புதன், ஜூன் 18, 2025

Girls will be Girls (18+)


பெண்மை மொழி பேசும் கமிங் ஆப் ஏஜ் ஜானரில் வெளிவந்திருக்கும் படம்.
வளரிளம் பருவத்தில் இருக்கும் பெண் தன்னிடம் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான மாற்றங்களை எவ்வாறு எதிர்கொள்கிறாள் என்பதை பொதுச்சமூகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் உணர்வுபூர்வமாக கையாண்டிருக்கிறது இந்த Girls will be Girls திரைப்படம்.



வளரிளம் பெண்ணாக ப்ரீதி பனிக்ரஹி. கொஞ்சம் பிசகினாலும் ஜானர் மாறிவிடும் இந்த கதையை இயக்குனரின் செவ்விய படைப்பாக மாற்றியதில் பெரும் பங்கு ப்ரீத்திக்கு. பெண்மை, பேரார்வம், பாலுணர்வு, கட்டுக்கடங்காத கோபம், முறுக்கப்பட்ட பொறாமை, வெறுப்பு, ஏமாற்றம் மற்றும் இறுதியில் ஆறுதல் எனப் பல உணர்வுகளை அனாயாசமாக கடத்தி இருக்கிறார் ப்ரீதி. அதுபோல், கதையின் வீரியம் கருதி ஷூட்டிங் ஸ்பாட்டில்பெண்கள் பாதிப்பாக உணரும் பொருட்டு, டெக்னீசியன்கள் பலரை பெண்களாக இயக்குனர் டலாட்டி நியமித்திருக்கிறார். கொசுறு செய்தி. பிரீதியின் அம்மாவாக வரும் கனி நடித்த ‘all we imagine as light’ கேன்ஸ் விருதை தட்டி வந்திருக்கிறது.
Girls will be Girls திரைப்படமும் பல சர்வதேச விருதுகளை அள்ளி வந்திருக்கிறது.
பிரைமில் கிடைக்கிறது

கருத்துகள் இல்லை: