புதன், ஜூன் 18, 2025

வாரமலர்

வாரமலர் வார இதழில் அன்று முதல் இன்று வரை இம்மி பிசகாமல் ஒரே டெம்ப்ளேட்டில் வருவது 'இது உங்கள் இடம்' என்று வாசகர்கள் அனுப்பும் மூன்று குட்டி கடிதங்கள். இப்படிச் செய்யலாமே, அப்படிச் செய்யலாமே, முயன்று பார்க்கலாமே, மனதிற்கு வருத்தம் அளிப்பதாய் இருந்தது போன்ற வகையறாவில் இருக்கும். பல வருடங்களாக படித்து வருகிறேன். கிரிஞ்சாகவும் இருக்கும். ஆனால் ஒரு சுவாரஸ்யம் உண்டு. நிற்க.

கடந்த மாதம் மருத்துவமனை சென்றபோது ஒரு விஷயத்தை கவனிக்க முடிந்தது. அதை வாரமலர் 'இது உங்கள் இடம்' பாணியில் எழுதினால் என்ன என்று தோன்றியது.




சொம்மா ஒரு வம்புக்கு.
'இரண்டு மூன்று நாட்கள் கடந்தும் உடல் நிலை சரியாகாத காரணத்தால் மருத்துவமனையில் உள் நோயாளியாக இருக்க நேரிட்டது. செவிலியர் கூடவே இருந்து முழு அக்கறையுடன் கவனித்துக் கொண்டார். அவர் பெயர் அன்பு. பெயருக்கேற்றார் போல் அன்போடு கவனித்து கொண்டார். அடுத்த நாள் டிஸ்சார்ஜ் ஆகும்பொழுது தான் கவனித்தேன். அவரது இயற் பெயர் அன்பு இல்லை. மருத்துமனை வளாகத்துக்குள் அவரது பெயர் அன்பு. அது போல் மற்ற செவிலியர்களுக்கும் வெவ்வேறு பெயர்கள். அமைதி, ஆரோக்யம், மகிழ்ச்சி, வெற்றி என்று வைத்திருந்தார்கள். நோய் வாய்ப்பட்டு மருத்துவமனையில் குணமாகிக் கொண்டிருக்கும் வேளையில் இதுபோன்ற நேர்மறை சொற்கள் கேட்பது உடலுக்கும் மனதிற்கும் மகிழ்ச்சியாகவும் புத்துணர்வு ஊட்டுவதாகவும் இருந்தது. மற்ற மருத்துவமனைகளிலும் இதனை முயற்சித்து பார்க்கலாமே'.
செல்வி, கோபிச்செட்டிப்பாளையம்

கருத்துகள் இல்லை: