புதன், ஜூன் 18, 2025

பகீரா 2024


2023 இல் வந்த பிரபு தேவா பகீராவுடன் இதை குழப்பிக் கொள்ள வேண்டாம்.
2024 இல் வந்த கன்னட மொழிப் படம். நேர்மையாக உதவி செய்ய முடியாத போலீஸ் ஆஃபிசர், ஒரு சூப்பர் ஹீரோ அவதாரம் எடுத்து அசுரர்களை வதம் செய்தால், அதுவே பகீரா.



படம் முழுக்க ஶ்ரீ முரளி தான். 43 வயதில் நல்ல உடல்கட்டுடன் படம் மொத்தத்தையும் தாங்கியிருக்கிறார். கிராஃபிக்ஸ், மேக்கிங், ஸ்டைல் என்று எதிலுமே குறையில்லை. கிட்டத்தட்ட ஒரு ஹாலிவுட் படம் பார்த்த ஃபீல். வெறும் சூப்பர் ஹீரோ என்று மட்டுமல்லாமல் ஒரு நல்ல கதையுடன் சொல்லியிருக்கிறார்கள்.
தேடிப் பார்த்தால் கதை எழுதியிருப்பது பிரஷாந்த் நீல். கேஜிஎஃப் இயக்குனர். வீக்கெண்டிற்கு ஒரு நல்ல வாட்ச்.
நெட்பிளிக்ஸ் ஒடிடி தளம்

கருத்துகள் இல்லை: