RRR Behind & Beyond
இந்த டாக்குமெண்டரி RRR உருவான விதத்தை பேசுகிறது. மௌலி எந்த எமோஷனையும் ஆக்ஷன் சீக்வன்சாக எடுக்க ஆசைப்படுகிறார். உதாரணமாக fire மற்றும் water என்று இரு கேரக்டர்களை அறிமுகப்படுத்தியாச்சு. இருவரும் முதல் முறை சந்திக்கும் ஒரு சீன். சாதரணமாக காஃபி ஷாப்பில் சந்திக்க வைக்க முடியும். ஆனால் அதை நான் விரும்பவில்லை. அந்த ஆக்ஷன் சீன் தான் இருவரும் சந்தித்துக்கொள்ளும் பிரிட்ஜ் சீன். Miniature CG set green mat எனப் பல உத்திகளை கையாண்டு ஒரு மாதத்திற்கு மேல் எடுத்திருக்கிறார்கள். எத்தனை பேர் எத்தனை குழுவாக அதற்கு உழைத்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் போதே பிரமிப்பாக இருக்கிறது.
உச்சமாக LA இல் உள்ள சைனீஸ் தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஸ்டேஜில் நாட்டு நாட்டு பாடல் ஆடியதெல்லாம் அமெரிக்கா வரலாற்றிலேயே இல்லை. அப்படி ஒரு கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது.
இதுவரை நான் எடுத்திருக்கும் பன்னிரெண்டு படங்களில் எந்த ஒரு சீனையும் எடுக்க முடியாமல் போகுமோ என்று சந்தேகப்பட்டதே இல்லை. என் கதையின் மேல் மற்றும் என் மேல் உள்ள நம்பிக்கையை நான் என்றுமே இழ்ந்ததில்லை என்கிறார் மௌலி.
வாழ்க்கைக்கான பாடம் இது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக