புதன், ஜூன் 18, 2025

RRR மேகிங்

RRR மேகிங் டாக்குமெண்டரி பார்த்த பின்பு இன்னும் ஒரு முறை பார்க்கலாம் என்று தேடியதில் நெட்பிளிக்சில் ஆங்கில மொழி மட்டும் கிடைத்தது. மாமாவுக்கு அவ்வளவு வெறி என்பது போல் ஆங்கிலத்திலேயே பார்த்தாகிவிட்டது. வேற்று மொழியில் பார்க்கும்போதும் எமோஷனில் கொஞ்சமும் குறைச்சல் இல்லை. கூடவே ஆக்ஷன் காட்சிகளும் மீண்டும் அதகளம். சென்டிமென்ட் என எல்லா ஏரியாவும் எப்படி சிக்சர் அடித்தார் என்று யோசிக்கும்போது தான் டாக்குமெண்டரியில் ராஜமௌலி கூறிய ரகசியம் ஞாபகம் வந்தது. எந்த ஒரு உணர்வு, நட்பு காதல் கோபம் பழி வாங்குதல் என எது என்றாலும் அதை எப்படி ஆக்ஷன் காட்சிகளாக மாற்றுவது என்று தான் யோசிக்கிறார். நம் உள்ளிருக்கும் ஹீரோவை உணர்வுப்பூர்வமாக வெளிக்கொணரும் அந்த நொடி தான் ராஜமௌலியின் வெற்றி மொழியாக இருக்கிறது. படம் பார்க்கும் நேரம் முழுவதும் அதே நொடி தான் பீறிட்டு நிற்கிறது. அதுவே வெள்ளையர்களை ஸ்டேஜில் ஆட்டம் போட வைத்திருக்கிறது.




கருத்துகள் இல்லை: