களை, நமக்கு முந்தின ஜெனெரேஷன பாத்தா தெரியும்? வீட்டாம்பளைங்க வெளில வேலைக்கு போறதுனால ஓரளவு ஸ்ட்ரெஸ் குறைஞ்சிடும். அப்டியே வாக்கிங். பிரேண்ட்சோட அரட்டை. ஏன் டீக்கடை முக்குல நின்னு பேசுறதுலேயே எல்லா டென்ஷனும் ஓடிருது. ‘நான்லாம் காலைல எந்திரிச்சி வாக்கிங் போய்டுவேன்’ அப்டினு சொல்ற எத்தனை பேர் தன்னோட மனைவி உடற்பயிற்சி, யோகா, விளையாட்டு குறைந்தபட்சம் வாக்கிங் போறதை உறுதி செய்றாங்க?. ம்ஹும். பண்றது இல்லை. ஏன்னா காலைல சமைக்கணும், குழந்தைங்களை கிளப்பனும், வீட்டை சுத்தமா வச்சிக்கணும் இது எல்லாத்துக்கும் அவங்க ஓடா தேயனும். இந்த மாதிரி மோனோடோனஸான ரொட்டின் வாழ்க்கைல உடல் நோய் மற்றும் மன அழுத்தம், முட்டிக்கால் முழங்கால் வலினு சோர்ந்து போய்டுறாங்க. குழந்தைங்க அனுவல்டே, ஸ்போர்ட்ஸ்டேக்கு கூட போகாத ஆண்கள் இங்கு அதிகபட்சம். வேலையெல்லாம் முடிச்சி திரும்பி வந்து பாக்கும்போது பட்டாம்பூச்சிகள் வீட்டுல இருக்காது. பறந்து போயிருக்கும்.
வேலை பாக்குறது தப்பில்லை. எதை இழந்து எதை வாங்குறோம் அப்டிங்கறதுல தான் விஷயம் இருக்கு? உடல் மன நலன் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்.
சுவர் இருந்தாத்தான் சித்திரம் வரைய முடியும்.
இங்க சுவர்னு நான் சொல்ல வர்றது மனைவியை. Please take care.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக