புதன், ஜூன் 18, 2025

உடல் நலம்

பேமிலி டாகடர்னு முன்னாடி ஒரு கான்சப்ட் இருந்துச்சு. பரம்பரையா தெரிஞ்சி வச்சிருப்பார். ஏதாவது ஒரு நோவுனு போய் நின்னா, அப்பா தாத்தா வரைக்கும் யோசிச்சி அலர்ஜியெல்லாம் ஞாபகப்படுத்தி ஒரு மருந்து கொடுப்பார். கிட்டத்தட்ட அவரு தான் குலசாமி ரேஞ்சுக்கு இருக்கும்.

பஞ்சம் பொழைக்க இப்போல்லாம் ஊரு விட்டு ஊரு வந்து பேமிலி டாக்டர் கான்செப்ட் அடியோடு காலி. ஒரு இடத்துல குத்த வச்சி உக்காந்தா தான. அதுலயும் FB, ட்விட்டர், யூட்யூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டா ரீல்ஸ், வாட்சப் பார்வர்ட் வந்தப்புறம் யாரை நம்புறதுனே தெரில. எல்லா பயலுவளும் திருடன் மாதிரி தான் தெரியிறாங்க. சமயத்துல நமக்கே நம்ம மேல நம்பிக்கை இருக்குறது கிடையாது. இந்த ரேஞ்சுல எங்கேந்து ஒரே டாக்டர்ட போய் எல்லாத்தையும் சொல்லி மெயின்டெய்ன் பண்ண முடியும்?
சொல்ல வந்த விஷயம் என்ன அப்படினா, உடம்பு சரியில்ல அப்டினு டாக்டர் கிட்ட போனா என்ன கேப்பாரு ஞாபகம் இருக்கா?
என்ன சாப்டீங்க? நைட்டு சரியா தூங்கினீங்களா? யூரின் மோஷன் சரியா போகுதா? இவ்ளோதான் அவர் கேள்வி. அதுக்கான பதிலை வச்சி தான் சிகிச்சை மருந்து மாத்திரை எல்லாம்.



சோ, பேசிக். அதான் முக்கியம். எழுந்திருச்சி ஒழுங்கா காலைக்கடனை கழிச்சிட்டு பசிக்கும்போது சாப்பிட்டு, தூக்கம் வரும்போது தூங்கி எழுந்திருக்கிற அந்த ஒழுக்கம் நம்மகிட்ட இருக்கானு கேட்டா, இல்லை. கேட்டா காரணம் ஆயிரம் வச்சிருப்போம். குழந்தை, வேலை, மேனேஜர், நெட்பிலிக்ஸ், வெப்சீரிஸ், ஸ்ட்ரெஸ் ஈட்டிங் etc etc. ஸ்ட்ரெஸ் அப்புறம் டென்ஷன் இல்லாத மனுஷங்களே இங்க இல்லை. அவ்ளோ அள்ளி போட்டுக்குறோம் உள்ளுக்குள்ள. எதுக்கு இவ்ளோ?
சாப்பாடு, தூக்கம், கழிவுக்குப் பிறகு கொஞ்சம் உடற்பயிற்சி. முதுகுல வேக்குற அளவுக்கு ஒரு பயிற்சி. குறைஞ்ச பட்சம் வாக்கிங். முடிஞ்ச அளவுக்கு எட்டு மணிக்கு மேல சாப்புட்றத அவாய்ட் பண்றது ஒரு நல்ல விஷயம்.
பறவை மாதிரி ஆறு மணிக்கு வெளில போயிட்டு சூரியன் மறையும்போது கண்ணை மூடிடனும். ஆனா 24 மணி நேரமும் பூரா பக்கம் லைட்ட போட்டு வச்சிக்கிட்டு, டோட்டல் ஹெல்த் டேமேஜ். இந்த காலகட்டத்துல, தேவைகள் எதிர்பார்ப்புகள் அதிகமாகி இருக்குற ஒரு சூழ்நிலைல நேரத்துக்கு தூங்கி எழுந்து சாப்பிடறதுங்கிறது கஷ்டம் தான். ஆனா வேற வழி இல்லை. நம்ம உடம்பை நாம தான் பாத்துக்கிட்டு ஆகனும். இதைத் தாண்டி தான் மத்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரணும்.
வீட்டுல ஒரு ஆளு படுக்கைல விழுந்துட்டா அவரை சுத்தி சுத்தி பாக்குறவங்களுக்கு தெரியும் அதோட வேதனை. அதே போல சொசைட்டி. பேமிலி மாதிரி அது கொஞ்சம் பெரிய பேமிலி அவ்ளோதான். நாம நல்லாருக்கணும். குடும்பம் நல்லாருக்கணும். அப்புறம் நாம சார்ந்து இருக்குற சொசைட்டி.
வாழுற நாட்கள் முழுசும் நடமாட்டிட்டு போறது தான் முதல் குறிக்கோள்.
பசித்து புசித்து படுத்து உறங்கி நல்லாருப்போம். நல்லாவே இருப்போம்.

கருத்துகள் இல்லை: